Published:Updated:

நீலகிரி: க்ராலுக்குள் முட்டி மோதும் உடைந்த கொம்பன்! - 24 மணி நேரமும் கண்காணிக்கும் வனத்துறை

உடைந்த கொம்பன்
உடைந்த கொம்பன்

சேரம்பாடியில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட 'உடைந்த கொம்பன்' காட்டுயானையை க்ரால் எனப்படும் பிரத்யேக மரக்கூண்டில் வெள்ளிக்கிழமை இரவு அடைத்தனர். ஆக்ரோஷம் குறையாத அந்த யானை, க்ராலிலிருந்து வெளியேற முட்டி மோதிவருகிறது.

நீலகிரி மாவட்டம், பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் தந்தை, மகன் உள்ளிட்ட மூன்று பேரைக் காட்டுயானை ஒன்று தாக்கிக் கொன்றது. உள்ளூர் மக்களால் `உடைந்த கொம்பன்’, `ஷங்கர்’ ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டுவந்த இந்த ஆண் காட்டுயானையே இவர்களைத் தாக்கியிருக்கிறது என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

உடைந்த கொம்பன்
உடைந்த கொம்பன்

,மேலும் இந்த யானை மனிதர்களைத் தாக்கும் சுபாவம்கொண்டதாக அறிவிக்கப்பட்டு, யானையைப் பிடிக்கும் முயற்சியில் கடந்த டிசம்பர் மாதத்தில் வனத்துறையினர் உள்ளிட்டோர் களமிறங்கினர்.

இரண்டு மாதங்களாகப் போக்குக் காட்டிவந்த யானையை, மிகுந்த சவால்களை எதிர்கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை மதியம் சேரம்பாடி வனப்பகுதியில், துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர்.

காட்டுயானை
காட்டுயானை

பிடிபட்ட காட்டுயானையை முதுமலையிலுள்ள அபயரண்யம் வளர்ப்பு யானைகள் முகாமுக்குக் கொண்டு வந்தனர். காட்டுயானைகளை அடைக்க வழக்கமாகப் பயன்படுத்தப்படும் க்ரால் எனும் பிரத்யேக மரக்கூண்டில் வெள்ளிக்கிழமை இரவே அடைத்தனர்.

நீலகிரி: அரை மயக்கத்திலும் ஆக்ரோஷம் குறையாத `உடைந்த கொம்பன்’ - நள்ளிரவு வரை நீடித்த போராட்டம்!

க்ராலில் சிறைப்பட்டுக் கிடக்கும் இந்த யானை, க்ராலைவிட்டு வெளியேற இடைவிடாமல் முயன்றுவருகிறது. இதனால் 24 மணி நேரமும் இந்த யானையைக் கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

யானை
யானை

இந்த யானை குறித்து நம்மிடம் பேசிய வனத்துறைப் பணியாளர் ஒருவர்,``அரை மயக்கத்துல உள்ளே அடைக்கும்போதே ரொம்ப ஆக்ரோஷமா இருந்தான். நம்ம கும்கிகளே இதைப் பார்த்து மெரண்டுடுச்சுங்க. மயக்கம் தெளிஞ்சது முதலே வெளிய வர்றதுக்கு ட்ரை பண்ணிக்கிட்டே இருக்கு. க்ரால முட்டி மோதிக்கிட்டு இருக்கு. தண்ணியப் பக்கத்துலவெச்சிருக்கோம். பசுந்தழைகளையும் கொடுக்குறோம். இன்னும் ஆக்ரோஷம் குறையாம இருக்கு. க்ரால் பலவீனமாகாம பார்த்துக்கிட்டு, 24 மணி நேரமும் கண்காணிச்சிக்கிட்டே இருக்கோம்"என்றார்.

அடுத்த கட்டுரைக்கு