Published:Updated:

`நியூயார்க்கில் பூனைகளுக்குக் கொரோனா!’ - விலங்கியல் நிபுணர்கள் சொல்வது என்ன?

பூனை
பூனை

``பூனைகளுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் சூழலில், செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள் பதற்றம் அடையத் தேவையில்லை”

உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 26.50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்படைந்துள்ளனர். மேலும், 1.80 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்த வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். மனிதர்களை மட்டுமே பாதிப்பிற்கு உள்ளாக்கி வந்த இந்தக் கொரோனா வைரஸானது தற்போது விலங்குகளையும் பாதித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், விலங்கு ஆர்வலர்கள் உட்பட பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

பூனை
பூனை

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில், வீட்டில் வளர்க்கும் இரண்டு பூனைகளுக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவற்றிற்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வீட்டில் வளர்த்து வந்த இரு பூனைகளுக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது பற்றி கருத்து தெரிவித்துள்ள அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம், ``கொரோனா வைரஸ் தொற்றால் லேசான சுவாசப் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் பூனைகள் விரைவாகக் குணமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீடுகளில் உள்ளவர்கள் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ளவர்களால் இந்தப் பூனைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம்” என்று தெரிவித்துள்ளது.

`380 பேருக்குக் கொரோனா தொற்று; 77 சிவப்பு மண்டலங்கள்!' -ரத்து செய்யப்பட்ட அமர்நாத் யாத்திரை

இதுதொடர்பாக அமெரிக்காவின் தொற்றுநோய் நிபுணரான அந்தோணி ஃப்பெளசி பேசுகையில், ``சில விலங்குகள் மக்களிடமிருந்து வைரஸைப் பெற்று நோய் தொற்றுக்கு உள்ளாக முடியும் என்ற நிலையில் இருந்தாலும், வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளால் மனிதர்களுக்கு வைரஸ் பரவுவதற்கான அறிகுறிகள் இல்லை. உயிரியல் ரீதியாகச் செல்லப் பிராணிகளிடமிருந்து மனிதர்கள் வைரஸைப் பெறுவது சாத்தியமற்றது. மேலும், தொற்றுநோயியியல் நிலைபாட்டிலிருந்து பார்த்தாலும் கூட, இதற்கான எந்த ஆதாரமும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் பணிபுரியும் மனித-விலங்கு சுகாதாரத் தொடர்புகளைப் பராமரித்து வரும் கேசி பார்டன் பஹ்ரவேஷ் என்பவர் வீட்டில் வளர்க்கக் கூடிய பூனைகளுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் சூழலில், செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள் பதற்றம் அடையத் தேவையில்லை என்றும் தங்களின் வீடுகளில் வளர்க்கக் கூடிய செல்லப் பிராணிகளுக்கு விரைவில் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனா
கொரோனா

மேலும், அவர், ``மக்கள் செல்லப் பிராணிகளைப் பற்றி பயம் கொள்வதை நாங்கள் விரும்பவில்லை. கொரோனா வைரஸை மனிதர்களிடம் பரப்புவதில் செல்லப் பிராணிகள் பங்கு கொள்கின்றன என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும், செல்லப் பிராணிகளை வளர்ப்போர் அவற்றை தங்கள் வீடுகளுக்கு வெளியே உள்ள மனிதர்களிடமும், விலங்குகளிடமும் தொடர்பு வைத்துக் கொள்ளாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்” என நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் பரிந்துரைப்பதாகவும் கூறினார்.

விலங்குகளுக்கான கொரோனா பரிசோதனைக் குறித்து பேசிய பெஹ்ரவேஷ், ``விலங்குகளுக்கான கொரோனா பரிசோதனை கால்நடை ஆய்வகங்களில் நடைபெற்று வருகிறது. மனிதர்களுக்குக் கொரோனா பரிசோதனை செய்யப் பயன்படுத்தும் வேதிப் பொருள்களிலிருந்து விலங்குகளுக்கு மேற்கொள்ளும் பரிசோதனைகளில் அவை வேறுபடுகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸால் ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் அவற்றுக்கான பற்றாக்குறை நிலவுகிறது” என்றும் குறிப்பிட்டார்.

வீட்டில் வளர்க்கக் கூடிய பூனைகளுக்குக் கொரோனா தொற்று எற்பட்டிருப்பது பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்கக் கால்நடை மருத்துவச் சங்கம், ``தற்போது நிலவும் இக்கட்டான சூழலில், செல்லப்பிராணிகள் மற்றும் மக்களுக்கு ஒவ்வொருவரின் ஆதரவும் தேவைப்படும் சூழல் உள்ளது” என்று கூறியுள்ளது. இது குறித்துப் பேசிய அச்சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவரான ரூனி, ``கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் விஞ்ஞானிகள், கொரோனா வைரஸ் தொற்றில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான தொடர்பைக் கவனித்து வருகின்றனர். வீடுகள், பண்ணைகள் மற்றும் பிற இடங்களில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான சாத்தியக் கூறுகளைக் கண்டறிய விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர்” என்றார். மேலும், கால்நடைகள் மற்றும் கோழிகளில் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பதையும் அவர் குறிபிட்டார்.

புலி
புலி
Representational image

இந்நிலையில், பாதிப்புக்கு உள்ளான இரண்டு பூனைகளும் நியூயார்க் மாகாணத்தின் வெவ்வேறு பகுதிகளில் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பூனைகளில் ஒன்றின் உரிமையாளர் முன்னர் கொரோனா பரிசோதனை செய்துக் கொண்டதில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், மற்ற பூனை எந்த வகையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கக்கூடும் என்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உலக அளவில், நியூயார்க்கின் இரண்டு பூனைகள் உட்பட, பெல்ஜியத்தின் பிராங்க்ஸ் மிருகக் காட்சி சாலையில் உள்ள 5 புலி மற்றும் 3 சிங்கங்களுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியக் கொரோனா நோயாளிகளில் 80% பேர் அறிகுறிகளற்ற ஏசிம்ப்டமடிக்... ஏன், என்ன, எப்படி? #VikatanExplainer
அடுத்த கட்டுரைக்கு