Published:Updated:

சேவலுடன் வாக்கிங் செல்லும் சென்னைப் பெண்!

சேவலுடன் வாக்கிங்
சேவலுடன் வாக்கிங்

கூண்டுக்குள் செளகர்யமாக இருந்த லவ் குமார் வெளியே வந்ததும், தேவிகாவின் பாதங்களைச் செல்லமாகக் கொத்தினான். இதுதான் கோபத்தின் வெளிப்பாடாம்!

'என்னது, சேவலோடு வாக்கிங்கா!' என்ற வியப்போடுதான் சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசிக்கும் தேவிகா கிருஷ்ணனின் வீட்டுக்குச் சென்றேன். தேவிகாவின் வீட்டு வாசலில் படுத்திருந்த பூனை வெல்கம் தொனியில் `மியாவ்' என்றது. அழைப்பு மணி அடிப்பதற்குள், மியாவ் ஒலியைக் கேட்டுவிட்டு கதவைத் திறந்து இன்முகத்தோடு நம்மை வரவேற்றனர் தேவிகாவும் அவர் கணவர் கிருஷ்ணனும். வீட்டுக்குள் சென்றதும், சேவலைத் தேடின என் கண்கள்.

Luv Kumar
Luv Kumar

நகரத்து வீடுகளில் நாய், பூனை, கிளிகள் வளர்ப்பது சாதாரணமான விஷயம். ஆனால், சிட்டியில் சேவல் வளர்ப்பது எப்படி இருக்கும், `ஆடுகளம்' திரைப்படத்தில் வரும் ஆக்ரோஷமான சேவல்போல இருக்குமோ என்றெல்லாம் கற்பனை செய்துவைத்திருந்த எனக்கு, சர்ப்ரைஸ் கொடுத்தான் `லவ் குமார்'. ஆம், வெள்ளை நிற உடம்பில் சிவந்த கொண்டை கொண்ட கொழுகொழு சேவலின் பெயர்தான் லவ் குமார்.

வாக்கிங் போக லேட்டாகிவிட்டதால் என் மீது கோபமாக இருக்கிறான்' என்று தேவிகா சொன்னதும், 'அப்போ வாங்க, உடனே வாக்கிங் போகலாம்' என்றேன் ஆர்வமாய். கூண்டுக்குள் செளகர்யமாக இருந்த லவ் குமார் வெளியே வந்ததும், தேவிகாவின் பாதங்களைச் செல்லமாகக் கொத்தினான். இதுதான் கோபத்தின் வெளிப்பாடாம்!

Rooster walk
Rooster walk

சேவலின் க்யூட் தருணங்களைப் புகைப்படமாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் லவ் குமாரின் பக்கத்தில் சென்றேன். `பார்த்துமா. புது ஆட்களைக் கண்டால் நறுக் நறுக்குனு கொத்திடும்' - கிருஷ்ணன் மென்மையான குரலில் என்னை அலர்ட் செய்ய, பயத்தோடு இரண்டு அடி பின்னால் சென்று லவ் குமாரை க்ளிக் செய்ய ஆரம்பித்தேன். தொடர்ந்து, நடைப்பயிற்சிக்குத் தயாரானோம்.

சேவல் வாக்கிங் செல்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தெருவில் ஆள்கள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை. ஆனால், செல்லப் பிராணிகளின் 'பவ் பவ்' சத்தம் முதல் 'குக்கூ' சத்தம்வரை அனைத்தும் கேட்க முடிந்தது. நடைப்பயிற்சிக்கு நடுவே லவ் குமார் பற்றி தேவிகா நம்மிடம் பகிர்ந்துகொண்டவை.

Devika Krishnan
Devika Krishnan

``2014-ல் எனக்குப் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. பல போராட்டங்களுக்குப் பிறகு புற்றுநோயிலிருந்து மீண்டு வந்துவிட்டேன். ஆனால், எந்தக் காரணத்திற்காகவும் தினமும் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கவே கூடாது என்கிற கடுமையான நிபந்தனையை விதித்தார் மருத்துவர். எனக்கோ, மருத்துவர் சொல்லிக்கொடுத்த அந்தக் கடினமான உடற்பயிற்சியை முழு ஈடுபாட்டோடு ஆரம்பத்தில் செய்ய முடியவில்லை.

அந்த நேரத்தில்தான் என் மகள் எனக்கு இரண்டு சேவல் குஞ்சுகளைப் பரிசாகக் கொடுத்தாள். அந்தக் குட்டி உருவமும் அவை அங்கும் இங்கும் ஓடுவதும் எனக்குள் இனம்புரியாத மகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது. சொன்னால் நம்ப மாட்டீர்கள், அந்த இரண்டு சேவல் குஞ்சுகளையும் கையில் வைத்துக்கொண்டே உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன்.

Exercise
Exercise

ஆறு மாதத்தில் என் உடல்நிலை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பியது. என் வாழ்வில் சேவல் குஞ்சுகள் இருவரும் மருத்துவர்களாக வந்தனர்" என்கிற தேவிகா. உரையாடலுக்கு நடுவே, இதுவும் என்னுடைய நண்பன்தான் என ஒரு வீட்டிலிருந்த நாயைத் தடவிக்கொடுத்துவிட்டு மீண்டும் பேச ஆரம்பித்தார்.

``என்னுடைய லவ் குமாருக்கு இரண்டு வயதாகப் போகிறது. சாலையில் நாங்கள் இருவரும் வாக்கிங் செல்லும்போது சிலர் பார்த்துச் சிரிப்பார்கள். பலர் நண்பர்களாகி விடுவார்கள்" என்கிற தேவிகாவின் ஒரே வருத்தம் இரண்டில் ஒரு சேவல் குஞ்சை நாயொன்று கொன்றுவிட்டதுதான்.

லவ் குமார் வீட்டுக்குள் சமர்த்தா, சேட்டையா என்றோம்.

Rooster
Rooster

``காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து சத்தமாகக் கூவுவான். தரையை தன்னுடைய கழிவுகளால் அழுக்காக்கி விடுவான். இதெல்லாம் என் மகனுக்கும் கணவருக்கும் பிடிக்காது. அதனால், அவர்கள் வெளியே சென்றதும், கூண்டைத் திறந்து விட்டுவிடுவேன். என்னுடன் விளையாடுவான். சமைக்கும்போது கிச்சனுக்குள் அழகாக எட்டிப் பார்ப்பான். சோர்வாகிவிட்டால் மடியில் வந்து படுத்துக்கொள்வான்.

இவன் எனக்கு மகன் மாதிரி. நான் செல்லமாக 'பேபி' என்றுதான் குமாரைக் கூப்பிடுவேன். என் மகளுக்கும் பெஸ்ட் ஃப்ரெண்ட் இவன்தான். விலங்குகளால் பேச மட்டும்தான் முடியாது. ஆனால், மனிதர்களிடம் இருக்கிற அன்பு, கோபம் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளும் இவற்றுக்கும் உண்டு."

Walk with Rooster
Walk with Rooster
``100 நாளுக்குள்ள காதல் வராதா..?!" - கேரளா பியர்லி, ஸ்ரீனிஷ் சொல்லும் லவ் தியரி

லவ் குமாருக்குப் பிடித்த உணவுகள் பற்றிக் கேட்டதற்கு, "கம்பு, துளசி, செம்பருத்தி இலை, காலிஃப்ளவர் இலை, பப்பாளிப் பழம் இதெல்லாம் இவனுக்கு ரொம்பப் பிடிக்கும். சப்பாத்தியையும் ரொம்ப நல்லா சாப்பிடுவான் என் பேபி" என்று பூரிக்கிறார் தேவிகா. வாக்கிங் முடிந்ததும் மறக்காமல் லவ் குமாரோடு ஒரு செல்ஃபி எடுத்துவிட்டுக் கிளம்பினேன்.

பின் செல்ல