Published:Updated:

T-23 புலியைத் தேடும் சிப்பிப்பாறை நாய்! - A to Z update

தனக்கே உரிய கம்பீரச் சத்ததுடன் குரைத்துக் கொண்டே சுற்றி வளைத்து நம்மை நகரவும் விடாமல் தப்பிக்கவும் விடாமல் நிறுத்தி மோப்பம் பிடித்தன சிப்பிப்பாறை நாய்கள்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து அய்யனார்சுனைக் கோயில் செல்லும் சாலையில் மலையடிவாரத்தில் பசுமைபோர்த்திக் காணப்பட்டது சீனிவாசமூர்த்தியின் தென்னந் தோட்டத்துடன் கூடிய நாய்ப்பண்ணை. சாரல் காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்த தென்னை மரங்களுக்கு இடையில் பாயும் புலிபோல அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தன கன்னி, சிப்பிப்பாறை நாய்கள். கூண்டுகளுக்குள் ராஜபாளையம், கோம்பை நாய்கள் அடைக்கப்பட்டிருந்தது. புதிதாக நாம் பண்ணைக்குள் நுழைந்ததால், தனக்கே உரிய கம்பீரச் சத்ததுடன் குரைத்துக் கொண்டே சுற்றி வளைத்து நம்மை நகரவும் விடாமல் தப்பிக்கவும் விடாமல் நிறுத்தி மோப்பம் பிடித்தன சிப்பிப்பாறை நாய்கள்.

பாய்ந்து ஓடும் ராஜபாளையம் நாய்கள்
பாய்ந்து ஓடும் ராஜபாளையம் நாய்கள்

சிப்பிப்பாறை குரைக்கும் சத்தத்தைக் கேட்ட ராஜபாளையம், கோம்பை, கன்னி இன நாய்களும் சத்தம் எழுப்ப நாய்ப்பண்ணையே அலறியது. “டேய்…. விடுங்கடா.. நம்மாளுதான்” என சீனிவாசமூர்த்தி சொல்ல அடுத்த நொடியே சத்தம் இல்லாமல் ஓடிச் சென்றது. அபாய கட்டத்தில் இருந்து தப்பித்தது போல இருந்தது நமக்கு. ”ராஜபாளையம்னாலே ’நாய்’தான் சட்டென நினைவுக்கு வரும். ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை ஆகியவைதான் முக்கியமான தமிழ்நாட்டு நாய் இனங்களாகும். இவை தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டவை. முற்காலத்தில் அரசர்கள் தங்கள் அந்தஸ்தின் சின்னமாக நாட்டு இன நாய்களை கருதினார்கள்.

இவை, ஜல்லிக்கட்டு காளைகளைப் போல தமிழகர்களின் பாரம்பர்யம், வாழ்க்கை முறையுடன் ஒன்றிக் கலந்தவை. நாட்டு நாய்களை தற்போதைய கலப்பின நாய்களுடன் ஒருபோதும் ஒப்பிட முடியாது. கலப்பின நாய்களைப் போல ஒரு அறைக்குள் கட்டிப்போட்டு வளர்த்துவிட முடியாது. சுதந்தரமாக சுற்றித் திரிய விட்டுத்தான் வளர்க்க முடியும். வீட்டுக்காவலுக்கு ராஜபாளையம் நாயும், தோட்டக்காவல், வேட்டைக்கு கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை நாய்களும் வளர்க்கப்படுகின்றன. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகிலுள்ள ’சிப்பிப்பாறை’ கிராமம்தான் சிப்பிப்பாறை நாய் இனத்தின் பூர்வீகம். பின்னர், அந்த இனம் விருத்தியாகி பரவலானது.

கன்னி
கன்னி

கன்னி இன நாயும், சிப்பிப்பாறை இன நாயும் வேறு வேறு அல்ல. இரண்டும் ஒரே தாய்க்கு பிறந்தவைதான். ’கருப்பு’ நிறமாக இருந்தால் ’கன்னி’ எனவும், சாம்பல், பழுப்பு, பிரவுன் நிறமாக இருந்தால் ’சிப்பிப்பாறை’ எனவும் வகைப்படுத்துகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சிப்பிப்பாறை சுற்றுவட்டார கிராமங்களில் திருமணம் நடந்தால் அந்தப் பெண்ணுக்கு அளிக்கும் சீர்வரிசையுடன் சிப்பாறை நாய்க்குட்டியை பாதுகாப்பிற்காக தாய்வீட்டில் இருந்தது கொடுத்து அனுப்புவது வழக்கத்தில் இருந்தது.

Venom: Let There Be Carnage விமர்சனம்: அட படத்தைவிடுங்க பாஸ், அந்த எண்டு கிரெடிட்ஸ் மட்டுமில்லன்னா?!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நெஞ்சுப்பகுதி விரிந்தும், வயிற்றுப்பகுதி இறங்கியும், கால்கள் சற்று நீளமாகவும் இருக்கும். எவ்வளவு உணவு எடுத்துக் கொண்டாலும் பார்ப்பதற்கு எலும்பும் தோலுமாக இருக்கும் இதன் உடல் அமைப்புதான் வேகமாக பாய்ந்து ஓடிச் செல்லவும், விலங்குளை விரட்டவும் உதவுகிறது.பிற நாய்களை விட மோப்ப சக்தி, நோய் எதிர்ப்புசக்தி, சுறுசுறுப்பு ஆகியவை அதிகம் உடையது. இதன் ஓட்ட வேகம் 70 கி.மீ. ‘விசுவாசமான காவல்காரன்’ என சிப்பிப்பாறையைச் சொல்வார்கள்.

சிப்பிப்பாறை
சிப்பிப்பாறை
மிருகங்களை எதிரியாகவும், மனிதர்களைக் கண்டால் அன்பாகவும் இருக்கும். மனிதர்களிடத்தில் பாசமிகுந்தும் வனப்பகுதியில் ஏற்படும் சட்டவிரோத கடத்தல்களைக் கண்காணிக்க தேனி, தமிழ்நாடு அரசு வனக்கல்லூரியில் சிப்பிப்பாறை நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதீத மோப்ப சக்தி மிகுந்ததால்தான் நீலகிரி வனப்பகுதியில் பதுங்கிய T-23 புலியைப் பிடிக்க வனத்திற்குள் அனுப்பப்பட்டது இந்த சிப்பிப்பாறை நாய்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு