Election bannerElection banner
Published:Updated:

`குச்சியா? அவுட்டுக்காயா?' கோவை யானை மரணத்தில் சந்தேகம் எழுப்பும் வனவிலங்கு ஆர்வலர்கள்

யானை
யானை

கோவை அருகே வாயில் காயத்துடன் சுற்றித் திரிந்த ஆண் யானை உயிரிழந்தது.

கோவை மாவட்டம், ஆனைக்கட்டி, ஜம்புகண்டி அருகே 10 வயது மதிக்கத்தக்க ஆண் யானை வாயில் காயத்துடன் சுற்றித் திரிவதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. வாயில் காயம் இருப்பதால், சாப்பிட முடியாமல், நகரவும் முடியாமல் ஒரு தோட்டம் அருகே யானை நின்று கொண்டிருந்தது.

யானை
யானை
`யானை தற்செயலாக சாப்பிட்டிருக்கலாம்; வதந்திகளை நம்ப வேண்டாம்!’ -மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்

இதையடுத்து, வனத்துறை ஊழியர்கள், வனக்கால்நடை மருத்துவர் சுகுமாரன் ஆகியோர் கடந்த சனிக்கிழமை சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தொடர்ந்து அந்த யானைக்கு, வாழை மற்றும் பலா ஆகிய பழங்கள் மூலம் வலி நிவாரணி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கப்பட்டன.

அதேபோல, யானைக்கு தீவனம், தர்பூசணி போன்ற பழங்கள் வழங்கப்பட்டதாகவும், அவற்றை யானை நன்றாகச் சாப்பிட்டதாகவும் வனத்துறை கூறியது. மேலும், யானையின் வாயில் குச்சி ஏதேனும் இடித்து புண் ஏற்பட்டிருக்கலாம் என்றும் வனத்துறையில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, யானையின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அது வனப்பகுதிக்குள் சென்றுவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

யானை சிகிச்சை
யானை சிகிச்சை

ஆனால், சிறிது நேரத்திலேயே அந்த யானை படுத்துவிட்டது. அதற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை அந்த யானை உயிரிழந்துவிட்டது.

இதுகுறித்து வனவிலங்கு ஆர்வலர்கள், ``கேரளாவில் அவுட்டுக்காய் சாப்பிட்டு கர்ப்பிணி யானை உயிரிழந்தது போல, இந்த யானையும் உயிரிழந்திருக்குமோ? என்று சந்தேகம் எழுகிறது. எங்கே, விஷயம் வெளியில் தெரிந்தால் பிரச்னையாகிவிடுமோ? என்பதால் வனத்துறை உண்மையை மறைக்கிறது. இது ஒரு விதத்தில் தவறு செய்பவர்களுக்கு வனத்துறையே உடைந்தையாக இருப்பது போலத்தான் ஆகிறது.

யானை
யானை

இந்தச் சம்பவத்தில் மட்டுமல்ல, பல நேரங்களில் யானைகள் இறப்பு தொடர்பாக வனத்துறை சொல்லும் காரணங்கள் உண்மைக்கு மாறாக இருக்கிறது. காட்டுயிர்களைக் காக்க வேண்டிய வனத்துறையினர் யாரைக் காப்பாற்ற இப்படிச் செய்கிறார்கள் ? எனத் தெரியவில்லை. கேரளாவைப் போல, இந்த யானை விஷயத்திலும் தீவிர விசாரணை நடத்த வேண்டும்” என்றனர்.

வனத்துறை அதிகாரிகள் தரப்பிலோ, ``யானையின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதால்தான் அது வனப்பகுதிக்குச் சென்றது. ஆனால், வனப்பகுதியில் அது படுத்துவிட்டது. பின்னர் எழுந்த யானை, சிறிதுநேரத்திலேயே மீண்டும் படுத்துவிட்டது. தொடர்ந்து குளுக்கோஸ் மற்றும் கால்சியம் திரவியங்கள் வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து எழுந்த யானை, பின்னர் மீண்டும் படுத்துவிட்டது. யானையின் மேல் தாடைப் பல்லுக்கு அருகே புண் இருந்தது.

யானை
யானை

அதில் சீல் வடிந்துள்ளது. இன்று அதிகாலை யானை இறந்துவிட்டது. யானையின் உடல் பிரதேப் பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்படும். யானையின் வாயில் குச்சி பட்டிருப்பது போலதான் தெரிகிறது. அந்தப் பகுதியில் அவுட்டுக்காய் பயன்படுத்தப்படுவதில்லை” என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு