Published:Updated:

ரயில்களில் மோதி பலியாகும் யானைகள்; இன்ஜினில் தெர்மல் ஸ்கேனர் கேமராக்கள் பொருத்த நீதிமன்றம் ஆலோசனை!

ரயில் மோதி யானைகள் பலி
News
ரயில் மோதி யானைகள் பலி

``ரயில் தண்டவாளத்துக்கு அடியில் யானைகள் செல்ல வழி அமைத்தல், ஒலிபெருக்கி மூலம் சத்தம் எழுப்பி யானைகளை விரட்டுதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுபோக இன்னும் என்னென்ன தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன என்று பாருங்கள்."

யானைகள் ரயில் வழித்தடங்களைக் கடக்கும்போது ரயில்களில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழக்கும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் கோவை-பாலக்காடு ரயில் வழித்தடத்தில் 3 யானைகள் ரயில் பாதையைக் கடக்கும்போது ஓடுகிற ரயிலில் அடிபட்டு உயிரிழந்தன.

இந்தச் சம்பவம் அனைவரையும் உலுக்கியது. 19 ஆண்டுகளில் 29 யானைகள் கோவை - பாலக்காடு வழித்தடத்தில் ரயில் மோதி உயிரிழந்துள்ளன. ஆனால், தற்போதுவரை அந்தப் பிரச்னைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

ஏற்கெனவே யானைகள் வேட்டையாடப்படுவது தொடர்பான பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரணை நிலையில் உள்ளன. இத்தகைய வழக்குகளின் விசாரணையின் போது யானைகள் ரயிலில் அடிப்பட்டு பலியாகும் சம்பவங்கள் குறித்தும் நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டுவருகிறது.

யானைகள்
யானைகள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதுதொடர்பாக வனத்துறை மற்றும் ரயில்வே துறையினர் பதில் அளித்தபோது, ``யானைகள் தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில்களில் அடிபட்டு பலியாவதைத் தடுக்க தெற்கு ரயில்வே மற்றும் வனத்துறைக்குச் சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரங்களில் நின்று யானைகள் நடமாட்டத்தைக் கண்காணித்து வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்து ரயில்களின் வேகத்தை குறைத்து இயக்க அறிவுறுத்தியுள்ளோம்.

இதன்மூலம் யானைகள் ரயிலில் சிக்கி பலியாவது தடுக்கப்படும். ஆனால், சமீபத்தில் 3 யானைகள் பலியானபோது அவை தனியார் நிலங்கள் வழியாக வந்திருக்கின்றன. அதனால் அவற்றை கண்காணிக்க முடியவில்லை" என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து குறுக்கிட்ட நீதிபதிகள், ``இதுபோன்று பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், யானைகள் மட்டுமல்ல எந்த உயிரினமும் ரயிலில் அடிபட்டு பலியாகமல் இருக்க என்ன வழி என்று யோசியுங்கள்" என்று கூறியுள்ளனர்.

யானைகள் பலி
யானைகள் பலி
elephants

``ஏற்கெனவே ரயில் தண்டவாளத்துக்கு அடியில் யானைகள் செல்ல வழி அமைத்தல், ஒலிபெருக்கி மூலம் சத்தம் எழுப்பி யானைகளை விரட்டுதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இதுபோக இன்னும் என்னென்ன தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன என்று பாருங்கள். தண்டவாளங்களையொட்டி சூரிய மின்சக்தி வேலிகள் அமைத்தல், யானைகள் வரும் பாதைகளுக்கு அருகிலும், ரயில் இன்ஜின்களிலும் அதிநவீன தெர்மல் ஸ்கேனர் கேமராக்கள் பொருத்துதல் போன்ற வழிகளையும் ஆலோசியுங்கள்" எனத் தெற்கு ரயில்வே துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

மேலும் இதுதொடர்பாகத் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.