Published:Updated:

வீட்டுப் பல்லிகள் தெரியும்... இந்தப் பல்லிகளைத் தெரியுமா?

பல்லிகள்

நமக்குத் தெரிந்தவை எல்லாம் சுவரில் உள்ள பல்லி மட்டும்தான். ஆனால், இன்னும் நிறைய பல்லிகள் இந்தப் புவியில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

வீட்டுப் பல்லிகள் தெரியும்... இந்தப் பல்லிகளைத் தெரியுமா?

நமக்குத் தெரிந்தவை எல்லாம் சுவரில் உள்ள பல்லி மட்டும்தான். ஆனால், இன்னும் நிறைய பல்லிகள் இந்தப் புவியில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

Published:Updated:
பல்லிகள்

பல்லி என்று சொன்னாலே சிலருக்கு அருவருப்பாக இருக்கும். சிலர் பயந்து ஓடிவிடுவர். அந்த அளவுக்கு மக்கள் மனத்தில் இதைப் பற்றிய தவறான எண்ணம் பதிந்திருக்கிறது. பல்லிகள், வீட்டில் வாழும் ஒரு சிறிய உயிரினம். அதனால் நமக்கு உபயோகமே தவிர ஆபத்து இல்லை. இது, வீட்டில் உள்ள சிறிய பூச்சிகள், கொசுக்கள், கரையான்கள், ஈ போன்றவற்றை சாப்பிட்டுக்கொண்டு உயிர் வாழ்கிறது.

இது இல்லாதபோதுதான் தெரியும் தீங்கிழைக்கும் பூச்சிகள் வீட்டில் எத்தனை உள்ளன என்று. பல்லிகள், செங்குத்தான பாறைகள் மற்றும் சுவர்களில் கூட ஏறக்கூடியவை. நமக்குத் தெரிந்தவை எல்லாம் சுவரில் உள்ள பல்லி மட்டும்தான். ஆனால், இன்னும் பலவகையான பல்லிகள் இந்தப் புவியில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. நமது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் 17 வகையான ஊர்வனங்கள் உள்ளன. அதில், பல்லிகளும் அடங்கும். நமது சுற்றுப்புறத்தில் உள்ள சில பல்லிகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெனின்சுலார் ராக் அகாமா (peninsular rack agama) விலங்கியல் பெயர்: சேமோஃபைல்ஸ் டார்சாலிஸ் (psammophilus dorsalis)

பெனின்சுலார் ராக் அகாமா
பெனின்சுலார் ராக் அகாமா
முனைவர் தணிகை வேல்

மலையடிவாரத்தில் உள்ள பாறைகள்மீது ஆண் அகாமாக்கள் வசிக்கும். தட்டையான உடலமைப்பைக் கொண்டுள்ளதால், எளிதில் எதிரிகளிடமிருந்து தப்பித்துக்கொள்கிறது. ஆணிற்கு, உடலின் பக்கவாட்டில் கறுப்புப் பட்டை இருக்கும். தொண்டைப் பகுதியும் வயிற்றுப்பகுதியும் மஞ்சள் நிறமாகக் காணப்படும். இனப்பெருக்க காலத்தில், ஆணின் தலையும் முதுகும் பிரகாசமான சிவப்பு நிறமாக மாறும். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கீல்டு இந்தியன் மபுயா (keeled indian mabuya) விலங்கியல் பெயர்: யூட்ரோபிஸ் கரினாட்டா (Eutropis carinata)

அரணை
அரணை

பாம்பு மாதிரியும் இல்லாமல் பல்லி மாதிரியும் இல்லாமல் இரண்டும் சேர்ந்ததுபோல் காணப்படுவதுதான், அரணை. பாம்பரணை, பாப்பிராணி என்று பல பெயர்களால் இதனை அழைக்கிறோம். இதன் முக்கிய உணவு புழு, பூச்சி, சிலந்தி ஆகும். இது, பெரும்பாலும் நாம் பார்க்கக்கூடிய பல்லி வகைதான். இவை வெயில் காலத்தில் அதிகம் வெளியில் சுற்றித்திரிபவை. ஆனால், குறைந்த குளிரைக்கூட இதனால் தாங்க முடியாது. இதன் தோல், செதில் செதிலாக அதே நேரத்தில் வழவழப்பாகவும் காணப்படுகிறது. ஆண், பச்சை நிறத்திலும் பெண், சாம்பல் நிறத்திலும் இருக்கும். விஷமற்ற, மனிதர்களுக்குப் பயந்து வாழும் அரணை, இப்போது அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலில் இருக்கிறது.

ஓரியன்டல் கார்டன் லிசார்டு (Oriental garden lizard) விலங்கியல் பெயர்: கலோட்ஸ் வெர்சிகலர் (calots versicolor)

ஓணான்
ஓணான்
முனைவர் தணிகை வேல்

ஓணான் அல்லது கரட்டான் எனப்படும் இது, வீடுகளின் சுற்றுப்புறங்களில் சுற்றித்திரிபவை ஆகும். இதுவும் பல்லி வகையைச் சேர்ந்ததே. இதற்கு பற்கள் உண்டு. ஆனால், நீளமான நாக்கு இல்லை. பெரும்பாலும் மரக்கிளைகளில் உள்ள சிறு பூச்சிகளை உணவாகக்கொண்டு வாழ்கிறது. இனப்பெருக்கக் காலங்களில், இதன் தொண்டைப் பகுதி அடர்ந்த சிவப்பு நிறமாக மாறிக்கொள்ளும்.

ஃப்ளையிங் லிசார்டு (flying lizards) விலங்கியல் பெயர்: டிராக்கோ துசுமியேரி (Draco dussumieri)

ஃப்ளையிங் லிசார்டு
ஃப்ளையிங் லிசார்டு

இந்தத் தென்னிந்திய பறக்கும் பல்லி, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அதிகமாகக் காணப்படுகிறது. இதன் தொண்டைப் பகுதியில் மஞ்சள் நிறத்தில் ஒரு குறி இருக்கும். இது, மரத்திற்கு மரம் வேகமாகத் தாவும் என்று சொல்வார்கள். ஆனால், அது உண்மை இல்லை. இப்பல்லி, ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத்தான் தாவிச் செல்லும். தனது உடலை பறப்பதற்கு வசதியாகத் தகவமைத்துக்கொள்கிறது. மரத்தின் நிறத்தில் இருப்பதால், ஒரு சில நேரங்களில் மரப்பல்லி என்றும் நினைப்பார்கள்.

கிரீன் ஃப்ராஸ்ட் லிசார்ட் (Green forest lizard) விலங்கியல் பெயர்: கலோட்டஸ் கலோட்டஸ் (Calotes calotes)

கிரீன் ஃப்ராஸ்ட் லிசார்ட்
கிரீன் ஃப்ராஸ்ட் லிசார்ட்

இதை, பச்சை ஓணான் என்று கிராமப் புறங்களில் அழைப்பார்கள். பெயருக்கு ஏற்றாற்போல் பளிச்சிடும் பச்சை நிறத்திலும் முதுகில் செதில்களாக சிகர வடிவிலும் இருக்கும். உடலில் 4 முதல் 5 வரையிலான வெள்ளைக் கோடுகள் காணப்படும். பார்ப்பதற்கு வழுவழுப்பாகவும் அடிவயிற்றில் மஞ்சள் நிறத்திலும் காணப்படும். பெரும்பாலும் மரக்கிளைகளில் வசித்து, அதில் உள்ள புழு பூச்சிகளைச் சாப்பிட்டு வாழ்பவை ஆகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism