Published:Updated:

`விதிகளை மீறும் ரயில்களின் வேகம்?’ - வாளையார் அருகே மேலும் ஒரு யானை பலி

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் ரயில் மோதி ஆண் யானை ஒன்று உயிரிழந்தது.

யானை
யானை

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மலம்புழா அருகே கோட்டைக்காடு என்ற இடத்தில் நள்ளிரவு தண்டவாளத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியே, சென்னை மெயில் என்ற ரயில் யானை மீது மோதியது. இதில், அந்த ஆண் யானை சம்பவ இடத்திலேயே பலியானது.

யானை
யானை

கடந்த ஆகஸ்ட் மாதம் வாளையார் அருகே ரயில் மோதியதில், 10 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது. தமிழக – கேரள எல்லையான வாளையார் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில், ரயில் மோதி யானை இறப்பது தொடர் கதையாகி வருகிறது.

`குட்டி இறந்ததை அறியாத தாய் யானை!' -பந்தலூர் வனப்பகுதியில் நடந்த 3 நாள் பாசப் போராட்டம்

இதுகுறித்து சூழலியல் ஆர்வலர்கள், ``கோவை டு பாலக்காடு ரயில் பாதை, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ளது. எனவே, இந்தப் பகுதிகளில் குறிப்பிட்ட கி.மீ வேகத்தில்தான் ரயில்களை இயக்க வேண்டுமென்று விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால், அதை யாருமே பின்பற்றுவதில்லை.

யானை
யானை

அதிலும், தற்போது நடந்த விபத்து சற்று வளைவான பகுதி. ஆனால், அங்கேயும் அதிவேகமாக ரயில் வந்ததால்தான், இந்த விபத்து நடந்துள்ளது. யானையும் தண்டவாளத்தின் நடுவே நின்று கொண்டிருந்ததால் அடி பலமாக விழுந்துவிட்டது.

2002-ம் ஆண்டு முதல் இப்போதுவரை இந்தப் பகுதியில் 28 யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ளன. ரயில் ஓட்டுநர்களும் வேகத்தைக் குறைப்பதில்லை.

யானை
யானை

அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை” என்றனர். தற்போது உயிரிழந்த யானைக்குப் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.