Published:Updated:

தூங்கிக்கொண்டிருக்கும் பெண்ணை எழுப்பும் யானை|வைரல் வீடியோவின் சுவாரஸ்ய பின்னணி இதுதான்!

பெண்ணை எழுப்பும் யானை ( saakshijaain insta page )

தாய்லாந்தின் சியாங் மாய் நகரத்தில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்த சாக்ஷி ஜெயின் என்ற பெண்ணை, ஒரு யானை ஜன்னல் வழியாகத் தன் தும்பிக்கையால் தொட்டு எழுப்பும் வீடியோ வைரலாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

தூங்கிக்கொண்டிருக்கும் பெண்ணை எழுப்பும் யானை|வைரல் வீடியோவின் சுவாரஸ்ய பின்னணி இதுதான்!

தாய்லாந்தின் சியாங் மாய் நகரத்தில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்த சாக்ஷி ஜெயின் என்ற பெண்ணை, ஒரு யானை ஜன்னல் வழியாகத் தன் தும்பிக்கையால் தொட்டு எழுப்பும் வீடியோ வைரலாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

Published:Updated:
பெண்ணை எழுப்பும் யானை ( saakshijaain insta page )

காலையில் ஒவ்வொருவரும் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் முறை, ஒவ்வொரு மாதிரி இருக்கும்; ஒவ்வொருவரும் எழுப்பப்படும் முறையும் வேறு மாதிரி இருக்கும். சிலர் அலாரம் அடித்து எழுவார்கள், சிலர் யாராவது எழுப்பினால்தான் எழுந்திருப்பார்கள், சிலருக்கு தானாகவே விழிப்பு வந்துவிடும். ஆனால், தூங்கிக்கொண்டிருக்கும் ஒருவரை, இதுவரையில் இப்படி யாரும் எழுப்பியிருக்க மாட்டார்கள் என்பது போல் ஒரு இன்ஸ்டா பதிவு வெளியாகி, அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

தூங்கும் பெண்ணை எழுப்பும் யானை
தூங்கும் பெண்ணை எழுப்பும் யானை
saakshijaain insta page

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதாவது, தாய்லாந்தின் சியாங் மாய் நகரத்தில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்த சாக்ஷி ஜெயின் என்ற பெண்ணை, ஒரு யானை ஜன்னல் வழியாகத் தன் தும்பிக்கையால் தொட்டு எழுப்பி விடுகிறது. யானை, தன்னை எழுப்பும் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அந்தப் பெண்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதில் `ரிசார்ட் ரிசப்ஷனில் இருந்து அழைப்பு அல்லது அலாரம் மணிக்கு பதிலாக இந்த ரிசார்ட்டில் யானைகள் எழுப்பும். யானைகளோடு நெருங்கிப்பழகி நடக்கவும், உணவளிக்கவும், குளிக்கவும் அவற்றுடன் விளையாடவும் முடியும் என்பது இங்கே இன்னும் சிறப்பு. `இந்த அனுபவம் வித்தியாசமானது. தும்பிக்கையில் இருந்து காற்று என் மீது பட்டபோது, இந்த க்யூட்டி என்னை எழுப்பிக்கொண்டிருந்தாள்’ எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வீடியோ பதிவிட்டதில் இருந்து, இதுவரை சுமார் 53 மில்லியன் பார்வையாளர்கள் இதைக் கண்டு ரசித்துள்ளனர். 2,20,000 லைக்குகள் குவிந்துள்ளன. பலரும் வீடியோ பிரமிப்பாக உள்ளதாகக் கூறி தங்களுடைய கமென்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.