ஊர்வன இனத்தில் முதலைகளும், ஆமைகளும் அழிந்து போக கூடிய நிலையில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
ஊர்வன இனத்தை பொறுத்தவரையில் பெரும்பாலான விலங்குகள் வேட்டையாடி உண்பவை. விஷம் நிறைந்த ஊர்வனவாக ராஜ நாகம், முதலைகள் உள்ளதால் அவற்றை கண்டு மனிதர்கள் அச்சப்பட கூடிய சூழல் உள்ளது. எனவே பாலூட்டிகள், பறவைகளை போல அல்லாமல் ஊர்வனவற்றின் பரவல், எண்ணிக்கை, அழிந்து போக கூடிய நிலையில் உள்ள ஊர்வன இனம் குறித்த தகவல்கள் மிக குறைந்த அளவிலேயே உள்ளன.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில், உலகளாவிய மதிப்பீட்டில் நன்கு அறியப்பட்ட 10,000 ஊர்வன இனங்கள் சுமார் 90% அழிந்து போக கூடிய நிலையில் உள்ளது. இதில் 21% ஊர்வன இனத்திற்கு உடனடியாக அவசர உதவி தேவை.
முதலைகள் மற்றும் ஆமைகளே மிகப்பெரிய அச்சுறுத்தலில் உள்ளன. அனைத்து முதலை இனங்களில் 58% மேல், அனைத்து ஆமை இனங்களில் 50% அழியும் அபாயத்தில் உள்ளன. பறவைகளையும், பாலூட்டிகளையும் போல ஊர்வனவற்றை பெரும்பாலும் மனிதர்கள் விரும்புவதில்லை. முதலைகளும் ஆமைகளும் வேட்டையாடப்படுவது, சட்டவிரோதமாக இவற்றை பிடித்து வர்த்தகம் செய்வது இந்த இனத்தின் அழிவுக்கான முக்கிய காரணம். அதுமட்டுமில்லாமல், மக்கள் தொகை அதிகரிப்பு, கால நிலை மாற்றம் போன்ற காரணங்களும் இதில் அடக்கம்.

200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்களுடன் வாழ்ந்த ஒரு ஊர்வன இனம் ரைஞ்சோசெபாலியா எனப்படும் டுவாடாரா (tuatara). இந்த இனம் அழிந்து போவதையும், மக்களால் வேட்டையாடப்படுவதையும் தடுக்க 1895-ம் ஆண்டிலேயே டுவாடாராவை வேட்டையாடுவதும், அதன் முட்டைகளை கொண்டு செல்வதும் சட்ட விரோதமாக்கப்பட்டதில், இவ்வினம் தப்பி பிழைத்தது. இது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை முதலைகளுக்கும், ஆமைகளுக்கும் ஏற்படுத்த வேண்டும். உலகம் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானதுதானே!.