Published:Updated:

விடாமல் துரத்தும் வனத்துறை - தண்ணிகாட்டும் `அரிசி ராஜா'!

பொள்ளாச்சி அருகே 'அரிசி ராஜா' காட்டு யானையைப் பிடிக்கும் பணி இரண்டாவது நாளாகத் தொடர்ந்து வருகிறது.

அரிசி ராஜா
அரிசி ராஜா

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே அர்த்தநாரிபாளையம் பகுதியில் 'அரிசிராஜா' என்ற காட்டு யானை விவசாய நிலங்களுக்கும் மனித உயிர்களுக்கும் சேதம் விளைவிப்பதாக, அந்தப் பகுதி மக்கள் புகார் எழுப்பினர்.

அரிசிராஜா
அரிசிராஜா
2 பேரைக் கொன்றது!- `அரிசி ராஜா' யானையை பிடிக்க அரிசி மூட்டைகளுடன் செல்லும் வனத்துறையினர்

இதனிடையே, நேற்று இரவு அந்தப் பகுதியில் கனமழை பெய்தது. இதனால், யானையைப் பிடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கிட்டதட்ட 70-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள், பல்வேறு குழுக்களாகப் பிரிந்து அரிசிராஜாவைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அரிசிராஜா தென்படவில்லை.

இதுகுறித்து ஆனமலைப் புலிகள் காப்பகத் துணை இயக்குநர் மாரிமுத்து, ``மழை பெய்ததாலும், நாம் இங்கு கூடியிருப்பதாலும் யானை காட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டது. மாவடைப்பு, நவமலை போன்ற பகுதிகளில் யானையைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மருத்துவர் குழு தயாராக உள்ளனர். யானையை எப்போது பார்த்தாலும் மயக்க ஊசி போட்டு பிடித்துவிடுவோம். பிறகு, அதை வரகளியாறு பகுதிக்கு அழைத்துச்சென்று, மரக்கூண்டில் வைத்து வளர்ப்பு யானைக்கான பயிற்சி வழங்கப்படும்'' என்றார்.

Elephant 'Arisi Raja' - Forest Department's next move?