Published:Updated:

̀ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே!' - வனத்துறையை பின்வாங்க வைத்த `பாகுபலி' யானை

பாகுபலி
News
பாகுபலி

பாகுபலி யானைக்கு ரேடியோ காலர் பொறுத்திவிட வேண்டும் என வனத்துறையினர் முடிவெடுத்தனரோ இல்லையோ... அவர்கள் கையில் சிக்கக் கூடாது என பாகுபலி முடிவெடுத்துவிட்டது போல.

கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் சுற்றித்திரியும் பாகுபலி என்றழைக்கப்படும் காட்டு யானை ஊருக்குள் வருவது வாடிக்கையாகிவிட்டது. விளை நிலங்களை சேதப்படுத்துவதால், வனத்துறையினர் அந்த பாகுபலி யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க முடிவெடுத்தனர். இதற்காக, யானைக்கு ரேடியோ காலர் கருவி பொறுத்த அனுமதியும் வழங்கப்பட்டது.

பாகுபலி யானை
பாகுபலி யானை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடந்த வாரம் முதல் பாகுபலி யானையைப் பிடிக்க வனத்துறையினர் வியூகம் வகுக்கத் தொடங்கினர். டாப்ஸ்லிப் முகாமில் இருந்து கலீம், மாரியப்பன், வெங்கடேஷ் ஆகிய 3 கும்கி யானைகள் மேட்டுப்பாளையம் அழைத்து வரப்பட்டன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கும்கிகளுக்கு சற்றே ஓய்வு கொடுத்துவிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பிள்ளையார் சுழி போட்டு ஆபரேஷனைத் தொடங்கினர். இந்த ஆபரேஷனுக்கு MP20T1 என்று வனத்துறையினர் பெயரிட்டனர். 3 கும்கி யானைகள், 5 மருத்துவ குழுவினர், 70-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் இதற்காக களமிறங்கினர்.

பாகுபலி யானை ஆபரேஷன்
பாகுபலி யானை ஆபரேஷன்

ஆனால், ஒற்றை யானையாக பாகுபலி அவர்களின் அனைத்துத் திட்டங்களையும் சல்லி சல்லியாக உடைத்துச் சென்றுவிட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை துப்பாக்கி, மயக்க மருந்து சகிதமாக வனத்துறை பாகுபலியைப் பிடிக்கச் சென்றபோது, பலரும் எதிர்பார்ப்புகளுடன் கூடத் தொடங்கினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஞாயிற்றுக்கிழமை காலை வேடர் காலனி பகுதியில் பாகுபலி யானையைக் கண்டு, வனத்துறையினர் உடனடியாக அங்கு விரைந்துள்ளனர். சுதாரித்துக் கொண்ட பாகுபலி வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. வனத்துறை பல குழுக்களாக பிரிந்து, பாகுபலி எப்போதும் செல்லும் வழித்தடங்களில் மயக்க ஊசியுடன் காத்திருந்தனர்.

வனத்துறை
வனத்துறை

ஆனால், ஒவ்வொரு முறையும் வனத்துறையைவிட, ஒருபடி முன்னே சென்று கொண்டேயிருந்தது பாகுபலி. இவர்கள் நெருங்க நெருங்க அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது பாகுபலி. மயக்க ஊசி செலுத்தி ரேடியோ காலர் பொறுத்த, நல்ல சமவெளியான பகுதி தேவை.

அதனால், வனத்துறையினர் அதை நோக்கி காய் நகர்த்தினர். ஒரே ஒரு இடத்தில் பாகுபலி யானைக்கு மயக்க ஊசி செலுத்த வனத்துறைக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதை கோட்டைவிட்டனர். அதன்பிறகு பாகுபலி யாரின் கண்களிலும் சிக்கவில்லை. அதற்குள் மழையும் வந்ததால் முதல் நாள் ஆபரேஷன் கைவிடப்பட்டது.

பாகுபலி யானை
பாகுபலி யானை

இரண்டாவது நாள் திங்கள்கிழமை வனத்துறையினர் அதிகாலை முதலே தங்களது வியூகங்களை செயல்படுத்தத் தொடங்கினர். எப்படியாவது பாகுபலி யானைக்கு ரேடியோ காலர் பொறுத்திவிட வேண்டும் என வனத்துறையினர் முடிவெடுத்தனரோ இல்லையோ... அவர்கள் கையில் சிக்கக் கூடாது என பாகுபலி முடிவெடுத்துவிட்டது போல.

பாகுபலி எப்போதும் செல்லும் பகுதிகளில் பலாப்பழம், வாழைப்பழம் ஆகியவற்றை வைத்து வலை விரித்தனர். அதற்கும் பாகுபலி அசைந்து போகவில்லை. இரண்டாவது நாளும் பாகுபலிக்கு மயக்க ஊசி செலுத்த 2 வாய்ப்புகள் கைக் கூடி வந்தன. அதையும் வனத்துறை கோட்டைவிட்டது.

வனத்துறை
வனத்துறை

ஒரு இடத்தில் ஜஸ்ட் மிஸ்ஸான மயக்க ஊசியை, தட்டிவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது பாகுபலி யானை. மாலை 4 மணிக்கு பாகுபலி கோத்தகிரி சாலையை கடக்கும்... அப்போது பிடித்துவிடலாம் என்று பழங்களுடன் காத்திருந்தனர் வனத்துறையினர்.

`வா..மா.. மின்னல்..’ என்பது போல நொடிப் பொழுதில் கோத்தகிரி சாலையை கடந்து, வனத்துறைக்கு டிமிக்கி காட்டியது பாகுபலி யானை. தொடர்ந்து இரண்டு நாள்கள் முயற்சி பலனளிக்காததால், பாகுபலி ஆபரேஷனை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக வனத்துறை கூறியுள்ளது. ``இந்த யானையால் பெரிய பிரச்னை ஏதுமில்லை.

பாகுபலி யானை
பாகுபலி யானை

அப்படி இருக்கும்போது யானையை தொடர்ந்து விரட்டுவது சரிவராது. எனவே, 10 நாள்கள் கழித்து மீண்டும் பாகுபலி ஆபரேஷன் தொடங்கும்” என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் யானை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

பாகுபலி யானை நல்ல அறிவாற்றல் கொண்டது. பார்ப்பதற்கு பிரமாண்டமாக இருந்தாலும், யாரையும் தாக்காது. உடைமைகளை சேதப்படுத்தாது. உணவுக்காக விளை நிலங்களை மட்டும்தான் சேதப்படுத்தும். எவ்வளவு போக்குவரத்து இருந்தாலும், வனத்துறை பட்டாசுகளை அள்ளி வீசினாலும் அசராமல் அமைதியாக இருக்கும்.

பாகுபலி யானை
பாகுபலி யானை

வனத்துறையினர் கும்கி யானைகளை களமிறக்கியவுடனே பாகுபலி உஷாராகிவிட்டது. அப்போதிருந்தே, அது தன்னுடைய வழக்கமான பாதைகளில் சின்னச் சின்ன மாற்றங்களை செய்து வனத்துறையை குழப்பியது. அப்படி இருக்கும்போது, 70-க்கும் மேற்பட்டோர் களத்தில் இருக்கும்போது, அந்த மாற்றத்தை அதனால் உணர முடியாதா என்ன.?

அதையெல்லாம் நன்கு உணர்ந்துதான் பாகுபலி யானை, தனது அறிவாற்றல் மூலம் தப்பித்துக் கொண்டிருக்கிறது. இந்த காலகட்டத்திலும் கூட, சில இடங்களில் பாகுபலி யானையை பிடிக்க வாய்ப்பு கிடைத்ததுதான். இந்த இரண்டு நாள்களிலும் விளை நிலங்களுக்கு புகுந்து விளையாடியுள்ளது பாகுபலி.

வனத்துறை
வனத்துறை

ஆனால், அதன் பிரமாண்ட உருவத்தை பார்த்து, பலரும் அதை நெருங்க தயங்குகின்றனர். இந்த இரண்டு நாள் அனுபவங்களை நன்கு ஆராய்ந்து, புதிய திட்டங்களுடன் வனத்துறையினர் மீண்டும் களமிறங்க உள்ளனர்.