Published:Updated:

`கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி' தோல்கட்டி நோயை தடுக்க மத்தியப் பிரதேசம் அதிரடி!

சிவராஜ் சிங் சௌகான்

மாநிலத்தில் இருந்து வெளியில் கால்நடைகளைக் கொண்டு செல்லக் கூடாது. நோய் பரவலுக்கு முக்கிய காரணமான ஈக்கள், கொசுக்கள் மற்றும் மற்ற பூச்சிகளை அழிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். - சிவராஜ் சிங் சௌகான்!

`கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி' தோல்கட்டி நோயை தடுக்க மத்தியப் பிரதேசம் அதிரடி!

மாநிலத்தில் இருந்து வெளியில் கால்நடைகளைக் கொண்டு செல்லக் கூடாது. நோய் பரவலுக்கு முக்கிய காரணமான ஈக்கள், கொசுக்கள் மற்றும் மற்ற பூச்சிகளை அழிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். - சிவராஜ் சிங் சௌகான்!

Published:Updated:
சிவராஜ் சிங் சௌகான்

கால்நடை மற்றும் எருமைகளைப் பாதிக்கும் தோல்கட்டி நோய் வேகமாகப் பரவி வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் இதுவரை சுமார் 7,686 கால்நடைகள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. 101 கால்நடைகள் தொற்று பாதிப்பால் இறந்துள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நிலைமையின் தீவிரத்தை அறிந்து புதன்கிழமையன்று மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் கூட்டத்தை நடத்தினார். அதில்  கால்நடைகளுக்கு இலவசமாகத் தடுப்பூசிகள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.  

தோல்கட்டி நோய் பாதித்த கால்நடை
தோல்கட்டி நோய் பாதித்த கால்நடை

பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்துப் பேசியவர், ``அதிகாரிகள் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதோடு மாநிலத்தில் இருந்து வெளியில் கால்நடைகளைக் கொண்டு செல்லக் கூடாது. நோய் பரவலுக்கு முக்கிய காரணமான ஈக்கள், கொசுக்கள் மற்றும் மற்ற பூச்சிகளை அழிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கிராம சபா கூட்டங்களை நடத்தி வீடுகளில் கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு நோயின் தன்மை மற்றும் அதைத் தடுக்கும் வழிமுறைகளை எடுத்துரைக்க வேண்டும். கால்நடைகளுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மாடுகளுக்குத் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட விலங்குகளைத் தனிமைப்படுத்த வேண்டும்.  

கொசுக்கள்
கொசுக்கள்
Pixabay

மாநில அளவிலான நோய் கட்டுப்பாட்டு அறை மற்றும் உதவிக்கு 0755-2767583 என்ற தொலைபேசி எண் மற்றும் 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அமைத்து, அவசர நிலையைச் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார்.   

கேப்ரிபாக்ஸ் (capripox) என்ற வைரஸால் கால்நடையில் இந்நோயின் பாதிப்பு உருவாகிறது. ஈக்கள், கொசுக்கள், பேன்கள் போன்ற ரத்தம் உண்ணும் பூச்சிகளால் விலங்குகளுக்கு அதிவேகமாகப் பரவுகிறது. விலங்குகளில் காய்ச்சல் மற்றும் தோலில் முடிச்சுகளை (nodules) உண்டாக்குவதோடு, குறைந்த அளவு பால் சுரப்பையும், அதிக அளவு உமிழ்நீர் சுரப்பையும் ஏற்படுத்துகிறது. அதோடு கண்கள் மற்றும் மூக்கில் இருந்து திரவம் வெளியேறுவதோடு, நோயின் தீவிரம் அதிகரிக்கையில் இறப்பும் நிகழ்கிறது.