Published:Updated:

`சட்டவிரோத வனவிலங்குச் சந்தைகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்!' - கொரோனா விளைவாக எழும் குரல்கள்

கொரோனா விளைவாக எழும் குரல்கள்
கொரோனா விளைவாக எழும் குரல்கள்

`கோவிட் -19 எதன் மூலமாகப் பரவியது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். எதிர்காலத்தில் இதுபோன்ற நோய்களிடமிருந்து தடுக்க இந்தக் கண்டுபிடிப்பு மிக அவசியம்' என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

வனவிலங்குகளை சீனர்கள் அதிகம் உண்பதால் வந்த விளைவுதான் கோவிட்-19 எனப் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. இதையடுத்து, கொரோனா பாதிப்பால் சீனாவுக்கு அடுத்தபடியாக வியட்நாமிலும் வனவிலங்குகளைச் சாப்பிட தடை விதிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 'கோவிட் -19 எதன் மூலமாகப் பரவியது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். எதிர்காலத்தில் இதுபோன்ற நோய்களிடமிருந்து தடுக்க இந்தக் கண்டுபிடிப்பு மிக அவசியம்' என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

Chameleon
Chameleon

இந்நிலையில் பேங்கோலின் (Pangolin) எனப்படும் ஒருவகை எறும்புத் தின்னியிலிருந்து கொரோனா வைரஸ் பரவிவியதாகச் சொல்லப்பட்ட நிலையில், தற்போது 'Journal Nature' ஆய்வு முடிவும் அதைத் தெரிவித்திருக்கிறது. 'ஒருவேளை கொரோனா வைரஸ் இயற்கையாகவே பாங்கோலின்களில் இருக்கும் வைரஸாகக்கூட இருக்கலாம்' என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

சீனாவுக்குக் கடத்தப்பட்ட மலேயா பேங்கோலின்களில் இருக்கக்கூடிய இரண்டு வகை கொரோனா வைரஸ்கள், கோவிட்-19 வைரஸ் காரணிகளுடன் நெருங்கிய தொடர்புடையதாக இருப்பது சமீபத்தில் ஆராய்ச்சியாளர்களால் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டுள்ளது. SARS-CoV-2-க்கும், கோவிட்-19-க்கும் இடைநிலையான வைரஸாக இது கண்டறியப்பட்டுள்ளது.

Pangolin
Pangolin

எறும்புத் தின்னிகள், சீன மருத்துவப் பயன் கொண்டதாக நம்பப்படும் அவற்றின் செதில்களுக்காகவும் மற்றும் இறைச்சிக்காகவும் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு கொல்லப்படுகின்றன. இந்நிலையில், சந்தைகளில் காட்டு விலங்குகளை விற்பனை செய்வதைத் தடை செய்வது எதிர்காலத்தில் விலங்குகளிடமிருந்து மனிதனுக்குப் பரவும் நோய்களை நிச்சயம் தடுக்கும் என்கிறார் ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டாமி லாம்.

ஒரு காட்டு விலங்கிடமிருந்து மற்றொரு காட்டு விலங்குக்கும், அதிலிருந்து மனிதனுக்கும் எப்படி வைரஸ் தாவுகிறது என்பது இந்த நூற்றாண்டிலும் மர்மமாகவே இருக்கிறது.

Corona
Corona
இளைஞரால் கண்காணிப்புக்குள் சிக்கிய கிராமம்.. வருங்கால மனைவியைச் சந்திக்கச் சென்றதால் நேர்ந்த சோகம்!

சட்டவிரோதமான வனவிலங்கு வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், அழிவின் விளிம்பில் இருக்கும் பாலூட்டிகள் பேரழிவைச் சந்திக்கும் என்கிறார்கள் பாதுகாப்பு வல்லுநர்கள். 'சட்டவிரோதமான வனவிலங்கு வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசாங்கங்களுக்கு ஒட்டுமொத்த சர்வதேச சமூகங்களும் அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் இது' என்று வல்லுநர்களின் குரல்கள் எழும்ப ஆரம்பித்திருக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு