Published:Updated:

பரம்பு, நீச்சல் பயிற்சி, எனர்ஜி ட்ரிங்க்... ரேக்ளா ரேஸுக்கு மாடுகள் இப்படித்தான் தயாராகின்றன!

``தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டு ஜல்லிக்கட்டு மட்டுமல்ல... ரேக்ளா பந்தயமும்தான்!" என்கிறார்கள் மதுரை மாவட்டம் பரவையைச் சேர்ந்த ரேக்ளா பந்தய வீரர்களும், மாடு வளர்ப்போரும்..! இதற்காக மாடுகள் எப்படித் தயாராகின்றன?

  • 1/17

    முதலில் ரேக்ளாவில் கலந்துகொள்ளும் மாடுகளை தென்னந்தோப்பின் நடுவே அமைக்கப்பட்ட கொட்டத்தில் ஜோடி மாறாமல் கட்டிவைப்பார்கள்.

  • 2/17

    ரேக்ளா மாடுகளுக்கு முதல் பயிற்சியாக, இரும்பு கலப்பை கொண்டு பரம்பு அடிக்க பழக்குவர்

  • 3/17

    ரேக்ளா மாடுகள் கழுத்தில் வல்லக்கை மாட்டி நிலத்தை பரம்படிக்க தயார் செய்கிறார்கள்

  • 4/17

    இரும்பு ஏர்கலப்பை கொண்டு மாட்டை நிலத்தை பரம்படிக்க செய்வதால் பழங்கால முறைப்படி நிலமும் நன்கு பன்படுத்தப்படுகிறது.மேலும் மாட்டின் பழு இழுக்கும் திறன் அதிகரிக்கிறது

  • 5/17

    கருவேல மரங்களால் தயார் செய்யப்படும் ரேக்ளா வண்டி 25,000 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது

  • 6/17

    ரேக்ளா மாடுகளுக்கு ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு நீச்சல் பயிற்சி கொடுப்பதன் மூலம் மாடு அதிக தூரம் ஓடவும் விரைவில் சோர்வு அடையாமலும் இருக்கும்.

  • 7/17

    மாட்டிற்கு நீச்சல் பயிற்சி முடிந்தவுடன் வைக்கோல் நார் கொண்டு நன்றாக தேய்த்து குளிப்பாட்டுவார்கள். இப்படி செய்வதால் மாடு நன்கு இளைப்பாறும்.

  • 8/17

    குளித்து முடித்தவுடன் மாடுகள் சிறிது நேரம் வெயிலில் கட்டிவைக்கப்பட்டுவிட்டு ரேக்ளா வண்டியில் பூட்டுவதற்கு தயார் செய்யப்படும்.

  • 9/17

    ரேக்ளா வண்டியில் மாட்டினை பூட்டிய பிறகு 30 முதல் 60 கி.மீ வேகத்தில் சுமார் 5 முதல் 10 மைல் தூரம் வரை ஓட்டுவார்கள்.

  • 10/17

    பயிற்சியின் போது பல ஜோடி மாடுகளில் எந்த ஜோடி மாடு அதிக வேகத்தில் அதிக தூரம் செல்கிறதோ அந்த ஜோடி மாட்டினை, அடுத்து நடைபெறும் பந்தயத்தில் களம் இறக்குவர்

  • 11/17

    ஒரு ரேக்ளா வண்டிக்கு இரண்டு நபர்கள் இருப்பார்கள். அவர்கள் சாரதி மற்றும் துணை சாரதி என்று அழைக்கப்படுவார்கள். சாரதியின் வேலை மாட்டினை வேகமாக ஓட வைப்பது. துணை சாரதியின் வேலை மாட்டின் பாதை மாறும் போது வண்டியிலிருந்து இறங்கி அதனை சரியான பாதையில் அழைத்து செல்வது

  • 12/17

    மாடு ஓடி முடித்து வந்த பிறகு மாட்டிற்கு காயங்கள் ஏதேனும் இருக்கிறதா என்று ஒருவர் பரிசோதனை செய்வார்.

  • 13/17

    பசும்பாலில் முட்டை மற்றும் மஞ்சள் கலந்து மாடு சோர்வடையாமல் இருப்பதற்காக கொடுக்கப்படுகிறது

  • 14/17

    பின் மாட்டிற்கு இரும்பு சோளம், கம்பு, கேழ்வரகு, தட்டை போன்றவற்றின் கருதினை உணவாக கொடுப்பர்

  • 15/17

    சிறு மாடுகள் முதல் பெரிய மாடுகள் வரை ஏழு கட்டங்களாக பந்தயம் நடத்தப்படுகிறது. பந்தயங்களின் வகைகள்: பெரிய மாடு, நடுமாடு, கரச்சான்மாடு, பூஞ்சிட்டு, தேன்சிட்டு, தட்டான்சிட்டு, புள்ளிமான்சிட்டு

  • 16/17

    சாரதிகள் பயன்படுத்தும் தார்கம்பு.

  • 17/17

    80,000 ரூபாய் மதிப்புள்ள மதுரை மாவட்டம் பரவை சின்னவேலம்மாள் அய்யனாள் வண்டி.