Published:Updated:

நீலகிரி: `வேட்டை... போராட்டம்’ - அடுத்தடுத்து இறந்து கிடந்த சிறுத்தை, காட்டுமாடு

leopard found dead
leopard found dead

`வேட்டையின்போது ஏற்பட்ட போராட்டத்தில் இரண்டுமே இறந்துள்ளன. இது ஒரு‌ இயற்கையான நிகழ்வு.'

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள கரும்பாலம் பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தையும் காட்டுமாடும் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

forest staffs
forest staffs

தேயிலை விலை வீழ்ச்சியால் கைவிடப்பட்ட மற்றும் இன்னும் காட்டேஜாக மாற்றப்படாமல் உள்ள‌ தேயிலைத் தோட்டங்களை எண்ணற்ற வன‌ விலங்குகள் கடைசிப் புகலிடமாகக் கொண்டுள்ளன.

இந்த நிலையில், குன்னூர் அருகில் உள்ள கரும்பாலம் பில்லிமலை தனியார் தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் வழக்கம் போல் இன்று காலை பணிக்குச் சென்றுள்ளனர்.

leopard found dead
leopard found dead

அப்போது கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. சந்தேகித்த தொழிலாளர்கள் அருகில் சென்று பார்த்துள்ளனர். காட்டுமாடு‌ ஒன்று இறந்து கிடப்பதைப் பார்த்துள்ளனர். அதன் அருகிலேயே சிறுத்தை ஒன்றும் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ந்த தொழிலாளர்கள், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

நிகழ்விடத்துக்கு விரைந்த வனத்துறையினர், சுமார் 6 வயது மதிக்கத்தக்க பெண் காட்டுமாடு மற்றும் சுமார் 5 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை இரண்டும் அருகருகே இறந்து கிடப்பதை உறுதி செய்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

gaur found dead
gaur found dead

கால்நடை மருத்துவர்களுடன் சென்ற வனத்துறை அதிகாரிகள் உடற்கூறாய்வு மேற்கொண்டனர்.

இவற்றின் இறப்பு குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை ஊழியர் ஒருவர், ``காட்டுமாடு சினையாக இருந்துருக்கு. இத வேட்டையாட வந்த சிறுத்த பின் பக்கத்துல தாவிப்பிடிச்சி மாட்ட சாச்சிருக்கு. இந்தக் காயத்துல காட்டுமாடு செத்துருக்கு. இந்த போராட்டத்துல ‌காட்டுமாடு கொம்பால குத்தி தூக்கி வீசியதுல காயம்பட்டு சிறுத்தையும் இறந்திருக்கலாம்” என்றார்.

leopard found dead
leopard found dead

வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் "வேட்டையின்போது ஏற்பட்ட போராட்டத்தில் இரண்டுமே இறந்துள்ளன. இது ஒரு‌ இயற்கையான நிகழ்வு" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு