Published:Updated:

2,000 கி.மீ பயணம்... சிக்காத ஜோடி... நெட்டிசன்ஸ் ரிக்வெஸ்ட்.. வைரலான மகாராஷ்டிரா `புலி'!

மகாராஷ்டிரா `புலி'
மகாராஷ்டிரா `புலி' ( twitter/ @ParveenKaswan )

பயணத்தில் பகலில் ரெஸ்ட் எடுத்துக்கொண்டும், இரவில் யார் கண்ணிலும் படாமலும் பயணம் செய்துள்ளது.

மத்திய வனத்துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான் இரண்டு நாள்களுக்கு முன்பு ஒரு புலியின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அந்தப் புலிதான் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரல் ஸ்டார் ஆகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் திப்பேஸ்வர் வனப்பகுதியில் இருந்த இந்தப் புலி மீது கடந்த வருடம் மார்ச் மாதம் ரேடியோ டேக் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டது.

கடந்த ஒருவருடமாகக் கண்காணிக்கப்பட்டு வந்ததில் இந்தப் புலி கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் 2,000 கி.மீ பயணம் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனது ஜோடியைத் தேடி இந்தப் பயணத்தைப் புலி மேற்கொண்டாலும், செல்லும் வழியில் இதுவரை யாரையும் தாக்கியதாகவோ, அச்சுறுத்தியதாகவோ தகவல் வெளியாகவில்லை. கால்வாய்கள், வயல்கள், காடு, சாலைகள் என 2,000 கி.மீ தூரம் பயணத்தில் பகலில் ரெஸ்ட் எடுத்துக்கொண்டும் இரவில் யார் கண்ணிலும் படாமலும் பயணம் செய்துள்ளது.

போட்டியில் சிங்கம், புலி, யானை!- காட்டுக்கு முயல் ராஜாவான கதை! #MyVikatan
புலி சென்ற வழித்தடங்கள்
புலி சென்ற வழித்தடங்கள்
twitter/ @ParveenKaswan

அதேநேரம், இந்த நீண்ட பயணத்தை மேற்கொண்டாலும் புலி இன்னும் மகாராஷ்டிராவைத் தாண்டவில்லை. தற்போது தியான் கங்கா வனப்பகுதியில் புலி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் புலிக்கு தகுந்த ஜோடி இன்னும் கிடைக்கவில்லை. இதை ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட புலி தொடர்பான செய்திகள், புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் வைரலானது. பலரும் பல விதமான ரசிக்கும்படியான கமென்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

சிலர், இந்தப் புலிக்கு சரியான ஜோடியைத் தேடித் தாருங்கள் என்று கூறுகின்றனர். இன்னும் சிலரோ, `90'ஸ் கிட்ஸ்க்குத்தான் ஜோடி கிடைக்கலன்னா, புலிக்குகூடவா ஜோடி கிடைக்கலை" என்று பீலிங் ஸ்டேட்ஸை பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலரோ, ``2,000 கி.மீ மற்றும் எந்த மோதலும் இல்லை, இந்தப் புலி ஒரு உண்மையான ஹீரோ, வழியில் உணவைக் கண்டுபிடிப்பது, வேட்டைக்காரர்களிடமிருந்து விலகி இருப்பது என்பது போன்ற இந்தப் போராட்டங்களுக்கு மத்தியில் அது தன் ஜோடியைக் கண்டால் சந்தோஷம்" எனக் கூறியுள்ளனர்.

திறந்த ஜீப்... நெருங்கி வந்த புலி... முதுமலையில் பதறிய சுற்றுலாப் பயணிகள்! - திக் திக் நிமிடங்கள்
அடுத்த கட்டுரைக்கு