Published:Updated:

இது கொம்பு வச்ச `பப்பி' - கற்பனைகளை நிஜமாக்கிய அமெரிக்க நார்வால்!

படைப்பாளிகள் தங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு கொம்பு வைத்த குதிரையை பல கதைகளிலும் அனிமேஷன் படங்களிலும் உபயோகித்திருப்பார்கள். இந்தக் கற்பனைகளை நிஜமாக்கும் அளவுக்கு ஒரு செல்ல பப்பி அமெரிக்காவில் பிரபலமாகி வருகிறது.

பப்பி
பப்பி

அமெரிக்காவின் மிசூரி நகரில் நெற்றியில் இரண்டாம் நிலை வாலுடன் ஒரு நாய்க்குட்டி கண்டறியப்பட்டுள்ளது. இதன் நெற்றியில் உள்ள வால் பார்ப்பதற்கு யூனிகார்ன்களின் கொம்பு போல தோன்றினாலும் அதைக் கொம்பு எனச் சொல்லும் அளவுக்கு அதில் கடினத்தன்மை இல்லை.

பிறந்து 10 வாரமே ஆன இந்த நாய்க்குட்டி Mac's mission pitbull பணியாளரால் தெருவில் இருந்து எடுக்கப்பட்டது. mac's mission என்பது குறிப்பிடத்தக்க சிறப்பு தேவைகள் உள்ள உதாரணமாக காயம்பட்ட அல்லது ஊனமுற்ற விலங்குகளைப் பாதுகாக்கும் அமைப்பாகும். அவர்கள் அந்த நாய்குட்டியை `பப்பி நார்வால்' என அழைக்கின்றனர். நார்வால் என்பது ஒருவகை தண்டினை உடைய திமிங்கிலத்தைக் குறிக்கும் வகை.

பப்பி
பப்பி

இதுகுறித்து mac mission pitbull நிறுவனத்தை நடத்திவரும் ரோசெல் ஸ்டெஃபன் கூறுகையில், ``எக்ஸ்-ரே மூலம் பார்த்ததில் அந்த வால் உடலின் எந்த உறுப்பிடனும் தொடர்பில் இல்லை அதனால் நார்வால் எந்த வலியையும் உணரவில்லை. எனவே, அதை அகற்ற வேண்டிய தேவை இல்லை" என்கிறார்.

மேலும் ``இந்த வால் இன்னும் வளர்ந்து பின்னாள்களில் ஏதேனும் விளைவுகளை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்போதுவரை நார்வாலை ஒரு புகழ்பெற்ற நாய்க்குட்டியாக மாற்றியதைத் தவிர அந்த வால் வேறொன்றும் செய்யவில்லை. நார்வாலின் புகைப்படம் முகநூலில் வெளியான 24 மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான லைக்குகளைத் தாண்டியது" என்றார் உற்சாகக் குரலில்.