Published:Updated:

`நஞ்சில்லாத பாம்பு வகை' - அருணாசலப் பிரதேசத்தில் கண்டறியப்பட்ட `டிராகிஷியம் அப்தேய்!'

இந்தப் பாம்பு அடர் பழுப்பு அல்லது கறுப்பு நிறத்தில் காணப்படுகிறது. புதிய வகையான இந்தப் பாம்பின் நீளம் 293 மில்லிமீட்டர் முதல் 299 மில்லிமீட்டர் வரை உள்ளது.

புதிய பாம்பு வகை
புதிய பாம்பு வகை ( Bhosale, Gowande & Mirza )

அருணாசலப் பிரேதசத்தில், நஞ்சில்லாத புதிய வகைப் பாம்பு கண்டயறியப்பட்டுள்ளது. இதை டிராகிஷியம் அப்தேய் (Trachischium apteii) என்று குறிப்பிடுகிறார்கள். கடந்த ஜூலை மாதம் ஆராய்ச்சியாளர்கள் சிரோ என்ற ஊரின் அருகே உள்ள டாலி பள்ளத்தாக்கு (Tally Valley) சரணாலயத்துக்குச் சென்றிருந்தபோது, அந்த அடர்க்காடுகளில் கண்டறிந்தனர். அந்த இடத்தில் மட்டும் மூன்று பாம்புகள் இருந்தன என்று ஹர்ஷல் போன்ஸ்லே, கௌரங் கோவாண்டே மற்றும் சீஷன் மிர்சா ஆகிய ஆய்வாளர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தனர்.

தீபக் ஆப்தே என்ற புகழ் பெற்ற கடல் உயிரியலாளரின் நினைவாகவே அந்தப் பாம்புக்கு, டிராகிஷியம் அப்தேய் (Trachischium apteii) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாம்பு வகை பொந்துகளில் வாழும் குணம் கொண்டதனால், இதுநாள் வரை கண்டுபிடுக்கப்படவில்லை. இது தொடர்பாக அதிகம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததற்கு இது ஒரு காரணமாக இருந்திருக்கிறது. தீபக் ஆப்தே என்ற புகழ் பெற்ற கடல் உயிரியலாளரின் நினைவாகவே அந்தப் பாம்புக்கு, டிராகிஷியம் அப்தேய் (Trachischium apteii) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

உருவத்தின் பொருட்டில் இந்தப் பாம்பின் தோள் மிகவும் வழுவழுப்பாக இருப்பதாகவும் 15 வரிசை கொண்ட செதில்களும் உள்ளன என்றும் கண்டறியப்பட்டது. இந்தப் பாம்பு அடர் பழுப்பு அல்லது கறுப்பு நிறத்தில் காணப்படுகிறது. புதிய வகையான இந்தப் பாம்பின் நீளம் 293 மில்லிமீட்டர் முதல் 299 மில்லிமீட்டர் வரை உள்ளது.

அருணாசலப் பிரதேசம்
அருணாசலப் பிரதேசம்
Bhosale, Gowande & Mirza

இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள் இதே பகுதியில் மேலும் பல உயிரினங்கள் காணப்பட்டன என்று கூறியுள்ளனர். இந்தப் பாம்பு குறித்து மேற்கொண்டு ஆராய்ச்சிகளைத் தொடர்வதால், அதுகுறித்த இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.