சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்கான அசோகா அறக்கட்டளை (ATREE) பெங்களூருவில் உள்ளது. இந்த ஆராய்ச்சி நிறுவனம் புதிதாக பிராக்கோனிட் என்ற ஒட்டுண்ணி வகை குளவியை கண்டுபிடித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி அகஸ்தியமலைப் பகுதியின் கிழக்குப் பகுதியில் உள்ள 'களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில்' (KMTR) இந்த குளவி இனம் கண்டுபிடுக்கப்பட்டுள்ளது. இந்த குளவிக்கு இந்நிறுவனத்தின் பெயரையே வைத்து அட்ரீ ரஜதே (Atree) என்றழைத்து வருகின்றனர். இந்திய வரலாற்றில் ஒரு நிறுவனத்தினுடைய பெயரை பூச்சிக்கு சூட்டியுள்ளது இதுவே முதல் முறை.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த ஆராய்ச்சியில் கேரளாவை சேர்ந்த ரஞ்சித் ஏ.பி மற்றும் பிரியதர்சன் தர்ம ராஜன் ஆகியோர் உதவி புரிந்துள்ளனர். 'இந்த குளவி சுற்றுசூழல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஒட்டுண்ணி. ஏனெனில் ஒட்டுண்ணிகள் பூச்சிகளின் இயற்கையான எதிரிகள், உயிரியல் கட்டுப்பாட்டில் பூச்சிகளை கட்டுப்படுத்த மனிதர்கள் ஒட்டுண்ணிகளை பயன்படுத்துகின்றனர். இந்த குளவிகளை குறித்து கூடுதல் தகவல்களை ஆராய்ந்து சுற்றுசூழலுக்கு பயன்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும்' என பிரியதர்சனன் கூறி உள்ளார்.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த இனமானது, பிராச்சிஸ்டினேயின் துணைக் குடும்பத்தின் ட்ரைப் டியோஸ்பிலினி (Tribe Diospilini) என்ற பூச்சி இனத்தின் ஒரு பகுதி. டியோஸ்பிலினி என்பது 13 இனங்கள் மற்றும் 125 இனங்கள் கொண்டது. அவை பெரும்பாலும் பாலேர்டிக் பகுதியில் காணப்படுகின்றன. அட்ரீ ரஜதே என்பது இந்தியாவிலிருந்து வந்த முதல் டியோஸ்பிலினி ட்ரைப் வகை.
ஏறக்குறைய ஒன்றரை தசாப்தங்களுக்கு முன்பு, மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பூச்சிகள் சேகரிக்கப்பட்டு, மாதிரிகள் மற்றும் குடும்பத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டு, அட்ரீ பூச்சி அருங்காட்சியகத்தில் (AIMB) பாதுகாக்கப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து இதுவரை 80 புதிய உயிரினங்களை கண்டறிந்துள்ளனர். நெதர்லாந்தின் லைடனில் உள்ள நேச்சுரலிஸ் பல்லுயிர் மையத்தில் பூச்சியல் நிபுணராக பணிபுரியும் கார்னெலிஸ் வான் ஆக்டர்பெர்க் உடன் இணைந்து பணியாற்றிய அட்ரீயின் ஆராய்ச்சியாளர்களால் இந்த கண்டுபிடிப்பு எளிதாக்கப்பட்டது.