Published:Updated:

நீலகிரி: நண்பன் மூலமாக `செக்'... யானையைப் பிடிக்க மீண்டும் `ஆபரேஷன் புரோக்கன்‌ டஸ்கர்'

கும்கி
கும்கி

இரண்டு மாதங்கள் கழித்து `உடைந்த கொம்பன்' யானை மீண்டும் தமிழக வனப்பகுதிக்குள் நுழைந்துள்ளது.

சங்கர், உடைந்த கொம்பன் என்ற பெயரில் உள்ளூர் மக்களால் அழைக்கப்பட்டு வரும் 40 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானையால் அடிக்கடி நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் யானை - மனித எதிர்கொள்ளல்கள் ஏற்படுகின்றன. இந்த யானை தாக்கியதில் கடந்த டிசம்பர் மாதத்தில் தந்தை மகன் உட்பட 3 பேர் உயிரிழந்ததாக வனத்துறை அறிவித்தது.

கும்கி
கும்கி
கேரளா: மாஸ் யானை `மங்கலம்குன்னு கர்ணன்' மரணம்... கண்ணீரில் `கடவுளின் தேசம்!'

மனிதர்களைத் தாக்கும் சுபாவம் கொண்ட இந்த யானையைப்‌ பிடித்து முகாமுக்கு கொண்டு சென்று பராமரிக்க முடிவு செய்த வனத்துறையினர், டிசம்பர் மாதத்தில் களமிறங்கினர்.

கும்கி யானைகள், கால்நடை மருத்துவ குழுக்கள், ட்ரோன் கேமராக்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள் என ஒரு படையே காட்டுக்குள் இறங்கி இந்த யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் இவர்களிடம் சிக்காமல் இந்த யானை கேரள வனத்துக்குள் நுழைந்தது. ஒரு வாரத்துக்கும் மேலாக நடந்த இந்த முயற்சி கடைசியில் தோல்வியில் முடிந்தது.

forest staffs
forest staffs
நீலகிரி: 25 கேமராக்கள், 4 கும்கிகள்... 4-வது நாளாகத் தொடரும் `ஆபரேஷன் புரோக்கன்‌ டஸ்கர்'

இந்த நிலையில், இரண்டு மாதங்கள் கழித்து `உடைந்த கொம்பன்' யானை மீண்டும் தமிழக வனப்பகுதிக்குள் நுழைந்துள்ளது. செப்பந்தோடு பகுதியில் முகாமிட்டுள்ள யானைக் கூட்டத்தில் இந்த யானையும் இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர். இதையடுத்து மீண்டும் இந்த யானையைப் பிடிக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளனர்.

இந்த முயற்சி குறித்து நம்மிடம் பேசிய கூடலூர் வனத்துறை அதிகாரி ஒருவர், `` `ஆபரேஷன் புரோக்கன்‌ டஸ்கர்' என்ற பெயரில் டிசம்பர் மாதத்தில் இந்த யானையைப் பிடிக்க முயற்சி செய்தோம். ஆனால் கேரள வனத்துக்குள் சென்றுவிட்டதால் யானையைப் பிடிப்பது முடியாமல் போய்விட்டது. தற்போது இந்த யானையைப் பிடிக்க முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

கும்கிகள்
கும்கிகள்
கேரளாவில் தென்பட்ட கொம்பன்... திசை மாறும் `ஆபரேஷன் புரோக்கன்‌ டஸ்கர்'... திணறும் வனத்துறை!

தற்போது கால்நடை மருத்துவர்கள் குழு தயாராக உள்ளது. கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளோம். அருகில் உள்ள தேயிலைத் தோட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அவசிய தேவையின்றி மக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளோம்" என்றார்.

மற்றொரு வனத்துறை பணியாளர் பேசுகையில், ``நம்மகிட்ட இப்போ கும்கியா இருக்கிற ஸ்ரீனிவாசன் சில வருசங்களுக்கு முன்னாடி இதே ஏரியால `சுள்ளிக்கொம்பன்' எனும் பெயர்ல காட்டு‌ யானையா இருந்ததுதான். இதுவும் இந்த சங்கர் யானையும் ஒண்ணா சேர்ந்தேதான் சுத்துவாங்க.

elehant crossing area
elehant crossing area
`சங்கர் வந்துருக்கான்னா ஏரியாவே நடுங்கும்!' - `ஆபரேஷன் புரோக்கன்‌ டஸ்கர்' அனுபவங்கள்

அதனால ஆருயிர் நண்பனான ஸ்ரீனிவாசன் கும்கி யானையை களமிறக்கி சங்கர பிடிக்கலாம் என்ற யோசனையில இருக்கோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு