Published:Updated:

செல்லப் பிராணிகளையும் கொஞ்சம் கவனிங்க பாஸ்!

உடல்நலக்குறைவின் இந்த ஆரம்ப அறிகுறிகளைக் கவனித்து, பாதிக்கப்பட்ட விலங்கை அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது அவசியம்.

செல்லப் பிராணிகள்
செல்லப் பிராணிகள்

காற்று மாசுபாட்டால் மனிதர்கள் மட்டுமல்ல, வீட்டில் வளரும் செல்லப் பிராணிகள் முதல் நகர்ப்புறங்களில் ஆனந்தமாக சுற்றித் திரியும் விலங்குகள்வரை ஏராளமான உயிரினங்கள் பல உடல் உபாதைகளுக்குப் பலியாகியுள்ளன.

Monkey
Monkey

அதிகப்படியான காற்று மாசுபாடு ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு, கடுமையான இதயப் பிரச்னைகள் போன்ற நோய்களை விலங்குகளுக்கும் உருவாக்கும். இதனால் ஏராளமான விலங்குங்கள் பாதிக்கப்பட்டு சில விலங்குகள் இறந்தும் உள்ளதாக டெல்லி நகர் கால்நடை மருத்துவமனைகளில் பதிவாகியுள்ளன.

செல்லமாக வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகள், மாசுபட்ட காற்றை சுவாசிக்கும்போது, அவற்றுக்கு உயிரைப் பறிக்கும் கட்டிகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், வீடுகளுக்கு வெளியே சுற்றும் நாய், பூனை மற்றும் குரங்குகள் போன்ற விலங்குகளும் இதுபோன்ற பிரச்னைகளால் பெரும் பாதிப்படைந்திருக்கின்றன.

Donkeys
Donkeys

இந்த விலங்குகளைவிட, நாள் முழுவதும் சாலையில் நின்று வேலைசெய்யும் காளை, கழுதை, குதிரை, ஒட்டகம் போன்ற விலங்குகளும் காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. அவற்றைச் சுற்றியுள்ள வாகனங்களிலிருந்து வெளிப்படும் மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால், காற்றிலுள்ள சில நச்சுப் பொருள்கள் விலங்குகளின் இதயம்வரை சென்று சில சமயங்களில் உயிரிழப்பும் ஏற்படுகின்றன.

எல்லா நேரங்களிலும் விலங்குகளை வீட்டுக்குள் வைத்திருப்பது சாத்தியமில்லை என்பதால், உடல்நலக்குறைவின் இந்த ஆரம்ப அறிகுறிகளைக் கவனித்து, பாதிக்கப்பட்ட விலங்கை அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது அவசியம்.

Horse
Horse

அறிகுறிகள்:

அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பு, பசியின்மை, அதிகப்படியான இருமல் அல்லது தும்மல், வீக்கமடைந்த கண்கள் மற்றும் வாய், கண்கள் மற்றும் மூக்குப் பகுதிகளிலிருந்து நீர் வெளியேற்றம் சோம்பல் அல்லது பலவீனமாக இருப்பது பேலன்ச் இல்லாத நடை

இதுபோன்ற பிரச்னைகளிலிருந்து விலங்குகளைக் காப்பாற்ற சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

Vikatan

வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுடன் நீண்டதூர நடைப்பயணத்தைத் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை வெளியில் கூட்டிச் செல்லாமல், வீட்டிலிருந்தபடியே பார்த்துக்கொள்ளலாம். தினமும் போதுமான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும்.

Dog with mask
Dog with mask

கழுதை, குதிரை போன்று வேலை செய்யும் பிராணிகளுக்கு நிச்சயம் உலர்ந்த (Dry) உணவு கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

உங்களால் முடிந்தவரை நீங்கள் வெளியில் பார்க்கும் விலங்குகளையும் கண்காணிக்கவும். அவற்றுக்குப் போதுமான அளவு தண்ணீர் மற்றும் தங்குமிடம் இருப்பதை உறுதிப்படுத்துங்கள். இல்லையெனில், விலங்குகள் அவசர ஹெல்ப்லைனைத் தொடர்புகொண்டு அவற்றைப் பத்திரமாக ஒப்படைக்கலாம். வீட்டில் வளர்க்கவில்லையென்றாலும், வழியில் பார்க்கும் உயிரினங்களின் மீதும் சிறிதளவு அக்கறை எடுத்துக்கொள்ளலாமே.