Published:Updated:

`ஆலிவ் ரிட்லிக்களை காப்பாற்றுவோம்!' ஆமைகளுக்காக மக்களுடன் கைகோத்த புதுச்சேரி வனத்துறை #VikatanPhotoStory

ஆலிவ் ரிட்லி ஆமை
ஆலிவ் ரிட்லி ஆமை

புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் முட்டையிடும் `ஆலிவ் ரிட்லி' வகை கடல் ஆமை முட்டைகளை வனத்துறையினர் மீனவ கிராம மக்களின் உதவியுடன் சேகரித்து பாதுகாக்கின்றனர். பின்னர் பொரித்து வரும் ஆமைக் குஞ்சுகளை கடலில் விடும் வனத்துறையினரின் செயல்பாடு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது

புதுச்சேரியில் இது மாதிரியான மணல் பரப்பு அதிகமுள்ள வீராம்பட்டிணம், நரம்பை, நல்லவாடு கிராம கடற்கரைப் பகுதிகளில் `ஆலிவ் ரிட்லி' இன ஆமைகள் அதிகளவில் முட்டையிடுகின்றன.

வருடத்தில் டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை முட்டையிடும் ஆமைகள், கடலிலிருந்து நூறு மீட்டர் வரை நிலப்பரப்பு பகுதிக்கு வந்து முட்டையிடுகின்றன. இந்த காலங்களில் ஆமை வந்து சென்ற வழித்தடங்களை வனத்துறையினர் தீவிரமாக கண்காணிக்கின்றனர்

ஆமையின் வழித்தடங்களை வைத்து முட்டையிட்ட பகுதியில் மணலைத் தோண்டி முட்டைகளை தேடும் கிராமத்து இளைஞர்கள். சில நேரங்களில் ஆமைகள் தனது பாதுகாப்பு தன்மையை உறுதி செய்யும் விதமாக போலியாக குழியை மட்டும் தோண்டி முட்டையிடாமல் செல்கின்றன.

இரண்டு முதல் மூன்று அடிகள் வரை மணலில் குழிகளைத் தோண்டி முட்டையிடும் ஆமை முட்டைகளின் மேல்பகுதி ரப்பர் போன்ற தன்மையுடையவை. ஒரு ஆமை சராசரியாக 110 முதல் 140 முட்டைகள் இடுகின்றன.

அதிகாலை, கடற்கரை மணல் பகுதிக்கு சென்று ஆமை முட்டைகளை சேகரிக்கும் கிராம மக்கள் மற்றும் வனத்துறையினர்.

விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்களும் தங்கள் பெற்றோருடன் சென்று முட்டைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்

நரம்பை மற்றும் புதுக்குப்பம் பகுதியில் வனத்துறையினர் மீனவ இளைஞர்களின் உதவியுடன் மற்ற உயிரினங்கள் நுழையாத வகையில் கூடாரம் அமைத்து சேகரித்த ஆமை முட்டைகளை பாதுகாப்புடன் மணலில் புதைத்து வைக்கின்றனர்.

பல்வேறு கடற்கரைப் பகுதிகளில் ஆங்காங்கே சேகரித்த முட்டைகளை கூடாரத்தில் பள்ளம் தோண்டி கிராம மக்கள் முன்னிலையில் பாதுகாப்புடன் வைக்கும் வனத்துறையினர்.

சேகரிக்கப்பட்ட முட்டைகள் கூடாரத்தில் தேதி வாரியாக மணலில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டுள்ள இடங்களை தலைமை வன அலுவலர் சத்யமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் தினமும் ஆய்வு செய்கின்றனர்

கூடாரத்தில் பாதுகாப்புடன் இருக்கும் முட்டையிலிருந்து பொரித்த ஆமை குஞ்சுகள் சரியாக 48 நாட்களிலிருந்து 51 நாட்களுக்குள் வெளியே வருகின்றன

சராசரியாக நூறு முட்டைகளிலிருந்து 99 சதவீத குஞ்சுகள் பொரித்துவிடுகின்றன. ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் மட்டுமே வீணாகின்றன

முப்பது கிராம் எடையுள்ள இந்த ஆலிவ் ரெட்லி ஆமையானது அதிகபட்சமாக 120 கிலோ எடை வரை வளரும் தன்மையுடையது

தனது கிராமத்திலிருந்து கடலுக்குச் செல்லும் ஆமைக் குஞ்சுகளை பெண்கள் கையில் தொட்டுப்பார்த்து மகிழ்கின்றனர்

வனத்துறையினர் கிராம மக்கள் முன்னிலையில் ஆமைகளை கடலில் விடுகின்றனர். எந்த திசையை நோக்கி ஆமைகளை விட்டாலும் கூட அவைகள் அலையின் ஓசையை கேட்டு கடலை நோக்கி செல்லும் தன்மை கொண்டவை.

தரையில் விட்ட உடன் சிறிது நேரம் தலையை தூக்கி சுற்றுப் பகுதிகளை பார்வையிட்ட பின் ஆமை குஞ்சுகள் கடலை நோக்கி செல்கின்றன

150 முதல் 250 ஆண்டுகள் வரை உயிர் வாழும் ஆமையானது, பிறந்த இடத்திலிருந்து செல்லும்போது ஏதோ ஏக்கத்தில் செல்வதாக மீனவர்கள் நம்புகின்றனர்.

கடல் தண்ணீரில் மூழ்கிய நிலையிலும் அடுத்தடுத்த அலைகளை நோக்கி மெதுவாக நகரும் ஆமை குஞ்சுகள்.

புதுச்சேரி கடற்கரைப் பகுதியிலிருந்து விடைபெறும் ஆமை குஞ்சுகள் மீண்டும் சில வருடங்களுக்கு (சுமார் 20 ஆண்டுகள்) பிறகு பிறந்த இடத்துக்கே வந்து முட்டையிடுவது இந்த ஆலிவ் ரிட்லி வகை ஆமைகளின் சிறப்பு

அடுத்த கட்டுரைக்கு