Published:Updated:

`கரையிலிருந்து 2 மைல்; கடலில் தத்தளித்த மான்!’ - புதுக்கோட்டை இளைஞர்களை ஆச்சர்யப்படுத்திய சம்பவம்


மீட்கப்பட்ட மான்
மீட்கப்பட்ட மான்

``மானுக்கு எந்த காயமும் இல்லாம, ரொம்ப பத்திரமாக மீட்டுக்கொண்டு வந்து வனத்துறை அதிகாரிங்ககிட்ட கொடுத்துட்டோம்''.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே கிருஷ்ணாஜிபட்டினம் கடற்கரைப் பகுதியில் மான் ஒன்று கடலுக்குள் இருந்து வெளியே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. மான் உயிருக்குப் போராடுவதைப் பார்த்த அப்பகுதி மீனவ இளைஞர்கள் நாட்டுப்படகு ஒன்றை எடுத்துக் கொண்டு கடலுக்குள் சென்று உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மானைப் பத்திரமாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். இதுபற்றி இளைஞர்கள் மணமேல்குடி போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறைக்குத் தகவல் தெரிவித்த போலீஸார் மானை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும், மானை யாரும் கடல் வழியாகக் கடத்திச் செல்லும் போது கடலுக்குள் மான் விழுந்திருக்கலாமா? மான் கடலுக்குள் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்துகின்றனர்.

மீட்கப்பட்ட மான்
மீட்கப்பட்ட மான்

இதுபற்றி மீனவ இளைஞர்களிடம் கேட்டபோது, ``கடற்கரையில இருந்து 2 கடல் மைல் தொலைவில தான் மான் தத்தளிச்சிக்கிட்டு இருந்துச்சு. உடனே, நாட்டுப்படகை எடுத்துக்கிட்டு கடலுக்குள் கிளம்பிட்டோம். கயிறுபோட்டு பத்திரமாக மீட்டுக்கொண்டு வந்துட்டோம். மானுக்கு எந்த காயமும் இல்லாம, ரொம்ப பத்திரமாக மீட்டுக்கொண்டு வந்து வனத்துறை அதிகாரிங்ககிட்ட கொடுத்துட்டோம். மான் சுமார் 25 கிலோ எடை இருக்கும். நாங்களே இப்பதான் நேரில் மானைப் பார்க்கிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு