Published:Updated:

`நாய் வளர்ப்பவர்கள் மாநகராட்சியில் பதிவு செய்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா'?

dogs ( pixabay )

நாய்களுக்கு மாநகராட்சிகளில் இலவச தடுப்பூசி வழங்கப்படுவதோடு, குடற்புழு நீக்கத்துக்கான தொடர் சிகிச்சைகளும் வழங்கப்படும்.

மனிதர்களின் மிகப் பிடித்தமான வளர்ப்பு பிராணிகளில் நாய்களுக்கு முதலிடம் இருக்கும். பெரும்பாலான வீடுகளில் நாய்கள் வளர்க்கப்பட்டு வந்தாலும், எத்தனை வீடுகளில் நாய்கள் வளர்க்கப்படுகின்றன என்ற கணக்கெடுப்புகள் இல்லை. எனவே, வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களின் கணக்கெடுப்பை அறியும் புதிய முயற்சியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.

`நாய் வளர்ப்பவர்கள் மாநகராட்சியில் பதிவு செய்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா'?
pixabay

நீங்கள் நாய் வளர்ப்பவராக இருந்தால், 50 ரூபாய் மட்டும் செலுத்தி, சென்னை குடிமை அமைப்பின் கால்நடை மருத்துவமனைகளில் பதிவு செய்யலாம். பதிவு செய்பவர்களுக்கு நாய்களுக்கென ஐ.டி வழங்கப்படுவதோடு, கழுத்தில் அணியும் தனித்துவமான காயின் வடிவப் பதக்கம் வழங்கப்படும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்படிப் பதிவு செய்வதன் மூலம், நாய்களுக்கு மாநகராட்சிகளில் இலவச தடுப்பூசி வழங்கப்படுவதோடு, குடற்புழு நீக்கத்துக்கான தொடர் சிகிச்சைகளும் வழங்கப்படும். அதோடு நாய்கள் காணாமல் போகும் பட்சத்தில், அருகில் உள்ள மாநகராட்சியில் தெரிவித்தால், எளிதாகக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

`நாய் வளர்ப்பவர்கள் மாநகராட்சியில் பதிவு செய்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா'?
pixabay

``மதிப்பீட்டின்படி 50,000 வளர்ப்பு நாய்கள் இருக்கும் என்று நம்பப்படுகிறது; ஆனால், 1,200 பேர் மட்டுமே இதுவரை பதிவு செய்துள்ளனர். திருவிக நகர், நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை மற்றும் மீனம்பாக்கம் போன்ற பகுதிகளில் குடிமை அமைப்பின் கால்நடை மருத்துவமனையில் பதிவு செய்யலாம்'' என சென்னை மாநகராட்சியின் கால்நடை அதிகாரி ஜே. கமல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியின் இந்த முயற்சிக்கு, விலங்குகள்நல ஆர்வலர்களும், மக்களும் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.