Published:Updated:

`மனுஷன் குச்சி வச்சி நடக்குற மாதிரி தான் இந்தர் யானை நடக்கும்...!' - கும்கி உருவாகும் கதை

1960-ம் ஆண்டு பிடிக்கப்பட்ட இந்தர் 1961-ம் ஆண்டு முதுமலைக்கு கொண்டுவரப்பட்டது. இந்தருக்கு மாவூத்தாக இருந்தவர் தேவராஜ்.

முதுமலை யானைகள் முகாமில் இருக்கிற வளர்ப்பு யானைகளில் முக்கியமான கும்கி யானை இந்தர். 1960-ம் ஆண்டு பிடிக்கப்பட்ட இந்தர் 1961-ம் ஆண்டு முதுமலைக்கு கொண்டுவரப்பட்டது. இந்தருக்கு மாவூத்தாக இருந்தவர் தேவராஜ். இவர் தற்போது சுஜய் என்கிற கும்கி யானைக்கு மாவூத்தாக இருக்கிறார். மேற்கூறிய இரண்டு கும்கி யானைகளும் தேவராஜின் வாழ்க்கையில் முக்கிய இடம் வகிப்பவை. தற்போது 69 வயதான இந்தர் தன்னுடைய இரண்டு கண் பார்வையையும் இழந்திருக்கிறது. சுஜய் நினைத்துப் பார்க்க முடியாத துயரத்துக்கு ஆளாகியிருக்கிறது. முதுமலை கும்கி யானைகள் குறித்த கதைகளை விகடன் ஆவணப்படமாக தயாரித்திருக்கிறது. அதன் முதல் அத்தியாயம் கும்கி இந்தர் யானை பற்றியது. மாவூத்துக்களுக்கும் கும்கி யானைகளுக்கும் இடையே இருக்கும் உறவைச் சொல்லும் கதை இது.