Published:Updated:

சாத்தான்குளம்: `பென்னி இறந்தபிறகு சாப்டுறதே இல்லை!’ - வீட்டையே சுற்றிவரும் `டாமி’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பென்னிக்ஸின் வளர்ப்பு நாய் டாமி
பென்னிக்ஸின் வளர்ப்பு நாய் டாமி

சாத்தான்குளத்தில் போலீஸார் தாக்குதலில் உயிரிழந்த பென்னிக்ஸ், பாசத்துடன் வளர்த்த நாய் டாமி, பென்னிக்ஸின் இறப்பிற்குப் பிறகு சரியாக உணவு எடுத்துக்கொள்ளாமல் உடல் மெலிந்து சோர்வுடன் பரிதவித்த நிலையில் வீட்டையே சுற்றி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த ஜூன், 19-ம் தேதி சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீஸார் தாக்கியதில் ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் பலத்த காயமடைந்து கோவில்பட்டி சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இச்சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பென்னிக்ஸ், ஜெயராஜ்
பென்னிக்ஸ், ஜெயராஜ்

இக்கொலை வழக்கு தொடர்பாக தற்போது சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயராஜின் மனைவி செல்வராணி, அவர் மகள்கள் பெர்சி, பியூலா, அபிஷா மற்றும் உறவினர்கள் தற்போது வரையிலும் சோகத்தில் இருந்து மீளவில்லை. அதேபோல பென்னிக்ஸ் பாசத்துடன் வளர்த்துவந்த வளர்ப்பு நாயான டாமியும் சோகத்திலிருந்து மீளவில்லை. சரிவர உணவு எடுத்துக் கொள்ளாமல், வீட்டையேச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

இதுகுறித்து அப்பகுதியினரிடம் பேசினோம், ``பென்னிக்ஸ் இந்த நாயைக் குட்டியிலேயே வளர்ப்புக்காக உறவினர் வீட்டிலிருந்து வாங்கிட்டு வந்துட்டான். பென்னிக்ஸுக்கு நாய் வளர்க்குறது பிடிக்கும்ங்கிறதுனால வீட்லயும் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கலை. ``டாமி...”ன்னு கூப்பிட்டா அடுத்த நிமிடம் முன்னால வந்து நிற்கும். சாப்பாடு போடுறது, குளிப்பாட்டுறதுன்னு எல்லாமே பென்னிதான் செய்வான்.

டாமி
டாமி

தினமும் காலையில பென்னி, செல்போன் கடைக்குப் போகும்போது, அவன் பைக் பின்னாலயே கடை வரைக்கும் போயிட்டுதான் வீட்டுக்கு வரும். தெருவுல புதுசா யாரும் நுழைஞ்சுட்டா குரைக்கும். ஆனா, யாரு மேலயும் இதுவரைக்கும் பாய்ந்ததோ, கடிக்கவோ செஞ்சதில்ல. பென்னி இறந்த நாளில் இருந்து இப்போ வரைக்கும் சரியா சாப்பிடலை. உடல் மெலிந்து ரொம்ப தளர்ந்த நிலையிலதான் இருக்கு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தட்டுல சாப்பாடு இருந்தும் சுத்தி முத்தியும் பரிதவித்த நிலையில பார்த்துக்கிட்டே இருக்கு. ஓய்வெடுப்பதும் குறைந்துவிட்டது. வீட்டு வாசலை விட்டே வெளியில போகாத டாமி, இப்போ தெருவுக்குள்ளேயே அங்குமிங்கும் சுற்றித்திரிந்து கொண்டிருக்கிறது. வீட்டுத்தாழ்வாரத்தில் பென்னி பைக் நிறுத்துமிடத்துலதான் டாமி எப்போதும் படுத்திருக்கும்.

டாமி
டாமி

இப்போ பென்னியின் பைக் மேல ஏறி உட்கார்ந்து முகர்ந்து பார்த்தபடியே இருக்கு. பென்னிக்ஸ் மட்டுமல்ல... அவர் தந்தை ஜெயராஜூம் நாய் மீது பாசம் காட்டி வளர்த்தவர். தற்போது இருவரையும் காணவில்லை என்பதால் சோகத்தில், பழைய சுறுசுறுப்பும் கம்பீரமும் இழந்து காணப்படுகிறது டாமி” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு