Published:Updated:

கடல் காற்றின் சீற்றத்தால் கரை ஒதுங்கிய பெருந்தலை ஆமை... மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கரை ஒதுங்கிய பெருந்தலை ஆமை
கரை ஒதுங்கிய பெருந்தலை ஆமை ( உ.பாண்டி )

மீனவர்களின் வலைகளில் சிக்கும் ஆமைகளைப் பாதுகாப்பாக மீட்டு மீண்டும் அதைக் கடலில் விட வேண்டும் என்பதை வலியுறுத்தி வனத்துறையினர் மீனவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மண்டபம் பகுதியில் கடல் காற்றின் சீற்றத்தால் கரைக்கு இழுத்து வரப்பட்ட கடல் ஆமையை மீட்ட வனத்துறையினர் நீண்ட முயற்சிக்குப் பின் அதை மீண்டும் கடலில் விட்டனர்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஏராளமான கடல் ஆமைகள் உள்ளன. நாடு முழுவதும் கடல் மற்றும் நீர்நிலை பகுதிகளில் 5 வகை ஆமைகள் இருந்தாலும் அவற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகின்றன. கடற்பரப்பின் தூய்மை காவலனாக விளங்கும் ஆமை இனங்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் வகையில் ஆமைகள் பிடிப்பது தண்டனைக்கு உரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் விடப்படும் ஆமைக் குஞ்சுகள் (பழைய படம்)
கடலில் விடப்படும் ஆமைக் குஞ்சுகள் (பழைய படம்)
உ.பாண்டி

மேலும், மீனவர்களின் வலைகளில் சிக்கும் ஆமைகளைப் பாதுகாப்பாக மீட்டு மீண்டும் அதைக் கடலில் விட வேண்டும் என்பதை வலியுறுத்தி வனத்துறையினர் மீனவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் மீனவர்கள் வலையில் எதேச்சையாக ஆமைகள் சிக்கினாலும் அவற்றைக் கரை பகுதிக்குக் கொண்டு வருவதில்லை. அதையும் மீறி வந்துவிட்டால் அதைக் கரையோரப் பகுதிகளில் யாருக்கும் தெரியாமல் விட்டுவிடுகின்றனர்.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் பனைக்குளம் மங்கம்மாள் சாலை கடற்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களின் வலையில் சுமார் 35 கிலோ எடை கொண்ட சித்தாமை ஒன்று சிக்கியது. இந்தச் சித்தாமையைக் கரைக்குக் கொண்டு வந்த மீனவர்கள் வனத்துறையினர் முன்னிலையில் வலையில் இருந்து மீட்டு மீண்டும் பாதுகாப்பாகக் கடலில் விட்டனர்.

வலையில் சிக்கிய சித்தாமை
வலையில் சிக்கிய சித்தாமை
உ.பாண்டி

இதேபோல் இன்று காலை மண்டபம் கடல் பகுதியில் கடல் சீற்றத்தில் சிக்கிய ஆமை ஒன்று கரையில் ஒதுங்கியது. இது குறித்து மண்டபம் வன உயிரின வனச்சரகர் வெங்கடேஷுக்கு தகவல் கிடைத்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தகவல் கிடைத்ததை அடுத்து மண்டபத்தின் வனச்சரக வேட்டைத் தடுப்பு காவலர்கள் மற்றும் வனகாப்பாளர், அப்பகுதிக்குச் சென்று கரை ஒதுங்கிய ஆமையை ஆய்வு செய்தபோது பெருந்தலை ஆமை இனத்தைச் சேர்ந்த ஆமை அது எனத் தெரிய வந்தது.

கடலில் விடப்பட்ட பெருந்தலை ஆமை
கடலில் விடப்பட்ட பெருந்தலை ஆமை
உ.பாண்டி

சுமார் 100 கிலோ எடையுடன் கூடிய அந்த பெருந்தலை ஆமையைப் பாதுகாப்பாக மீண்டும் கடலில் விட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், காற்றின் வேகத்தால் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில் அந்த ஆமையால் கடலுக்குள் செல்ல முடியவில்லை. இதையடுத்து வேட்டைத் தடுப்பு காவலர் செந்தில் கரையில் இருந்து சிறிது தூரம் நீந்திச் சென்று பாதுகாப்பாகக் கடலுக்குள் செல்ல பெருந்தலை ஆமைக்கு உதவினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு