Published:Updated:

'காட்ஸில்லா தெரியும்... ஸ்வாக்ஸில்லா தெரியுமா?' ராட்சத புராதன கிளி இனம் கண்டுபிடிப்பு!

ம.காசி விஸ்வநாதன்

2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இது பூமியில் வாழ்ந்திருக்கிறது!

ராட்சத கிளி
ராட்சத கிளி ( PA Media )

நியூசிலாந்தில் கண்டெடுக்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலிய பல்கலைக்கழக லேப்பில் புராதன கழுகினுடையது என நம்பப்பட்டு வந்த புதைபடிமம் பாதுகாக்கப்பட்டு வந்தது. தற்போது ஒரு மாணவரின் மறுஆய்வில் அது கழுகினுடையது இல்லை, ஒரு ராட்சத கிளியினுடையது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இப்போது இருக்கும் மிகப்பெரிய கிளியை (kakapo) விட இது இரண்டு மடங்கு பெரியது

இந்த கிளி சுமார் 2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கக்கூடும் என்றும் சராசரி மனிதனின் அளவில் பாதிக்கு மேல் இருந்திருக்கும் என்றும் இந்த புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. அதாவது சுமார் 3½ அடி உயரத்தில் 7 கிலோ எடையில் இந்த கிளி இருந்திருக்கும் எனக் கூறப்படுகிறது.

கிளியின் இந்த அபாரத்தோற்றம் மற்றும் வலிமையை அங்கீகரிக்கும் வகையில் இதற்கு Heracles inexpectatus எனப் பெயரிட்டுள்ளனர் ஆய்வாளர்கள். கிரேக்க புராணங்களில் வரும் ஹெர்குலஸின் பெயரை மையமாக வைத்து இந்த பெயர் இதற்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இது எப்படி இருந்திருக்கும் என்ற மாதிரிபடமும் வெளியிடப்பட்டுளள்து.

இந்த கிளியின் உயரம்
இந்த கிளியின் உயரம்
PA Media

இப்போது இருக்கும் மிகப்பெரிய கிளியை (kakapo) விட இது இரண்டு மடங்கு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிறிய கிளிகளை உணவாக இது கொண்டிருக்கலாம் எனத் தெரிவிக்கின்றனர் அவர்கள். இதனால் 'ஸ்வாக்ஸில்லா' ("Squawkzilla") என்றும் செல்லமாக இதை அழைக்கின்றனர். இதெல்லாம் ராட்சத அளவா என சிலர் கேட்கலாம். ஆனால் யோசித்துப்பாருங்கள், உங்கள் உயரத்தில் பாதி இருக்கும் ஒரு கிளி பெரிய அலகுடன் உங்களை நோக்கி வந்தால் எப்படி இருக்கும்?