Published:Updated:

விமானத்தில் இந்தியா வந்த ஆப்பிரிக்க சிவிங்கிப்புலிகள் - இந்த முயற்சி பலனளிக்குமா?

சிவிங்கிப்புலியைப் பார்வையிடும் பிரதமர் மோடி ( twitter.com/narendramodi )

சவால்களைச் சமாளித்து இந்தியாவில் இவை பிழைத்துவிட்டால் புலி, சிங்கம், பனிச்சிறுத்தை (Snow Leopard), மேகச்சிறுத்தை (Clouded Leopard), சிறுத்தை, சிவிங்கிப்புலி என ஆறு வேட்டையாடும் பெரும்பூனை இனங்களும் வாழும் ஒரே நாடாக இந்தியா மாறும்.

விமானத்தில் இந்தியா வந்த ஆப்பிரிக்க சிவிங்கிப்புலிகள் - இந்த முயற்சி பலனளிக்குமா?

சவால்களைச் சமாளித்து இந்தியாவில் இவை பிழைத்துவிட்டால் புலி, சிங்கம், பனிச்சிறுத்தை (Snow Leopard), மேகச்சிறுத்தை (Clouded Leopard), சிறுத்தை, சிவிங்கிப்புலி என ஆறு வேட்டையாடும் பெரும்பூனை இனங்களும் வாழும் ஒரே நாடாக இந்தியா மாறும்.

Published:Updated:
சிவிங்கிப்புலியைப் பார்வையிடும் பிரதமர் மோடி ( twitter.com/narendramodi )
அரசியல் தலைவர்கள், பிசினஸ்மேன்கள் மட்டுமே தனி விமானத்தில் ஸ்பெஷலாக பயணம் செய்வார்கள் என்றில்லை. விலங்குகளுக்கும் அப்படி வாய்ப்பு கிடைக்கும். நமீபியா நாட்டிலிருந்து சனிக்கிழமை காலை அப்படித்தான் எட்டு சிவிங்கிப்புலிகள் இந்தியாவுக்கு வந்தன. `சிறுத்தை' என பேச்சுவழக்கில் அழைக்கப்பட்டாலும் Cheetah என்ற இந்த இனத்தை சிவிங்கிப்புலி அல்லது வேங்கை என்பதே பொருத்தமானது.

இந்திய விமானப்படையின் போயிங் 747 விமானத்தில் 10 மணி நேரம் பயணம் செய்து இந்தியாவுக்கு வந்திருக்கின்றன சிவிங்கிப்புலிகள். உலகிலேயே ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்துக்கு இப்படிப்பட்ட வேட்டை விலங்கு ஒன்று கொண்டு வரப்படுவது இதுவே முதல் முறை. ஆக்ரோஷமான விலங்குகளை விமானத்தில் அழைத்து வருவது சவாலான செயல்.

"பாதுகாப்பான மரப்பெட்டிகளில் அவற்றைக் கூட்டி வந்தோம். ஆபரேஷனுக்குக் கொடுப்பது போல மயக்க மருந்து கொடுக்காமல், லேசான கிறக்க நிலையில் வைத்து அவற்றைக் கூட்டி வந்தோம். அவை ஆரோக்கியமாக இருக்கின்றன" என்கிறார் டாக்டர் லாரி மார்க்கர். சிவிங்கிப்புலிகள் பற்றி உலக அளவில் அதிகம் அறிந்த நிபுணரான இவர், விமானத்தில் அவற்றுடன் வந்திருக்கிறார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியர் விமான நிலையத்தில் இந்த விமானம் வந்து இறங்கியது. அங்கிருந்து இந்த எட்டு சிவிங்கிகளும் இந்திய விமானப்படையின் இரண்டு ஹெலிகாப்டர்களில், குனோ தேசியப் பூங்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டன. மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் இந்தத் தேசியப் பூங்காவில் இரை விலங்குகளும் புல்வெளிகளும் அதிகம் இருப்பதால், இதுவே ஆப்பிரிக்கத் தாய்க்காட்டிலிருந்து அவை புகுந்த காடாக மாறுகிறது. இந்த எட்டு சிவிங்கிப்புலிகளில் ஐந்து பெண் விலங்குகள், மூன்று ஆண் விலங்குகள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தியக் காடுகளில் ஒரு காலத்தில் வேகமாப் பாய்ந்தோடி வேட்டையாடிய சிவிங்கிப்புலி இனம் சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோனது. நிலத்தில் வாழும் விலங்குகளிலேயே மிக வேகமாக ஓடக்கூடிய திறன் பெற்ற இதனை வேட்டையாடி வீழ்த்தியது மனித இனம். மீண்டும் அவற்றை இந்திய மண்ணில் உலாவச் செய்யும் முயற்சியே இது. சவால்களைச் சமாளித்து இந்தியாவில் இவை பிழைத்துவிட்டால் புலி, சிங்கம், பனிச்சிறுத்தை (Snow Leopard), மேகச்சிறுத்தை (Clouded Leopard), சிறுத்தை, சிவிங்கிப்புலி என ஆறு வேட்டையாடும் பெரும்பூனை இனங்களும் வாழும் ஒரே நாடாக இந்தியா மாறும்.

சிவிங்கிப்புலி
சிவிங்கிப்புலி
twitter.com/narendramodi
இந்தியாவில் ஏற்கெனவே Leopard எனப்படும் சிறுத்தைகள் இருக்கின்றன. அவற்றின் ஜெராக்ஸ் போலவே தெரிந்தாலும், Cheetah வேறு இனம். உடலில் தீர்க்கமான கரும்புள்ளிகளும், கண்களுக்குக் கீழே கண்ணீர் வடிவது போன்ற கறுப்புக்கோடும் இவற்றின் அடையாளங்கள்.
சிவிங்கிப்புலி
சிவிங்கிப்புலி
twitter.com/narendramodi

இப்போது முதல்கட்டமாக நமீபியா நாட்டிலிருந்து இந்த எட்டு சிவிங்கிகள் வந்துள்ளன. இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவிலிருந்தும் எட்டு வர உள்ளன. நம் வண்டலூர் போன்ற உயிரியல் பூங்காக்களிலிருந்து பிடித்து வராமல், அங்கு காடுகளில் வேட்டையாடி வாழ்ந்த சிவிங்கிகளையே கொண்டு வந்துள்ளனர். குனோ காடுகளில் சுமார் 500 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட காட்டுப்பகுதியை இவற்றுக்குத் தனி வாழிடம் ஆக்கியுள்ளனர். இதைச் சுற்றி 12 கி.மீ நீளத்துக்கு சுமார் ஒன்பது அடி உயர கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கம்பி வேலியின் மேற்பகுதியில் மின்கம்பிகளும் பொருத்தப்படுள்ளன. இந்தப் பகுதியை 24 மணி நேரமும் கண்காணிக்க சி.சி.டி.வி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இவ்வளவு பாதுகாப்புகளும் செய்வதற்குக் காரணம் இருக்கிறது. இந்தியாவிலேயே சிறுத்தைகள் அதிக எண்ணிக்கையில் வாழ்வது குனோ தேசியப் பூங்காவில்தான். வேங்கைகளைவிட அவை உடலமைப்பில் பெரியவை. அதேபோல புலிகளும் இங்கு அவ்வப்போது வருகின்றன. ஆப்பிரிக்காவிலிருந்து வந்த சிவிங்கிகளை இவை கொன்றுவிடக்கூடாது என்பதற்காகவே இந்த வேலி. வறண்ட ஆப்பிரிக்கக் காடுகளிலிருந்து வந்துள்ள சிவிங்கிப்புலிகள் இந்தியாவின் பசுமைக் காடுகளைப் பார்த்து குழப்பத்தில் ஆழ்ந்துவிடலாம். இங்கிருக்கும் வேட்டை விலங்குகளும், இரைகளும் அவற்றுக்குப் பழக வேண்டும். அவை தம்மை இந்தியக் காடுகளில் தகவமைத்துக்கொள்ள வேண்டும்.

சிவிங்கிப்புலியைப் படம் பிடிக்கும் பிரதமர் மோடி
சிவிங்கிப்புலியைப் படம் பிடிக்கும் பிரதமர் மோடி
twitter.com/narendramodi

சுமார் 50 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் ஒருபகுதியாக குனோ தேசியப் பூங்காவில் பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன. இதனால் அங்கு பசுமை பெருகி, மான்கள் உள்ளிட்ட இரை விலங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். இது புலிகளையும் மீண்டும் இந்தக் காட்டுக்கு வரவழைக்கலாம். புலிகளும் சிறுத்தைகளும் போட்டி போட்டு வாழ்ந்த காட்டில் இப்போது சிவிங்கிப்புலிகளும் வந்திருப்பது, இன்னும் கடுமையான போட்டியை ஏற்படுத்தலாம். இதையெல்லாம் தாண்டி அவை பிழைத்திருக்க வேண்டும்.

புலி, சிறுத்தை, சிவிங்கிப்புலி என வேட்டையாடும் உயிரினங்கள் அதிகரிக்கும்போது, அந்தக் காட்டுக்கு இயல்பாகவே பாதுகாப்பு அதிகரிக்கும். வேட்டைக்காரர்கள் வரத் தயங்குவார்கள். இதனால் காடு பாதுகாக்கப்படும், உயிரினங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். முன்பு ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்று பார்த்த சிவிங்கிகளை இங்கேயே பார்க்கலாம் என்பதால் சுற்றுலாவும் வளர்ச்சி அடையும். இப்படி நிகழ்ந்த முன்னுதாரணங்கள் ஏராளமாக உண்டு. சிவிங்கிகளின் வரவும் அப்படி நன்மைகள் செய்யட்டும்.