Published:Updated:

இந்த நொடியில் உலகின் அதிக வயதான வாழும் உயிரினம் இந்த `ஷார்க்' தான்!

Greenland shark ( Reddit/Damnthatsinteresting )

ஆமை, யானையைவிட அதிக வாழ்நாள்கள் வாழும் உயிரினம் கடல் வாழ் உயிரினங்கள் தாம்.

இந்த நொடியில் உலகின் அதிக வயதான வாழும் உயிரினம் இந்த `ஷார்க்' தான்!

ஆமை, யானையைவிட அதிக வாழ்நாள்கள் வாழும் உயிரினம் கடல் வாழ் உயிரினங்கள் தாம்.

Published:Updated:
Greenland shark ( Reddit/Damnthatsinteresting )

உலகில் அதிக நாள் வாழும் உயிரினம் எதுவென நினைக்கிறீர்கள்?

ஆமை?

யானை?

திமிங்கிலம்?

இவை மூன்றும் பொதுவாக அதிக வருடங்கள் வாழும் என்பது உண்மைதான். ஆனால், இந்த நொடி உலகின் அதிக வயதான உயிரினம் க்ரீன்லாந்து ஷார்க்தான். இதன் வயது 512 வருடங்கள் என 2017-ல் நேஷனல் ஜியாகிராஃபிக் சேனலில் வெளியான ஓர் ஆவணப்படம் சொன்னது. ஆனால், இதன் செல்களை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதன் வயது 500 எல்லாம் இருக்க வாய்ப்பில்லை. 272 தான் என்றார்கள். ஆனாலும் அதுதான் உயிருடன் இருக்கும் அதிக வயதான உயிரினம் என்ற ரெக்கார்டு மாறவில்லை. சராசரி வாழ்நாளைக் கணக்கிட்டாலும் இந்த வகை ஷார்க்குகள் திமிங்கிலம் மற்றும் யானைகளைவிட அதிக நாள்கள் வாழ்பவை. உண்மையில் ஜெல்லி மீன்கள்தான் அதிக ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடிய தன்மை உடையவை. ஆனால், அவற்றுக்கு ஆபத்து அதிகம் என்பதால், மற்ற உயிர்களால் உண்ணப்பட்டுவிடுகின்றன. இல்லையேல், 500 ஆண்டுகள் எல்லாம் ஜெல்லி மீனின் இளமைக்காலம் மட்டுமே.

ஆர்ட்டிக் மற்றும் வட அட்லான்டிக் பகுதிகளில் அதிகம் காணப்படும் இந்த க்ரீன்லாந்து ஷார்க்ஸ், 7 மீட்டர் வரை வளரும். 1200 எடை வரை வளரும் இவை மிகவும் மெதுவாக நகரும் உயிரினங்களில் ஒன்று. ஒரு நொடிக்கு ஓர் அடிதான் இவை நகரும்.