Published:Updated:

உயிருடன் பிடிபட்ட T-23 புலி... 21 நாள் தேடுதல் வேட்டையில் நடந்த பரபரப்பு திருப்பங்கள்!

நீலகிரியில் முதல் முறையாக ஒரு புலியை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடித்து வரலாற்றை மாற்றிக் காட்டியிருக்கிறது நமது வனத்துறை.

கும்கி மீதிருந்து துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை செலுத்த கால்நடை மருத்துவர்கள் தயாரானபோது கும்கி யானைகளைப் பார்த்து உறுமிக் கொண்டு 2 முறை தாக்க முயன்றது அந்தப் புலி. முதல் ஆபரேஷன் என்றாலும் புலியைக் கண்டு அசராமல் எதிர்த்து நின்றது உதயன் கும்கி யானை.

அருகிவரும் உயிரினமான வங்கப்புலியை பெருமைமிகு தேசிய விலங்காகக் கொண்டிருக்கும் இந்தியாதான் உலகில் காடுகளில் வாழும் மொத்த வங்கப்புலிகளில் 70 சதவிகித புலிகளுக்கு புகலிடமாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டின் முதுமலை, கேரளாவின் முத்தங்கா, கர்நாடகாவின் பந்திப்பூர் ஆகிய இந்த மூன்று வனமும் இணைந்த முச்சந்திப்பு பகுதியே உலகில் வங்கப்புலிகள் அதிகம் வாழும் பகுதியாக இருக்கிறது. இந்த வளத்தைத் தொடர மனிதர்களும் புலிகளும் பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கிறது.

டி23 புலி
டி23 புலி
கடந்த 7 ஆண்டுகளில் நீலகிரியில் மனிதர்களைத் தாக்கியதாக 3 ஆண் புலிகள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கும் நிலையில், முதல் முறையாக ஒரு புலியை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடித்திருக்கிறார்கள்.

மனிதர்களைத் தாக்கும் புலியை சுட்டுக் கொல்வது மட்டுமே ஒரே தீர்வாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், நீலகிரியில் முதல் முறையாக ஒரு புலியை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடித்து வரலாற்றை மாற்றிக் காட்டியிருக்கிறது நமது வனத்துறை.

மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிபட்ட டி23 புலி... 21 நாள் தேடுதல் வேட்டையில் நடந்த பரபரப்பு திருப்பங்களை வீடியோ வடிவில் காண...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு