Published:Updated:

சேலத்தில் ரயில்வே ட்ராக்கில் அடிப்பட்ட நாய்; முதலுதவி அளித்த டிராபிக் போலீஸ்!

கால் முறிவு ஏற்பட்ட நாய்

சேலத்தில் ரயிலில் அடிப்பட்டு கால் முறிவு ஏற்பட்ட நாய்க்கு ட்ராபிக் போலீஸ் ஒருவர் முதலுதவி செய்யும் வீடியோ வைரலானது.

சேலத்தில் ரயில்வே ட்ராக்கில் அடிப்பட்ட நாய்; முதலுதவி அளித்த டிராபிக் போலீஸ்!

சேலத்தில் ரயிலில் அடிப்பட்டு கால் முறிவு ஏற்பட்ட நாய்க்கு ட்ராபிக் போலீஸ் ஒருவர் முதலுதவி செய்யும் வீடியோ வைரலானது.

Published:Updated:
கால் முறிவு ஏற்பட்ட நாய்
சேலம் மாநகர போக்குவரத்து காவலராக பணியாற்றி வருபவர் அய்யாவு. இவர் காவல்துறையில் சுமார் 30 வருட காலமாக பணியாற்றி வருகிறார். தற்போது மூத்த காவல் அதிகாரியாக இருந்து வருகிறார்.

சமீபத்தில் சேலம், பொன்னம்மாபேட்டை ரயில்வே ட்ராக் அருகே போக்குவரத்து சீர்செய்யும் பணியில் ஈடுப்பட்டிருந்தபோது, ரயில் தண்டவாளத்தில் நாய் ஒன்று அடிப்பட்டு இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்மூலம் அவர் நாய் அடிப்பட்டுக்கிடக்கும் இடத்திற்கு சென்று பார்த்தபோது, அந்த நாய் சற்று தலையை தூக்கி பார்த்துள்ளது. உயிர் இருப்பதைப் பார்த்து அவர் உடனே தனது கைகளில் உள்ள கைக்குட்டையை எடுத்து தண்ணீரில் நினைத்து, அதன் மேலுள்ள ரத்தங்களைத் துடைத்துள்ளார்.

பின்னர், கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதானால் அதனால் எழுந்து நடக்க முடியாத நிலை இருந்தது. பின்னர் அவர் அளித்த முதலுதவி மூலம் சற்று நேரத்தில் அந்த நாய் கொஞ்சம் சுய நினைவு கிடைத்து எழுந்து நடக்க ஆரம்பித்துள்ளது. இருந்தாலும் அவருக்கு அந்த நாயின் நிலைக்கண்டு மனம் தாங்காததால் தன்னுடைய செல்போனின் புளுக் கிராஸ் அமைப்பினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்மூலம் அந்த நாயை ப்ளூ கிராஸ் அமைப்பினர், சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

போக்குவரத்து காவலர் அய்யாவு
போக்குவரத்து காவலர் அய்யாவு

இதுகுறித்து போக்குவரத்து காவலர் அய்யாவு பேசியபோது, “சேலம் டு விருத்தாச்சலம் செல்லும் ரயிலில் அடிப்பட்டு ஒரு நாய் ட்ராக்குல செத்து கெடக்குதுனு தான் அந்த வழியா போனவங்க சொன்னாங்க. நான் அதை எடுத்து அடக்கம் பண்ணலாம்னு தான் போனேன். ஆனா அங்க அந்த நாய் என்ன பார்த்த உடனே கொஞ்சம் தலையை தூக்கி காண்பித்தது.

எனக்கு அதை அப்படியே விட்டுட்டுபோக மனசு இல்ல. அதனால தான் அதுக்கு முதலுதவி கொடுத்தேன். நாய் ட்ராக்ல செத்து கிடக்குதுனு அப்படியே விட்டுட்டு போயிருந்தா அந்த வழியா அடுத்தடுத்து ரயில் வரதுக்கு வாய்ப்பு இருக்கு, ரயில் விபத்து ஏற்பட்டுவிடும் என்றுதான் இதை பண்ணுனேன். இப்போ அந்த நாய் நல்ல இருக்குதுனு புளுக் கிராஸ் அமைப்பினர் சொன்னாங்க. இன்னைக்கு மனிதனுக்கு மனிதன் உதவி செய்யும் குணம் இல்லாம போச்சுங்க அந்தவகையில் எங்க வேலை இவ்வளவுதான்னு வரம்பு இல்லங்க, ஆபத்துல இருக்குற யாராக இருந்தாலும் அந்த இடத்துல முதலில் உதவி செய்யும் மனப்பான்மையோட போறது போலீஸ்காரங்க மட்டும்தான்” என்றார்.