Published:Updated:

`வீடியோ கமென்ட்ரி; கம்பு, கட்டைகளால் தாக்குதல்!' - வாழ்விடத்தில் புலியை அடித்தே கொன்ற மக்கள்

கலிலுல்லா.ச

மேற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிலிபிட் மாவடத்தில், கிராம மக்கள் சேர்ந்து புலி ஒன்றை அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புலி
புலி

உத்தரப்பிரேசத்தின் தலைநகரான லக்னோவிலிருந்து 240 கிலோமீட்டர்தொலைவில் இருக்கிறது, பிலிபிட் மாவட்டம். அதன் அருகில் இருக்கும் மடைனா கிராம மக்கள், புலி ஒன்றை கம்புகளால் சரமாரியாக அடிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ காட்சியில், `அந்த கிராமத்தைச்சேர்ந்தவரை புலி தாக்கியதால்; அடிக்கின்றனர்’ என்று அங்கிருக்கும் ஒருவரின் குரல் வீடியோவில் ஒலிக்கிறது. 5 வயதான அந்தப் பெண் புலியை கிராம மக்கள் தொடர்ந்து தாக்கியதால், புலி சம்பவ இடத்திலே உயிரிழந்தது.

உயிரிழந்த புலி
உயிரிழந்த புலி

தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் புலியை மீட்டு கொண்டுசெல்ல முயன்றனர். ஆனால், கோபத்துடன் இருந்த கிராம மக்கள், அவர்களை அங்கிருந்து கொண்டு செல்லவிடவில்லை. பின்னர், அங்கிருந்து புலியை மீட்டு மருத்துவமனைக்குக்கொண்டு சென்றும் பலனில்லாமல், புலி இறந்துவிட்டது. இது தொடர்பாக 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டு 4 பேர் கைதுசெய்யபட்டுள்ளனர். புலியின் விலா எலும்பு மற்றும் கால்கள் உடைக்கப்பட்டுள்ளன.

நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கிராமத்தை ஒட்டிதான் புலிகளின் வாழ்விடம் அமைந்துள்ளது. அதிகாரிகள் பல முறை, `புலிகள், அதன் வாழ்விடத்திலிருந்து விலகி வராது, அதேபோல நீங்களும் புலியைத் தொந்தரவு செய்ய வேண்டாம்' என எச்சரித்துள்ளனர்.

கிராம மக்கள்
கிராம மக்கள்

ஆனால், அங்கிருக்கும் ஒருவர், அந்த அறிவுரைகளை மதிக்காமல் புலி இருக்கும் பகுதிக்குச் சென்றதால், புலி அவரைத் தாக்கியுள்ளது. 2012-ம் ஆண்டிலிருந்து 16 புலிகள் மற்றும் 3 சிறுத்தைப்புலிகள் உயிரிழந்துள்ளன. நோய்கள் தாக்கித்தான் பெரும்பலான இறப்புகள் நேர்ந்துள்ளது. இப்படி, மனிதர்களால் தாக்கப்பட்டு உயிரிழக்கும் நிகழ்வுகளில் இதுதான் முதல்முறை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.