Published:Updated:

காட்டு ராஜா டு அரிசி ராஜா... நடந்தது என்ன..? ஒரு டீடெயில் டைம்லைன்!

அரிசி ராஜா
அரிசி ராஜா

`யானைகள் அரிசி, பருப்பை சாப்பிடுவது அவற்றுக்கும் நல்லதல்ல. நமக்கும் நல்லதல்ல. காட்டு ராஜாவான யானையை, அரிசி ராஜாவாக மாற்றியிருப்பது அவலத்தின் உச்சம்.’

யானை மனித மோதல்... மீண்டும் ஒரு யானை மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த முறை அரிசி ராஜா என்றழைக்கப்படும் 18 வயது ஆண் யானை. கோயம்புத்தூர், எட்டிமடையை ஒட்டிய வனப்பகுதிதான் அந்த யானை பிறந்து வளர்ந்த பகுதி.

அரிசிராஜா
அரிசிராஜா

2017-ம் ஆண்டு நடந்த முதல் சம்பவத்தில் தொடங்கி, இப்போது வரை அரிசி ராஜா தொடர்பாக நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பு இதோ...

2017 ஜூன் 2-ம் தேதி,

அரிசிராஜா
அரிசிராஜா

கோயம்புத்தூர், வெள்ளலூர் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த காயத்ரி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த நாகரத்தினம், ஜோதிமணி, பழனிசாமி ஆகிய நான்கு பேரை மிதித்துக் கொன்றது ஒரு காட்டு யானை. அதன் தாக்குதலால் வனத்துறை ஊழியர்கள் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். இதையடுத்து, அதே நாளில் மயக்க ஊசி போட்டு அந்த யானையைப் பிடித்தனர் வனத்துறையினர்.

ஜூன் 3-ம் தேதி,

அரிசி ராஜா
அரிசி ராஜா

பிடிபட்ட அந்தக் காட்டு யானை, டாப்ஸ்லிப் அருகே உள்ள வரகழியாறு வனப்பகுதியில் விடப்பட்டது.

பிரச்னை முடிந்தது என்று வனத்துறையினர் பெருமூச்சு விட்ட நிலையில், அதே யானையால் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது.

அரிசி ராஜா
அரிசி ராஜா

பொள்ளாச்சி அருகே நவமலை, அர்த்தநாரிபாளையம், பருத்தியூர் சுற்றுவட்டார கிராமங்களில் விளை நிலங்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்துவதாக அந்த யானைமீது புகார்கள் எழுந்தன.

2019, மே 25-ம் தேதி

நவமலைப் பகுதியில், யானை தாக்கியதில் ரஞ்சனி என்ற ஏழு வயது சிறுமி உயிரிழந்தார்.

`நம்மிடம் தொழில்நுட்ப வசதி இல்லை!'- வால்பாறை குட்டி யானை மரணம் குறித்து வனத்துறை

மே 26-ம் தேதி

சிறுமி உயிரிழந்த அடுத்த நாள், அதே பகுதியைச் சேர்ந்த மாகாளி என்ற முதியவர் இந்த யானை தாக்கியதில் உயிரிழந்தார்.

மே 29-ம் தேதி

பிரச்னைக்குரிய காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக, சுயம்பு மற்றும் பரணி என்ற இரண்டு கும்கி யானைகள் அழைத்துவரப்பட்டன.

நவம்பர் 9-ம் தேதி

அரிசி ராஜா
அரிசி ராஜா

அர்த்தநாரிபாளையம் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவரது தோட்டத்துக்குள் புகுந்து, பயிர்களைச் சேதப்படுத்தியது. ராதாகிருஷ்ணன் அதை விரட்ட முயற்சி செய்துள்ளார். ஆனால், யானை ஆக்ரோஷமாக தாக்கியதில் ராதாகிருஷ்ணன் உயிரிழந்தார். மேலும், இந்த யானை தாக்கி, திருமாத்தாள் என்ற பெண் காயமடைந்தார்.

நவம்பர் 10-ம் தேதி

அரிசி ராஜா
அரிசி ராஜா

பிரச்னைக்குரிய யானையை உடனடியாகப் பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே தினம், அந்த யானையைப் பிடிப்பதற்கான பணியைத் தொடங்கியது வனத்துறை.

நவம்பர் 11-ம் தேதி

கலீம்
கலீம்

ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் மாரிமுத்து தலைமையில், நான்கு பேர் அடங்கிய மருத்துவர் குழு, 70-க்கும் மேற்பட்ட வனத்துறை களப்பணியாளர்களுடன் அந்த யானையைத் தேடும் பணியில் ஈடுபட்டது. அந்த யானைக்கு மிகவும் பிடித்த ரேஷன் அரிசியை, அது அடிக்கடி வரும் பகுதிகளில் வைத்தனர். டாப்ஸ்லிப்பில் இருந்து கலீம், பாரி என்ற இரண்டு கும்கிகள் வரவழைக்கப்பட்டன. ஆனால், அன்றைய தினம் யானையைப் பிடிக்க முடியவில்லை.

நவம்பர் 12-ம் தேதி

வனத்துறை
வனத்துறை

11-ம் தேதி நள்ளிரவு கனமழை பெய்ததால், யானையைத் தேடும் பணியில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளில் தேடியும் யானையைக் கண்டறிய முடியவில்லை. இதனிடையே, பாரி என்ற கும்கிக்கு மதம் பிடித்துவிட்டதால், அந்த யானை டாப்ஸ்லிப்புக்கு அழைத்துச் செல்லப்பட்டது. பாரிக்குப் பதிலாக, கபில்தேவ் என்ற கும்கி யானை அழைத்துவரப்பட்டது. இரவு அந்த யானையைப் பார்த்தும், பிடிக்க முடியவில்லை.

நவம்பர் 13-ம் தேதி,

டாக்டர் பிரகாஷ்
டாக்டர் பிரகாஷ்

யானையைப் பிடிக்கும் பணி தீவிரமடைந்தது. இரவு 10.30 மணியளவில், ஓசூர் கால்நடை மருத்துவர் பிரகாஷ் அந்த யானைக்கு முதல் மயக்க ஊசியைச் செலுத்தினார். சிறிது தூரம் ஓட்டம்பிடித்த யானை, ஒரு பள்ளத்தில் மறைந்துவிட்டது.

நவம்பர் 14-ம் தேதி

கபில்தேவுடன் அரிசி ராஜா
கபில்தேவுடன் அரிசி ராஜா

நள்ளிரவு 12 மணியளவில், கயிறுகள் கட்டப்பட்டு, கலீமின் உதவியுடன் அந்த யானை பள்ளத்திலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டது. ஆனால், காட்டு யானை தொடர்ந்து ஆக்ரோஷமாகவே காணப்பட்டது. கும்கிகளின் கேப்டனான கலீம் சற்று அசந்த நேரத்தில், காட்டு யானை அதைத் தாக்கிவிட்டது. இதில், கலீமின் தும்பிக்கையில் லேசான ரத்தக்காயம் ஏற்பட்டது. பதிலுக்கு, காட்டு யானையைத் தனது தந்தத்தால் தூக்கி மிரட்டி அமைதிப்படுத்தியது கலீம். காட்டு யானையை லாரியில் ஏற்றுவதற்கான பாதை போடப்பட்டது.

காலை 8 மணி

கலீம், அரிசி ராஜா
கலீம், அரிசி ராஜா

நீண்ட முயற்சிக்குப் பிறகு பாதை போடப்பட்டு, கும்கியின் உதவியுடன் காட்டு யானை லாரியில் ஏற்றப்பட்டது.

மாலை 4.35 மணி

அரிசி ராஜா
அரிசி ராஜா

டாப்ஸ்லிப் வரகழியாறு பகுதிக்கு அழைத்து செல்ல, காட்டு யானையை மரக்கூண்டில் அடைத்தனர்.

இந்த யானையை சப்ப காலன், கோன கொம்பன், மொன்ன வாலு எனப் பல பெயர்களில் மக்கள் அழைக்கிறார்கள். சில வனத்துறை ஊழியர்களும் ஊடகங்களும்தான் அரிசி ராஜா என்றழைக்கின்றனர்.

ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் மாரிமுத்து, 'வனப்பகுதியும், விவசாய நிலமும் மிக அருகில் இருக்கும் இடங்களில், இதுபோன்ற பிரச்னைகள் இருக்கின்றன. இந்தப் பகுதிக்கு வேறு சில யானைகளும் வருகின்றன.

அரிசி ராஜா
அரிசி ராஜா

ஆனால், அந்த யானைகளால் பயிர்களுக்கு சேதம் ஏற்படுகிறதே தவிர, உயிர்ச் சேதம் ஏற்படுவதில்லை. உயிர்ச் சேதம் ஏற்படுத்துவதால்தான் இந்த யானையைப் பிடித்துள்ளோம்'' என்றார்.

இந்த யானை கோவையில் இருக்கும்போது, உணவுக்காக வனத்தை விட்டு வெளியில் வந்துள்ளது. அப்போது, ஊர் மக்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் கற்களால் அடித்துள்ளனர். இது மிகவும் தவறான அணுகுறை. அதன் பாதை அடைக்கப்படும்போதும், உணவு கிடைக்காதபோதும், அவை ஊருக்குள்தானே வரமுடியும்.

அரிசி ராஜா
அரிசி ராஜா

அப்படி வரும் யானைகளைக் கற்களால் அடித்ததால், யானை மிகவும் ஆக்ரோஷமாகிவிட்டது. எத்தனை நாள்களுக்குத்தான் அதுவும் அடி வாங்கிக்கொண்டே இருக்கும். அதனால்தான், மனிதர்கள்மீது வெறுப்படைந்து தாக்கத் தொடங்கியது. இங்கேயும், நாம்தான் குற்றவாளிகள்.

யானைகள் அரிசி, பருப்பை சாப்பிடுவது அவற்றுக்கு நல்லதல்ல. நமக்கும் நல்லதல்ல. காட்டு ராஜாவான யானைகளை, அரிசி ராஜாவாக மாற்றுவது மனிதர்கள்தான். இது அவலத்தின் உச்சம். குற்றம் செய்தவர்களைவிட, அதைத் தூண்டியவர்களுக்குத்தான் தண்டனை அதிகம் கொடுக்க வேண்டும்.

அரிசி ராஜா
அரிசி ராஜா

அந்த வகையில், அதிக தண்டனை கிடைக்கவேண்டியது மனிதர்களுக்குத்தான்'' என்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்.

சின்னத்தம்பி, அரிசிராஜா எனத் தொடர்ந்து ஆண் யானைகள் முகாமுக்கு மாற்றப்படுவது சூழலுக்கு உகந்தது அல்ல.

அடுத்த கட்டுரைக்கு