Published:Updated:

கையைக் கடித்த குட்டியானை; வாசனை `கில்லி’ சத்தியன் யானை – 25 ஆண்டுகால அனுபவம் பகிரும் டாக்டர் அசோகன்!

டாக்டர் அசோகன்
News
டாக்டர் அசோகன்

`யானைகள் படுத்துவிட்டால், அதை எழுப்புவது மிகவும் கடினம். படுத்துக் கொண்டிருக்கும்போது யானையின் இதயத்துடிப்பு இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். முதலில் அதற்கு மனரீதியாக நம்பிக்கை கொடுத்து, எழுப்பி நிற்க வைக்க வேண்டும்.’

பரபரப்பான உலகில் சக மனிதர்களின் பிரச்னைகளையும் தேவைகளையுமே இங்கு பலரால் புரிந்துகொள்ளப்படுவதில்லை. அப்படி இருக்கும்போது, யானைகளின் பிரச்னை குறித்து கவலைப்படுபவர்கள் சொற்பமே!

அசோகன்
அசோகன்

ஒருவேளை, யானையின் பிரச்னையைப் புரிந்துகொண்டு, கவலைப்பட்டாலும், அதற்கான தீர்வு கொடுப்பவர்கள் அரிதினும் அரிதானவர்களே! அப்படியான ஓர் அரிதான யானை மருத்துவர்தான் அசோகன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வன கால்நடை மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார் அசோகன். நீலகிரி, கோவை, ஈரோடு காடுகளில் பல யானைகளுக்குச் சிகிச்சை அளித்திருக்கிறார்.

அசோகன்
அசோகன்

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக யானைகளுடன் பயணித்து வருகிறார். `டாக்டர் கே’ என்றழைக்கப்படும் யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் சீடர்தான் இந்த அசோகன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யானை ஒன்றுக்கு சிகிச்சையளித்துக்கொண்டிருந்த மருத்துவர் அசோகனை சந்தித்தேன்.

"கால்நடைத்துறை மருத்துவராகப் பணியாற்றி வந்த நான், 1996-ம் ஆண்டுதான் வனத்துறையில் இணைந்தேன். சாதாரண விலங்குகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கும், வனவிலங்குகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

அசோகன்
அசோகன்

முதுமலை புலிகள் காப்பகத்தில் பணியிலிருந்தபோது, டாக்டர் கிருஷ்ணமூர்த்தி மூலம் யானைகள் குறித்த புரிதலை அடைந்தேன். யானைகள் குறித்த தன்னுடைய ரெக்கார்டுகள் சிலவற்றை அவர் எனக்கு அளித்தார். அவர் ஓர் அறிவுப் பெட்டகம்.

குறிப்பாக, யானைகள் படுத்துவிட்டால், அதை எழுப்புவது மிகவும் கடினம். படுத்துக்கொண்டிருக்கும்போது யானையின் இதயத்துடிப்பு இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். முதலில் அதற்கு மனரீதியாக நம்பிக்கை கொடுத்து, எழுப்பி நிற்க வைக்க வேண்டும்.

அசோகன்
அசோகன்

கொஞ்சம் விட்டாலும், யானையின் உயிருக்கே ஆபத்தாகிவிடும். இதுவரை, உயிருக்குப் போராடிய பத்துக்கும் மேற்பட்ட யானைகளைக் காப்பாற்றியிருக்கிறேன்.

1998-ம் ஆண்டை என் வாழ்வில் மறக்கவே முடியாது. கேரள மாநிலம், வயநாட்டில் ஒரு மக்னா யானை மிகவும் ஆக்ரோஷத்துடன் வலம் வந்தது. அதனால், கேரள – தமிழக எல்லையில் 22 பேர் பலியாகிவிட்டனர்.

கிருஷ்ணமூர்த்தி யானை
கிருஷ்ணமூர்த்தி யானை

6 டன் எடை, 11 அடி உயரம் என்று பிரமாண்டமாகக் காட்சியளித்த அந்த யானையைப் பார்த்து, தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களும் அலறிவிட்டன. கேரள அரசாங்கம் அந்த யானையை சுட்டுபிடிக்க சொல்லி உத்தரவிடுகிறது.

யானையின் இயல்புபற்றி டாக்டர் அசோகன் சொல்லும் 4 விஷயங்கள்!
1. யானைகள் படுத்துவிட்டால், அதை எழுப்புவது மிகவும் கடினம்.
2 . படுத்துக்கொண்டிருக்கும்போது யானையின் இதயத்துடிப்பு இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.
3. யானைகளுக்கு மோப்ப சக்தி அதிகம். வாசனையை வைத்தே நம்மை கண்டறிந்துவிடும்.
4. யானைகள் யாரையும் வேண்டுமென்று அடிக்காது. பழகிவிட்டால், அதைப்போல ஓர் அன்பான உயிர் இந்த உலகில் வேறில்லை.

ஆனால், அந்த யானையை உயிருடன் பிடிக்கும் சவாலான ஆபரேஷனில் களமிறங்கியது தமிழக வனத்துறை. ஒரு மாதம் அந்த யானை குறித்து ஆய்வு செய்தோம். ஓர் அதிகாலை நேரம் மக்னாவுக்கு மயக்க ஊசி செலுத்தினோம்.

கிருஷ்ணமூர்த்தி யானை
கிருஷ்ணமூர்த்தி யானை

தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு கும்கிகள் உதவியுடன் நடந்தே கொண்டுவந்தோம். அதன் உடலில் 37 துப்பாக்கிக் குண்டுகள் இருந்தன. அப்படியிருந்தும் அந்த யானையைக் கட்டுப்படுத்த ஆறு கும்கி யானைகள் தேவைப்பட்டன.

டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் ஆலோசனைபடி, மக்னாவுக்கு சிகிச்சை அளித்து வந்தோம். காலை 8 மணியிலிருந்து 10 மணி வரை மட்டுமே சிகிச்சை அளிக்க அனுமதிக்கும். அந்த நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டோம். நாங்கள் நெருங்கிப் பழகப் பழக அதன் குணாதிசயங்களில் மாற்றம் தெரிந்தது.

அசோகன்
அசோகன்

ஒருமுறை சிகிச்சை அளிக்கும்போது, நான் அதன் காலடியில் விழுந்துவிட்டேன். ஆனால், அந்த யானை என்னை எதுவும் செய்யவில்லை. கிருஷ்ணமூர்த்தி சாரின் நினைவாக, அந்த யானைக்கும் அவரது பெயரையே வைத்துவிட்டோம்.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாகிவிட்டன. ஆனால், இப்போதும் அந்த யானைக்கு என்னை நன்கு தெரியும். நான் சென்றால், பக்கத்தில் வந்து நிற்கும். யானைகளுக்கு மோப்ப சக்தி அதிகம்.

அசோகன்
அசோகன்

வாசனையை வைத்தே நம்மை கண்டறிந்துவிடும். முதுமலை யானைகள் முகாமில் மிகவும் அமைதியான யானையாக இருக்கிறது கிருஷ்ணமூர்த்தி.

சத்தியமங்கலத்தில் தாயிடமிருந்து பிரிந்த ஓர் குட்டியை வளர்த்து, அதற்கு `சத்தியன்' என்று பெயர் வைத்தோம். கடம்பூரில் தாய் யானை உடல்நலம் குன்றி படுத்துவிட்டது. அதன் குட்டி யானை அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தது.

அசோகன்
அசோகன்

நாங்கள் சிகிச்சை அளிக்க தொடங்கியவுடன் என் அருகிலேயே நின்றுவிட்டது. சிகிச்சை முடிந்து தாயும் குட்டியும் இணைந்து வனத்துக்குள் சென்ற காட்சியை மறக்கவே முடியாது.

அதே கடம்பூரில் ஓர் ஆண் யானை குளிரில் உறைந்து படுத்துவிட்டது. அதன் உடலே கட்டை போல ஆகிவிட்டது. அந்த யானை கிட்டத்தட்ட இறக்கும் தருவாயில் இருந்தது. பிறகு, அதன் உடலை உருட்டிக்கொண்டே இருந்தோம். நெருப்பு மூட்டி சூடுபடுத்தினோம். கடைசியில், அந்த யானையை வெற்றிகரமாகக் காப்பாற்றினோம்.

சின்னத்தம்பி ஆபரேஷனில் அசோகன்
சின்னத்தம்பி ஆபரேஷனில் அசோகன்

சரியான நேரத்தில், முறையான சிகிச்சையளித்தால் எப்படிப்பட்ட யானையையும் காப்பாற்றிவிடலாம். இந்தியாவில் யானைகளை அதிகம் காப்பாற்றியது நாங்கள்தான்.

யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குறித்து வாசித்துக்கொண்டே இருப்பேன். சிகிச்சைக்காக புதிய புதிய கருவிகளை வாங்கிக் கொண்டே இருப்பேன். நாட்டிலேயே யானைகளுக்காக ஆம்புலன்ஸ் இருப்பது, சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில்தான்.

அசோகன்
அசோகன்

யானைக்கு வரும் பல்வேறு வகையான குடல்புழுக்கள் குறித்து ஆவணப்படுத்தி வைத்திருக்கிறேன்.

ஒருமுறை, தாய் யானைக்கு சிகிச்சை அளிக்கும்போது, குட்டி யானை கடித்ததில் என்னுடைய கையில் இருந்து சதை வெளியில் வந்துவிட்டது. இப்படி, யானைகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் நிறைய சவால்களும் இருக்கின்றன.

குட்டி யானைக்கு சிகிச்சை
குட்டி யானைக்கு சிகிச்சை

கிருஷ்ணமூர்த்தி தொடங்கி சின்னத்தம்பி வரை காட்டு யானைகளைப் பிடிக்கும் பல ஆபரேஷன்களில் பங்காற்றியுள்ளேன்.

யானைகள் யாரையும் வேண்டுமென்று அடிக்காது. பழகிவிட்டால், அதைப்போல ஓர் அன்பான உயிர் இந்த உலகில் வேறில்லை" என்றார்.

அசோகன்
அசோகன்

பெரும்பாலான மனிதர்கள் யானைகளுக்குச் செய்யும் துரோகங்களுக்கு, அசோகன் போன்ற நல் உள்ளங்கள் மூலம் பிராயசித்தம் செய்யப்பட்டு வருகிறது.