Published:Updated:

கடலில் வாழ்ந்தனவா யானைகள்!? ஆச்சர்ய ரகசியம் #CelebrateElephants

இன்று பேருயிராக அறியப்படும் யானை, ஒருகாலத்தில் பன்றி உயரத்துக்குத்தான் இருந்தது என்று சொன்னால் நம்புவீர்களா? ஆனால், அதுதான் உண்மை.

யானை
யானை ( Pixabay )

யானைகள்... இன்று இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் அதிகமாகப் பேசப்படும் ஓர் உயிரினம். வரலாற்றில் எப்போதுமே ஆச்சர்யங்கள் நிறைந்த, மனிதன் பிரமித்துப் பார்க்கும் பெருமைவாய்ந்த ஓர் உயிரினமும் யானைகள்தான்.

ஆசிய யானைகள், இலங்கை
ஆசிய யானைகள், இலங்கை
Pixabay
``புலிகள் ஊருக்குள் வருவது ஏன்?!" - விலங்குகளைப் பற்றி  பகிரும் போட்டோகிராபர்

ஆனால் தற்போதைய சூழலில், சாலை மற்றும் ரயில் விபத்துகள், மனித-யானை எதிர்கொள்ளல் போன்ற சிக்கல்களால் அதிக பிரச்னைகளையும் அழிவையும் யானைகள் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இந்திய நிலப்பரப்பில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருப்பது ஒருபக்கம் ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால், அதிகரிக்கும் எண்ணிக்கைக்குத் தகுந்த வகையில் அவற்றுக்கான வாழிடங்கள் இல்லை. இது, இந்தப் பேருயிர்களின் இருப்புக்குப் பெரும் பிரச்னையாக உள்ளது. யானைகள் இருந்தால்தான் காடுகள் பாதுகாக்கப்படும். யானைகள்தான் காடுகளை உருவாக்குகின்றன என்று நாம் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருக்கிறோம். ஒரு காட்டையே உருவாக்கும் வல்லமைமிக்க இந்த யானைகள், எப்படித் தோன்றின என்றும் யானைகளின் பரிணாம வளர்ச்சியைப் பற்றியும் தெரியுமா?!

இன்று பேருயிராக அறியப்படும் இவை, ஒருகாலத்தில் பன்றியின் உயரத்துக்குத்தான் இருந்தன என்று சொன்னால் நம்புவீர்களா! நம்ப மாட்டீர்கள். ஆனால், அதுதான் உண்மை.
African Elephant
African Elephant
Pixabay

ஆசிய மற்றும் ஆப்பிரிக்க யானைகள் என்று யானைகளில் இரண்டு துணை இனங்கள்தான் இன்று, உலக அளவில் வாழ்கின்றன. இந்த இரண்டு யானைகளுக்குமே பொதுவான ஒரு மூதாதை உண்டு. அதன் பெயர் மோரித்தெரியம் (Moeritherium). இப்போது இருப்பது போன்ற நீண்ட தும்பிக்கை அதற்கு இருக்கவில்லை. அதேசமயம், உருவத்திலும் இன்றைய யானைகளைப் போல் பிரமாண்டமாக இல்லை. பன்றியின் உயரத்திற்கு, கிட்டத்தட்ட பன்றியைப் போலவே தோற்றத்தோடுதான் அவை வாழ்ந்தன. முன் ஊழிக்காலமான ஈயோசீன் (Eocene) காலத்திற்கு முன்னதாகவே இவை தோன்றிவிட்டன. ஈயோசீன் காலத்தில் தன் பரிணாம வளர்ச்சியைத் தொடங்கிய மோரீத்ரியம், இடைப்பருவ ஊழிக்காலத்தில் (Oligocene) பெரிய உருவத்தை அடைந்தது. ஈயோசீன் காலத்தில் தொடங்கிய இந்தப் பரிணாம வளர்ச்சியில் பல்வேறு யானை இனங்கள் பிரிந்து வந்தன. அவை பல்வேறு காலகட்டங்களில் நடந்த பேரழிவுகளில் தகவமைத்திருக்க முடியாமல் அழிந்தும்விட்டன.

இப்போது வாழும் இரண்டு துணை இனங்களுக்கும் முன்னதாக, இயற்கை வரலாற்றில், மிகச் சமீபத்தில் அழிந்த மிகப் பெரிய யானை இனமான மம்மூத் உட்பட, அனைத்து யானை இனங்களுக்குமே இந்த மோரீத்ரியம்தான் மூதாதையராகக் கருதப்படுகிறது. மம்மூத் என்ற பேரானை, சமீபத்தில் அழிந்துபோன பேருயிர். யானைகளைப் போல் மோரித்தீரியத்தில் இருந்து பிரிந்துவந்தது. அவை அழிந்ததற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உண்டு. ஒன்று அதிக அளவு வேட்டை, அது வாழ்ந்த பகுதிகளில் மனிதர்களின் நாகரிக வளர்ச்சி அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. அவர்கள், அதை உணவாகப் பார்த்தார்கள். இன்னொரு காரணம், அவற்றை அழிப்பதை வீரத்திற்கான அடையாளமாகக் கருதியதால் வேகமாக அழிந்தன. இப்படி மனிதர்களால் அழிக்கப்பட்ட முதல் யானை இனம், மம்மூத். இப்போது, மீதமிருக்கும் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க யானைகளும் அதே ஆபத்தைச் சந்திக்கின்றன.

Evolution of Elephants
Evolution of Elephants
Q-files/ Age of Mammals
மனிதன் - யானை மோதலுக்குத் தீர்வு கண்டுபிடித்த 9-ம் வகுப்பு மாணவன்! #CelebrateElephants

ஆப்பிரிக்காவில் முதலில் தோன்றிய யானைகளின் பரிணாம வளர்ச்சிக் காலப்போக்கில், அவற்றைப் பூமியின் பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயரவைத்தது. அப்படிப் பயணித்த யானைகள், பல்வேறு துணை இனங்களாகவும் பிரிந்தன. ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பிய யானைகள், நிலவழிப் பயணத்தின் மூலம் ஆசியாவில் பரவியதற்கான தடங்கள் இன்றளவும் தென்படுகின்றன.

நிலவழித் தொடர்புள்ள பகுதிகளில் மட்டும்தான் அவை வாழ்கின்றனவா என்றால் இல்லை. பல்வேறு தீவுகளிலும் யானைகள் வாழ்கின்றன. உதாரணமாக, தென்கிழக்கு ஆசியாவின் தீவுக்கூட்டங்களில் அவை வாழ்கின்றன. இது ஒருபக்கம், யானைகள் நீர்வாழ் உயிரினமாக இருந்து, அவை அங்கும் பரவியிருக்கலாம் என்ற கருத்தை முன்வைக்கிறது. யானைகள் நன்றாக நீந்தக்கூடிய உயிரினம். குட்டிகள் பிறந்தவுடனே தும்பிக்கை உட்பட அனைத்து உறுப்புகளையும் பயன்படுத்தி நன்றாகவே நீந்தக்கூடியவை. இது மட்டுமின்றி, உடல் அமைப்பும் இந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. பாலூட்டிகளுக்கு இருப்பதைப்போல் அவற்றின் விதைப்பைகள் வெளியே தெரியும்படியாக இருக்காது. யானைகளின் வயிற்றுக்குள்தான் இருக்கும். கடல்வாழ் உயிரினங்களுக்கும் அப்படித்தானிருக்கும்.

கடலில் அதிகமான அளவில் தட்பவெப்பநிலை மாற்றம் நிகழும். நீரோட்டம் வெப்பம் மிகுந்ததாக இருக்கும் பகுதிக்கு அருகிலேயே குளிர் நீரோட்டமும் இருக்கும். வெப்பநிலையில், இப்படி உடனடி மாறுதல்கள் நிகழ்ந்துகொண்டேயிருக்கும் பகுதியில் வாழும் உயிரினங்களுக்கு விதைப்பை வெளியே இருந்தால், அது உயிரணு உற்பத்தியைப் பாதிக்கும்.
கடித்தவுடன் வெடிக்கும்... யானைகளை பலிவாங்கும் பன்றிக்காய்! #ExtricateElephants #வேழம்காப்போம்

உயிரணு உற்பத்தி சீராக நடக்க வேண்டுமென்றால், அதற்கு விதைப்பை 30 டிகிரியிலேயே இருக்க வேண்டும். உடலில் வெளியே தெரியும்படி விதைப்பை இருந்தால், கடல்வாழ் உயிரினங்களுக்கு முப்பது டிகிரியிலேயே இருக்க முடியாது. அதனால்தான், அவற்றுக்கு விதைப்பை வயிற்றுக்குள் அமைந்துள்ளது. யானைகளுக்கும் அப்படியிருப்பதால், அவை கடல்வாழ் உயிரினமாக இருந்து நிலவாழ் உயிரினமாக மாறியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

பல்வேறு துணை இனங்களாகப் பிரிந்த யானைகளில் இன்று மிச்சமிருப்பது இரண்டே இனங்கள்தான். இதுவரை நிகழ்ந்த அனைத்துப் பேரழிவுகளையும் தாண்டி உயிர்பிழைத்து, தன் இருப்பை இந்த இரண்டு யானை இனங்களும் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. அதுபோலவே, தம்மைப் பல்வேறு பேரழிவுகளிலிருந்து தக்கவைத்து, தகவமைத்து வந்தவைதான் மம்மூத்களும். ஆனால், அவை மனிதர்களிடமிருந்து தப்பிக்கவில்லை. இந்த இரண்டு துணை இனங்களாவது மனிதர்களால் அழியாமல் பாதுகாக்க வேண்டும். இல்லையேல், எதிர்காலத்தில் யானை என்றோர் இனமிருந்தது என்று நம் சந்ததிகளுக்குக் கதை சொல்லும் நிலை ஏற்படலாம்.

Asian Elephant
Asian Elephant
Pixabay

பல்லுயிர்ச் சூழல் பெருகி, காடுகள் வளம்பெற்று, இயற்கை செழிப்பதற்குப் பேருயிர் பாதுகாப்பு அவசியம். அந்த வகையில், ஆதியிலிருந்து வாழ்ந்துவரும் யானைகள், நம் காலத்தில் அழிந்துவிட்டன. அதுவும் நம்மால் அழிந்துவிட்டது என்ற அவப்பெயர் மனித இனத்தைச் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமை.