Published:Updated:

நாட்டு மாடுகள் வளர்ப்பில் நல்ல லாபம்! நம்பிக்கை கொடுத்த நாட்டு மாடுகள் கண்காட்சி!

போட்டியில் பங்கேற்ற காங்கேயம் காளைகள்
News
போட்டியில் பங்கேற்ற காங்கேயம் காளைகள்

வெளிநாட்டு கலப்பின பசுக்கள் 10 முதல் 15 லிட்டர் பாலை நாள்தோறும் வழங்கும். காங்கேயம் பசுக்கள் 3 முதல் 5 லிட்டர் பால் மட்டுமே வழங்கும். ஆனால், இந்த 2 இன மாடுகளின் பராமரிப்புச் செலவும் ஏறக்குறைய ஒன்றுதான். அதேசமயம் காங்கேயம் மாடுகளின் மூலம் கூடுதல் வருவாயை ஈட்டலாம்.

நாட்டு மாடுகள் வளர்ப்பில் நல்ல லாபம்! நம்பிக்கை கொடுத்த நாட்டு மாடுகள் கண்காட்சி!

வெளிநாட்டு கலப்பின பசுக்கள் 10 முதல் 15 லிட்டர் பாலை நாள்தோறும் வழங்கும். காங்கேயம் பசுக்கள் 3 முதல் 5 லிட்டர் பால் மட்டுமே வழங்கும். ஆனால், இந்த 2 இன மாடுகளின் பராமரிப்புச் செலவும் ஏறக்குறைய ஒன்றுதான். அதேசமயம் காங்கேயம் மாடுகளின் மூலம் கூடுதல் வருவாயை ஈட்டலாம்.

Published:Updated:
போட்டியில் பங்கேற்ற காங்கேயம் காளைகள்
News
போட்டியில் பங்கேற்ற காங்கேயம் காளைகள்

ஈரோடு நாட்டு மாடு பாதுகாப்புக்குழு மற்றும் ஆதிவனம் சார்பில்  ஈரோடு ஏ.இ.டி பள்ளி மைதானத்தில் காங்கேயம் மாடுகள் கண்காட்சி நடைபெற்றது. நாட்டு மாடுகள் பாதுகாப்புச் சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் சுமார் 700 காங்கேயம் காளைகளும் பசுக்களும் பங்கேற்றன.

போட்டியில் பங்கேற்ற பூச்சிக் காளைகள்
போட்டியில் பங்கேற்ற பூச்சிக் காளைகள்

ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, கரூர் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகளின் உரிமையாளர்களால் காங்கேயம் இனத்தைச் சேர்ந்த காரி, மயிலை, செவலை ஆகிய ரகங்களைச் சேர்ந்த சுமார் 700 மாடுகள் பங்கேற்றன. இதில் காங்கேயம் இனக் காளைகளும், பசுமாடுகளுக்கான அழகுப் போட்டியும் நடைபெற்றன.

ஜெய ஹரிணி
ஜெய ஹரிணி

2 வயதுக்குள்பட்டவை, 2 முதல் 4 வயதுக்குள்பட்டவை, 4 வயதுக்கு மேற்பட்டவை எனப் பிரிக்கப்பட்டு சிறந்த மாடுகளுக்கு மொத்தம் ரூ.6 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன.

கண்காட்சி குறித்து மோகன், ஜெய ஹரிணி ஆகியோர் கூறியது:
``கொங்கு மண்டலத்தில் புகழ்பெற்று விளங்கும் காங்கேயம் காளைகள் கம்பீரமானது மட்டுமல்ல, இந்த மண்ணின் பெருமைமிகு காளை இனமாகும். இந்த இனம் மெள்ள மெள்ள சுருங்கி வருகிறது.

காங்கேயம் மாடுகளை பாதுகாக்கவும், அந்த மாட்டு இனத்தின் தன்மையை வெளிப்படுத்திடவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளோம். காங்கேயம் இனத்தில் உள்ள மயிலை, செவலை, காரி என ஒவ்வொரு வகை மாடுகளின் பாலுக்கும் தனித்தனி சத்துகள் உள்ளன.

திமிலை உயர்த்தி நிற்கும் காளைகள்
திமிலை உயர்த்தி நிற்கும் காளைகள்

அதிக நோய் எதிர்ப்பு சக்தியையும், சளி பிடிப்பதைத் தடுக்கும் ஆற்றலும் இந்த நாட்டு மாட்டு பாலுக்கு உண்டு.
ஒரு லிட்டர் ரூ.100 வரை விலை வைத்து விற்பனையாகிறது.
கலப்பினத்தைச் சேர்ந்த வெளிநாட்டு பசுக்கள் 10 முதல் 15 லிட்டர் பாலை நாள்தோறும் வழங்கும், காங்கேயம் பசுக்கள் 3 முதல் 5 லிட்டர் பால் மட்டுமே வழங்கும். ஆனால், இந்த 2 இன மாடுகளின் பராமரிப்பு செலவும் ஏறக்குறைய ஒன்றுதான். அதேசமயம் காங்கேயம் மாடுகளின் மூலம் கூடுதல் வருவாயை ஈட்டலாம். காங்கேயம் மாடுகள் வறட்சியையும் அதிக வெப்பத்தையும் தாங்கி வளர்பவை.

நமது நாட்டின் பாரம்பர்யமான காங்கேயம் பசுக்களை பாதுகாப்பதன் மூலமாகவே நோய் எதிர்ப்பு சக்தி மிக்க சத்தான பாலை பெற முடியும். உள்நாட்டு கால்நடைகளை பாதுகாக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே கண்காட்சியில் பங்கேற்கும் மாடுகளைத் தேர்வு செய்வதில் கால்நடை மருத்துவர்களும், கால்நடைத் துறை அதிகாரிகளும் முக்கிய பங்காற்றி வருகின்றனர். கண்காட்சியில் பங்கேற்ற அனைத்து மாடுகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன" என்றனர்.

பெரியசாமி
பெரியசாமி

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பெரியசாமியிடம் பேசினோம். நம்மிடம் அவர் கூறியது,
``இயற்கை விவசாயத்தை பாதுகாக்க வேண்டுமானால் முதலில் நாட்டு மாட்டினங்களான காங்கேயம் போன்ற மாட்டு வகைகளை பாதுகாக்க வேண்டியது கட்டாயம். தற்போது நாடு முழுவதும் இயற்கை விவசாயம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. நாட்டு மாடுகளின் பால் லிட்டருக்கு ரூ.100 வரையிலும் விலை போகிறது. கலப்பின மாடுகளான சிந்து, ஜெர்சி போன்ற மாடுகளின் பாலில் உள்ள குணங்களைவிட நாட்டுப் பசுமாட்டின் பால் உடலுக்கு நன்மை தரக்கூடியது. அதில் உள்ள நல்ல கொழுப்புச் சத்து குழந்தைகளுக்கு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

ஒரு கிலோ நாட்டு பசுமாட்டின் நெய் ரூ.1,500 வரை விலை போகிறது. நாட்டு மாடுகளை வளர்ப்பதன் மூலம் நல்ல வருமானமும் உள்ளது. இதை ஊக்குவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

பரிசுக்குரிய காளைகள் தேர்வு
பரிசுக்குரிய காளைகள் தேர்வு

முன்பெல்லாம் பசுவுடன், காளை மாடுகள் நேரடி சேர்க்கை இருந்தது. ஆனால் இப்போது நாட்டுக் காளை மாடுகளின் விந்தணுக்களைச் சேகரித்து ஊசி மூலம் இனச்சேர்க்கை நடைபெறுகிறது. நேரடி இனச்சேர்க்கையால் மாடுகளுக்கு வைரஸ் நோய் ஏற்படுவதால் அதைத் தடுப்பதற்காக ஊசி மூலம் இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
அரசின் ஒத்துழைப்பு இருந்தால் இதன் இனப்பெருக்கத்தை அதிகரிக்க முடியும். இதன் இனப்பெருக்கத்துக்கென அரசு தனியே இடம் வழங்க வேண்டும். நாட்டு மாடுகளை வளர்ப்போருக்கு அரசு மானியம் வழங்க வேண்டும்.
இதேபோல டெல்லி முர்ரா எருமைகளின் வளர்ப்பையும் ஊக்குவிக்க அரசு உதவி புரிய வேண்டும். ஒரு முர்ரா எருமைக் கன்று ரூ.25,000-க்கு விற்கிறது. 10 எருமைக் கன்று வாங்கி வளர்த்தால் ஓராண்டில் ஒரு முர்ரா எருமை ரூ.1 லட்சத்துக்கு மேல் விலை போகும். எனவே நாட்டு மாடுகள், எருமைகளின் வளர்ப்பு மூலம் விவசாயிகள் நல்ல லாபம் ஈட்ட முடியும்'' என்றார் நம்பிக்கையுடன்.