Published:Updated:

ஆப்கன் பாடகரின் வேதனை: `ஓ... என் தாயகமே...' - இணையத்தில் வைரலாகும் பாடல்

இணையத்தில் வைரலாகும் ஆப்கன் பாடகரின் வேதனைப் பாடல்
இணையத்தில் வைரலாகும் ஆப்கன் பாடகரின் வேதனைப் பாடல்

தாலிபன்களின் ஆட்சிமுறைக்கு பயந்து பிற நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறிக்கொண்டிருக்கும் ஆப்கன் மக்களின் நிலையை வேதனையுடன் அமெரிக்காவிலிருந்தபடி பாடகர் ஷரஃபத் பர்வானி பாடிய பாடல் இணையத்தில் வைரலாகி காண்போர் நெஞ்சை நொறுக்கிக்கொண்டிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய தாலிபன்கள், `இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தான்' என்று அந்நாட்டின் பெயரை மாற்றி ஷரியத் சட்டத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த முனைப்பு காட்டிவருகின்றனர். வீதிகளில் ஆயுதங்களுடன் சுற்றித் திரியும் தாலிபன்களின் அச்சுறுத்தல்களால் பிற நாடுகளில் அகதிகளாகக்கூட வாழ்ந்துவிடுகிறோம். பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிப்போயிருக்கும் ஆப்கானிஸ்தான் வேண்டாம் என்று உயிர் பயத்தில் தாய் நாட்டிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றனர் அந்நாட்டின் பூர்வகுடிகள்.

காபூல்: தொடர் குண்டு வெடிப்பு; பெண்களைத் தாக்கும் `ஐஎஸ்ஐஎஸ் - கே' - தாலிபன்களோடு கூட்டணியா?
காபூல் விமான நிலையத்தில் குவிந்துகிடக்கும் மக்கள்
காபூல் விமான நிலையத்தில் குவிந்துகிடக்கும் மக்கள்

சோவியத் யூனியன் ஆக்கிரமிப்பில் தொடங்கி, சுமார் 40 ஆண்டுக்காலமாகப் போர்க்களமாக மாறி அதகளப்பட்டுக்கொண்டிருக்கும் ஆப்கனில் இனியும் வாழ்தல் கூடாதென்று குழந்தை குட்டிகளுடன், சிறிது சிறிதாகச் சேர்த்துவைத்த பணம், பொருள் என எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு காபூல் விமான நிலையத்தில் இரவு பகலாகக் காத்துக்கிடக்கின்றனர் வாழ்க்கை குறித்த ஓராயிரம் கேள்விகளுடன்.

காபூல் விமான நிலையத்தில் அமெரிக்கப் படைகளின் கண்காணிப்பின் கீழ் நடைபெற்றுவரும் மீட்புப் பணியில் இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளும் தங்கள் குடிமக்களை மீட்டுவருகின்றன. அதேபோல், ஆப்கனிலிருந்து வெளியேறத் துடிப்பவர்களும் பல்வேறு நாடுகளின் விமானங்களின் அந்நாட்டு மக்களுடன் சேர்ந்து பயணப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தாலிபன்களுக்கு பயந்து, தனது தாய் நாட்டைவிட்டு வெளியேறி, அமெரிக்காவில் அகதியாகத் தஞ்சமடைந்திருக்கும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பிரபல பாடகர் ஷரஃபத் பர்வானி (Sharafat Parwani) ஆப்கனின் பரிதாபநிலையை வலி மிகுந்த வார்த்தைகளைக்கொண்டு பாடலாகப் பாடியிருக்கிறார்.

பாடகர் ஷரஃபத் பர்வானி
பாடகர் ஷரஃபத் பர்வானி

அமெரிக்காவில் இருந்துகொண்டு ஆப்கனை நினைத்து பர்வானி சக ஆப்கன் மக்களுடன் பாடிய அந்தப் பாடல் இணையத்தில் வெளியாகி, வைரலாகப் பகிரப்பட்டுவருகிறது. பர்வானி பாடிய அந்தப் பாடலை பிரபல அமெரிக்கப் பத்திரிகையாளர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

பெர்சிய மொழியில், ``என் தாயகமே, வேதனையால் நீ சோர்வடைந்துபோய் இருக்கிறாய்!

என் தாயகமே, பாடலின்றி, கீதங்கள் இன்றி சோர்ந்து கிடக்கிறாய்..!

என் தாயகமே, வலித்தும் அதை ஆற்றுவதற்கான மருந்து இல்லாமல் நீ நிற்கிறாய்!”

என்று தனது கூட்டத்துடன் சோகமாகத் தாளமிட்டபடி பர்வானி பாடியிருக்கும் அந்தப் பாடல் இணையத்தில் காண்போர் நெஞ்சை நொறுக்கிப் போட்டுக்கொண்டிருக்கிறது.

`எந்த வேலையும் அவமானமில்லை!' - ஜெர்மனியில் உணவு டெலிவரி பணிபுரியும் ஆப்கன் முன்னாள் அமைச்சர்!'
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு