Published:Updated:

உறைபனியில் தவித்த 60 தெரு நாய்கள்; வீடு வாடகைக்கு எடுத்து அடைக்கலமாய் கொடுத்தவரின் நெகிழ்ச்சிக் கதை!

வீட்டில் பாதுகாப்புடன் வளரும் நாய்களின் புகைப்படம்

துருக்கி நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் தெரு நாய்களை உறை பனியிலிருந்து காப்பாற்றி தங்களது வீட்டில் அடைக்கலம் கொடுத்து வளர்த்து வருகின்றனர்.

உறைபனியில் தவித்த 60 தெரு நாய்கள்; வீடு வாடகைக்கு எடுத்து அடைக்கலமாய் கொடுத்தவரின் நெகிழ்ச்சிக் கதை!

துருக்கி நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் தெரு நாய்களை உறை பனியிலிருந்து காப்பாற்றி தங்களது வீட்டில் அடைக்கலம் கொடுத்து வளர்த்து வருகின்றனர்.

Published:Updated:
வீட்டில் பாதுகாப்புடன் வளரும் நாய்களின் புகைப்படம்

ஐரோப்பா மற்றும் ஆசியா ஆகிய இரு கண்டங்களிலும் அமைந்துள்ள ஒரு கண்டம் கடந்த நாடு தான் துருக்கி. இந்த துருக்கி நாட்டின் வடமேற்குப் பகுதியில் மார்மரா பகுதிக்கு அருகில் உள்ள புகழ் பெற்ற நகரம் இஸ்தான்புல். இங்கு கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக இந்த ஜனவரி மாதத்தில் கடும்பனிப்பொழிவைச் சந்தித்து வருகிறது இஸ்தான்புல். கடந்த ஜனவரி 25 அன்று காலை 8 மணி வரை அனைத்து நகரங்களுக்கிடையான பேருந்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. வரவிருக்கும் நாட்களில் அதிக உறைபனி இருக்கும் என்ற வானிலை எச்சரிக்கையின் காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறு வலியுறுத்தப்பட்டனர், பள்ளிகள் மற்றும் ஷாப்பிங் கடைகள் என அனைத்தும் மூடப்பட்டன.

இஸ்தான்புலில்  நிலவும் பனியின் புகைப்படம்
இஸ்தான்புலில் நிலவும் பனியின் புகைப்படம்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில் அந்நாட்டில் உள்ள தெரு நாய்கள் உணவின்றி உறைபனியில் அவதிப்பட்டு வந்தன. இதனைப் பார்த்த துகே அபுகன் மற்றும் புர்கு யுக்சல் (Tugay Abukan, Burcu Yuksel) என்ற தம்பதியினர் 'குசே (Kuzey)' காட்டில் உள்ள 60வது தெரு நாய்களைத் தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்து வருகின்றனர். இதில் பல நாய்கள் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட நாய்களாகும்.

வீட்டில் அடைக்கலம் கொடுத்து வரும் நாய்களின் புகைப்படம்
வீட்டில் அடைக்கலம் கொடுத்து வரும் நாய்களின் புகைப்படம்

இந்த தம்பதியினர் நெடுநாட்களாகவே தெரு நாய்களுக்கு உணவளித்து வருகின்றனர். தற்போது நிலவும் கடும் பனிப்பொழிவின் காரணமாக இவர்கள் தங்கள் வீட்டிலையே நாய்களுக்குப் பாதுகாப்பு வழங்கி உணவளித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுபற்றி அந்த தம்பதியரான புர்கு யுக்சல் என்பவர் கூறுகையில், "மோசமான வானிலை காரணமாக, பாதுகாப்பு இல்லாத, குடும்பம் இல்லாத அனைத்து தெரு விலங்குகளுக்காகவும் எங்கள் வீட்டின் கதவுகளைத் திறந்தோம்" என்று நெகிழ்ச்சியுடன் அவர் கூறினார். இவரது இணையரான துகே அபுகன், 13 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான தெரு நாய்களுக்கு உணவளித்து வருகிறார். அவரது இந்தப் பணிக்காக 'வன தேவதை' என்று அழைக்கப்பட்டு வருகிறார். அவர் முடிந்தவரைப் பல வழி தவறியவர்களைக் கவனித்துக் கொள்வதைத் தனது பணியாக மேற்கொண்டுள்ளார்.

அவர்கள் வீட்டின் அருகில் பாதுகாக்கப்படும் நாய்கள்
அவர்கள் வீட்டின் அருகில் பாதுகாக்கப்படும் நாய்கள்

காட்டில் உள்ள செல்லப்பிராணிகளுக்கு நான் உணவளிக்கச் செல்லும்போதெல்லாம் எங்கள் வீட்டிலுள்ள மரத்தின் அருகில் வாழும் செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது என்று கவித்துவத்துடன் கூறினார்.மேலும் "இது அவர்களின் உணவு இடம் மற்றும் அவர்கள் கைவிடப்பட்ட இடம். எனவே நாங்கள் இங்கே ஒரு இடத்தைக் கண்டுபிடித்து, நாங்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இங்கே குடியேறினோம்" என்கிறார் துகே அபுகன். `அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்',என்ற வள்ளுவனின் குறளுக்கேற்ப கைவிடப்பட்ட உயிர்களுக்காக தங்களது உள்ளக் கதவுகளையும் இல்லக் கதவுகளையும் திறந்து தங்களால் முடிந்தவரை உயிர்களுக்கு உதவிசெய்து வருகின்றனர் இந்த தம்பதியினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism