உலகப் புகழ் பெற்ற கூடைப்பந்து சாம்பியனும் ஒலிம்பிக் வீரருமான கோப் பிரயன்ட், அவரின் 13 வயது மகளுடன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து சென்றுகொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் இருவரும் உயிரிழந்தனர். பிரையனின் மறைவு விளையாட்டு உலகைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருடைய மறைவுக்கு விளையாட்டுப் பிரபலங்கள், அரசியல்வாதிகள், தலைவர்கள், நடிகர்கள் எனப் பலரும் அவருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜெய்ப்பூரில் நடந்த இலக்கிய விழாவின் ஒரு பகுதியாக `பருவநிலை மாற்றம்' குறித்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை தியா மிர்சா பங்கேற்றுப் பேசினார். அப்போது பருவநிலை மாற்றம் குறித்து பேசிக்கொண்டிருந்தவர். "மாறிவரும் பருவ நிலை மாற்றத்தால் எவ்வளவு பெரிய இழப்புகளை நாம் சந்தித்திருக்கிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த விபத்து நிகழ்வதற்கு முக்கியக் காரணம் காலநிலை மாற்றம். பனிமூட்டம் அதிகமாக இருந்ததால்தான் இந்த விபத்து நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. தற்போது ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த கோப் பிரயன்ட் பற்றித்தான் நான் பேசுகிறேன்' என்று உணர்ச்சிப் பெருக்குடன் தனது பேச்சைத் தொடர்ந்தவர்.
"அந்தநாள் எனக்கு மிக அழகாகத்தான் தொடங்கியது. அதிகாலை 3 மணிக்கு எனது செல்போனுக்கு வந்த அந்த நோடிபிகேஷன் என்னை மிகவும் அதிரச் செய்தது. அது கோப் பிரையனின் மறைவுச் செய்தி. அதிலிருந்து என்னால் இன்னும் மீள முடியவில்லை. ரத்த அழுத்தம் குறைந்தே காணப்படுகிறேன். மிகச் சோர்வாக உணர்கிறேன். இப்படி பலவித அழுத்தங்களோடு என்னுடைய நாள்கள் நகர்ந்துகொண்டிருக்கின்றன" என்றவர் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த இடத்திலேயே உடைந்து அழுதார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
``நான் அழுதால்தான் எனக்குள் இருக்கும் இந்தச் சுமை குறையும். நீங்களும் அழுவதற்குப் பயப்படாதீர்கள். அந்த வலியை முழுமையாக உணர்ந்து அழுதுவிடுங்கள். இந்தக் கண்ணீர் திரைத்துறைக்கு அப்பாற்பட்டது" என்று கண்ணீர்பெருக்குடன் பேசிக்கொண்டிருந்தார். தியா மிர்சாவின் அந்த அழுகை அரங்கில் இருந்தவர்களுக்கும் கண்ணீரை வரவழைத்தது.