Published:Updated:

நாய்த் திருட்டு: இனி சிவில் வழக்கு அல்ல, சிறை தண்டனை! இங்கிலாந்தின் புதிய சட்டம் சொல்வது என்ன?

Dogs | நாய்கள்
News
Dogs | நாய்கள்

இங்கிலாந்து நாளிதழ்களில் ‘நாய்கள் விற்பனைக்கு’ என்ற விளம்பரங்கள் சமீபகாலமாக நான்கு மடங்கு அதிகமாகியுள்ளன. அத்தனை நாய்களும் உடனடியாக விற்றுத் தீர்கின்றன. சொல்லப்போனால் தேவைப்படும் அளவுக்கு சந்தையில் நாய்கள் கிடைப்பதில்லை.

கண்ணதாசனின் ஒரு திரைப்படப் பாடலின் வரிகள் இவை...

‘சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை

ஒரு துணையில்லாமல் வந்ததெல்லாம் பாரமும் இல்லை

நன்றி உள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானடா தம்பி

நன்றிகெட்ட மகனை விட நாய்கள் மேலடா’

சமீப காலமாக நாய்களுக்கான தேவை அதிகமாகியிருக்கிறது – முக்கியமாக பிரிட்டனில். கொரோனா காரணமாக வீட்டில் அடைந்து கிடக்க வேண்டிய சூழல் பலருக்கும் ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில் தொலையும் மனநிம்மதி மற்றும் பொருளாதாரப் பற்றாக்குறை போன்றவற்றிற்கு தங்கள் செல்ல நாயின் மீது காட்டும் பரிவு என்பது பலருக்கும் வடிகாலாக விளங்குகிறது. அது தங்க​ளிடம் வாலை வேகமாக ஆட்டுவதை பாசத்தின் குறியீடாக அறிந்து மகிழ்கிறார்கள். நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடப்பவர்களுக்கும் நாய் ஒரு மிகப்பெரிய சிநேகிதன் ஆகியிருக்கிறது.

இந்த நிலை சில விபரீதங்களுக்கும் வழி வகுத்திருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
Dogs | நாய்கள்
Dogs | நாய்கள்

லண்டனில் சில மாதங்களுக்கு முன் தனது நாயை வழக்கம்போல பாதுகாப்பகத்தில் விட்டு விட்டு தன் பணியிடத்துக்கு சென்ற பெண்மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. அந்தப் பாதுகாப்பகத்தின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த சிலர் அங்கிருந்த பதினேழு நாய்களைக் கடத்திச் சென்றுவிட்டார்கள் என்றும் அவற்றில் அந்தப் பெண்மணியின் நாயும் ஒன்று என்றார் நாய் பாதுகாப்பக உரிமையாளர்.

இதே போன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடக்க, அந்த நாய்களின் உரிமையாளர்கள் கதறிக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் வீட்டுக் குழந்தைக்குச் சமமாகத்தான் தங்களது நாய்களை அதன் உரிமையாளர்கள் கருதுவது வழக்கம்.

கடந்த வருடம் மட்டும் இரண்டாயிரம் நாய்கள் தொலைந்ததாக காவல் நிலையத்துக்கு புகார்கள் வந்து சேர்ந்துள்ளன. தவிர காவல் நிலையங்களில் இதுபோன்ற புகார்களை அலட்சியமாகத்தான் கருதுகிறார்கள் என்ற எண்ணத்தில் புகார் கொடுக்காமலேயே இருந்தவர்கள் பலர். எனவே, உண்மையான எண்ணிக்கை இரண்டாயிரத்தைவிட மிக அதிகமாக இருக்கும்.

இப்படி நாய்களைத் திருடி என்ன செய்வார்கள்? வேறென்ன, விற்பார்கள்.

இங்கிலாந்து நாளிதழ்களில் ‘நாய்கள் விற்பனைக்கு’ என்ற விளம்பரங்கள் சமீபகாலமாக நான்கு மடங்கு அதிகமாகியுள்ளன. அத்தனை நாய்களும் உடனடியாக விற்றுத் தீர்கின்றன. சொல்லப்போனால் தேவைப்படும் அளவுக்கு சந்தையில் நாய்கள் கிடைப்பதில்லை. எனவே ஒவ்வொரு நாய்க்கும் மிக அதிக விலை வைக்கப்படுகிறது. அதனால்தான் நாய்த் திருட்டுகள்!

Dogs | நாய்கள்
Dogs | நாய்கள்
Pixabay
'தொலைந்துபோன நாய்களை கண்டுபிடித்து தருகிறோம்' என்று அறிவிக்கும் அமைப்புகளும் அதிகமாகி வருகின்றனர். அவற்றைப் பலரும் தொடர்பு கொண்டு வருகிறார்கள்.

ஆனால் இந்த நிலையே கிரிமினல்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. பிடிபட்டாலும் செலுத்த வேண்டிய அபராதத் தொகை என்பது, அதை விற்பனை செய்தால் கிடைக்கும் தொகையோடு ஒப்பிடும்போது மிகக் குறைவுதான் என்பது இவர்களுக்கு சாதகமான அம்சம். எனவேதான் இப்போது சட்டத்தில் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

இங்கிலாந்து அரசு வெளியிட்டிருக்கும் புதிய சட்டப்படி நாயைத் திருடுபவர்கள் ஐந்து வருடங்கள் வரை சிறை தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்! இதுவரை நாய் என்பது ஒரு சொத்தாகக் கருதப்பட்டு நாய்த் திருட்டு என்பது ஒரு சிவில் வழக்காகத்தான் கருதப்பட்டது. இப்போது அது குற்றம். விலங்குகள் நல அமைப்புகள் இந்தப் புதிய சட்டத்தை வரவேற்றுள்ளன. ஐந்தறிவு விலங்குகளுக்கான ஓர் அங்கீகாரமாகவும் இதைக் கருதலாம்.