Published:Updated:

`குழந்தையுடன் குடியேறினால் விலையில்லா வீடு!' - இத்தாலி தீவின் சர்ப்ரைஸ் அறிவிப்பு

கம்மராட்டா நகரம்

இந்த வீடுகளில் வசிக்கும் வீட்டு உரிமையாளர்கள், தங்கள் வீடுகளைப் புனரமைப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. அதற்கான பண வசதியும் இருப்பதில்லை. பலர், இங்கிருந்து வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றுவிட்டார்கள். எனவே, நூற்றுக்கணக்கான வீடுகள் காலியாக உள்ளன.

`குழந்தையுடன் குடியேறினால் விலையில்லா வீடு!' - இத்தாலி தீவின் சர்ப்ரைஸ் அறிவிப்பு

இந்த வீடுகளில் வசிக்கும் வீட்டு உரிமையாளர்கள், தங்கள் வீடுகளைப் புனரமைப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. அதற்கான பண வசதியும் இருப்பதில்லை. பலர், இங்கிருந்து வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றுவிட்டார்கள். எனவே, நூற்றுக்கணக்கான வீடுகள் காலியாக உள்ளன.

Published:Updated:
கம்மராட்டா நகரம்

'புதிதாகக் குடியேறும் இளம்தம்பதிக்கு இலவசமாக வீடு வழங்கப்படும்' என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்டது, இத்தாலி நாட்டின் சிசிலி தீவிலுள்ள கம்மராட்டா நகர மேயர். மேலும், அங்கு குடியேறியபின் குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு, இலவச வீட்டோடு, 1000 யூரோ பணமும் போனசாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆச்சர்யமாக இருக்கிறதா?

கம்மராட்டா நகரம்
கம்மராட்டா நகரம்

சிசிலி தீவில் அமைந்துள்ள கம்மராட்டா நகரம், இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பிரதேச நகரமாகும். இந்த நகரிலிருந்து, தூரத்திலுள்ள எட்னா மலைச்சிகரத்தையும் சூரிய அஸ்தமனத்தையும் காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும். இங்குள்ள வீடுகள் அனைத்தும், பழங்கால கட்டடக்கலைக்குச் சான்றாகப் பழமையின் அழகோடு அமைந்துள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிரச்னையே இந்தப் பழைமையான வீடுகள்தான். இந்த வீடுகளில் பலவும் முறையான பராமரிப்பின்றி இருக்கின்றன. இந்த வீடுகளில் வசிக்கும் வீட்டு உரிமையாளர்கள், தங்கள் வீடுகளைப் புனரமைப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. அதற்கான பண வசதியும் இருப்பதில்லை. பலர், இங்கிருந்து வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றுவிட்டார்கள். எனவே, நூற்றுக்கணக்கான வீடுகள் காலியாக உள்ளன.

கம்மராட்டா நகரம்
கம்மராட்டா நகரம்

இந்தப் போக்கு இப்படியே நீடித்தால், இந்த நகரமே வெறிச்சோடிப்போகுமென்று கவலைப்பட்ட கம்மராட்டா நகர மேயரின் மனதில் எழுந்த திட்டம்தான், இலவசமாக வீடு வழங்குவதாகும். இத்திட்டத்தின்படி, இந்த நகரிலுள்ள வீட்டில் குழந்தையோடு வந்து குடியேறும் இளம்தம்பதிக்கு இலவசமாக வீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். திருமணமான புதிதிலேயே இங்கு குடியேறி, அதன்பின் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிக்கு இலவசமாக வீடு வழங்குவதோடு, 1000 யூரோ பணமும் போனஸாகவும் வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின்மூலம் பலரும் தங்கள் நகரில் குடியேறுவார்கள் என்று நம்புகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தத் திட்டத்தில் இன்னோர் அம்சமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு குடியேறுபவர்கள், அந்த வீட்டை மூன்றாண்டு காலத்துக்குள் மறுசீரமைப்பு செய்ய வேண்டும். இலவச வீட்டில் குடியேறும்போது 5,000 யூரோ டெபாசிட்டாகத் தர வேண்டும். வீட்டை மறுசீரமைப்பு செய்தவுடன் அந்த டெபாசிட்டைத் திருப்பித் தந்துவிடுவார்கள். இதற்கு ஒப்புக்கொண்டால், வீடுகளை இலவசமாகக் கொடுக்கும்படி வீட்டு உரிமையாளர்களுக்கு மேயர் உத்தரவிட்டுள்ளார்.

கம்மராட்டா நகரம்
கம்மராட்டா நகரம்

இந்த நகரைப்போலவே இன்னும் சில நகரங்களிலும் இது போன்ற திட்டத்தைச் செயல்படுத்துகிறார்கள். ஆனால், அங்கே மொத்தமாக இலவசமாக வழங்காமல், ஒப்புக்கு 1 டாலர் மட்டும் பெற்றுக்கொண்டு, வீட்டு உரிமையை வழங்குகிறார்கள். அங்கே குடியேற உங்களுக்கும் விருப்பமா?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism