Published:Updated:

`ஹாரிபாட்டர் Dobby-ஆ இது?' - இங்கிலாந்தில் பிறந்த வினோத பன்றிக்குட்டி!

aardvark ( Twitter Photo: @chester zoo )

விலங்கியல் பூங்காக்களில் மிக அரிதாகவே இந்த உயிரினங்கள் காணப்படுகின்றன. ஐரோப்பா முழுவதுமுள்ள விலங்கியல் பூங்காக்களில் கிட்டத்தட்ட 66 ஆர்ட்வார்க்குகள் மட்டுமே உள்ளன. உலக அளவில் 109 ஆர்ட்வார்க்குகள் மட்டுமே உள்ளன.

`ஹாரிபாட்டர் Dobby-ஆ இது?' - இங்கிலாந்தில் பிறந்த வினோத பன்றிக்குட்டி!

விலங்கியல் பூங்காக்களில் மிக அரிதாகவே இந்த உயிரினங்கள் காணப்படுகின்றன. ஐரோப்பா முழுவதுமுள்ள விலங்கியல் பூங்காக்களில் கிட்டத்தட்ட 66 ஆர்ட்வார்க்குகள் மட்டுமே உள்ளன. உலக அளவில் 109 ஆர்ட்வார்க்குகள் மட்டுமே உள்ளன.

Published:Updated:
aardvark ( Twitter Photo: @chester zoo )

இங்கிலாந்து நாட்டில் உள்ள செஸ்டர் என்ற விலங்கியல் பூங்காவில் 90 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்ட்வார்க் (aardvark) குட்டி பிறந்துள்ளது. இந்த ஆர்ட்வார்க் குட்டி உடல் முழுக்க முடியில்லாமல் சுருங்கிய தோளோடு, நீளமான தொங்கிய காதோடு இருந்துள்ளது. இதை பார்த்தவர்களுக்கு கூடுதல் வியப்பு. ஏனெனில், இந்த குட்டி பார்ப்பதற்கு அப்படியே ஹாரி பாட்டர் திரைப்படத்தில் வரும் `Dobby’ கதாப்பத்திரம் போல உள்ளது. எனவே பிறந்த அந்தப் பெண் குட்டியை Dobby என அழைத்து வருகின்றனர்.

aardvark
aardvark
Twitter Photo: @chester zoo

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாலூட்டி இனமான ஆர்ட்வார்க், துணை-சஹாரா ஆப்பிரிக்கவை பூர்வீகமாக கொண்டவை. ஆர்ட்வார்க் என்பதற்கு ஆப்பிரிக்க மொழியில் நிலப்பன்றி என அர்த்தம். விலங்கியல் பூங்காக்களில் மிக அரிதாகவே இந்த உயிரினங்கள் காணப்படுகின்றன. ஐரோப்பா முழுவதுமுள்ள விலங்கியல் பூங்காக்களில் கிட்டத்தட்ட 66 ஆர்ட்வார்க்குகள் மட்டுமே உள்ளன. உலக அளவில் 109 ஆர்ட்வார்க்குகள் மட்டுமே உள்ளன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இரவு நேரங்களில் விழித்திருக்கும் இந்த விலங்குகள் எறும்பு மற்றும் கரையான்களை மோப்பம் பிடிக்க நீண்ட மூக்கு மற்றும் அதன் வாசனை திறனை பயன்படுத்துகின்றன. வாயிலிருந்து 30 செமீ (கிட்டத்தட்ட 12 அங்குலம்) வரை நாக்கை அதனால் நீட்டமுடியும். நீளமான அதனுடைய நாக்கில் ஒட்டும் தன்மையுடைய உமிழ்நீர் இருக்கும். எனவே பூச்சிகள் எளிதில் ஒட்டிக்கொள்ளும். கரையான் மேடுகளை கிழிக்கும் அளவிற்கு சக்திவாய்ந்த நகங்களை கொண்டுள்ளன.

aardvark
aardvark
Twitter Photo: @chester zoo

விரைவாக குழியைத் தோண்டும். பல உறங்கும் அறைகளுடன் இரண்டு முதல் மூன்று மீட்டர் நீளம் வரை குழியை தோண்டும். சில சமயங்களில் 13 மீட்டர் வரை தோண்டும். தோண்டிய பழைய துளைகளை விட்டு விட்டு புதிய குழியை அடிக்கடி தோண்டும். அதன் பிறகு அந்த குழியை ஆப்பிரிக்க காட்டு நாய் போன்ற பிற இனங்கள் பயன்படுத்திக் கொள்ளும். இரவில் சுமார் 10-30 கி.மீ தூரம் வரை பயணிக்கும்.

செஸ்டர் விலங்கியல் பூங்காவில், 90 ஆண்டுகள் கழித்து ஆர்ட்வார்க் குட்டி பிறந்துள்ளதால் இதை மிகவும் மகிழ்ச்சியாக கருதுகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism