400 ஆண்டு பாரம்பர்ய வழக்கம் என்ற பெயரில் டென்மார்க்கின் ஃபாரோ தீவு பகுதியைச் சேர்ந்த மக்களால் ஆயிரக்கணக்கான டால்பின்களை வேட்டையாடி கொன்று குவிக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியின் கடற்கரையே ரத்தத்தால் கொடூரமாக காட்சியளிக்கிறது.
வடக்கு அட்லாண்டிக் கடலை ஒட்டி நார்வே மற்றும் ஐஸ்லாந்து நாடுகளுக்கு இடையே டென்மார்க்கின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது இந்த ஃபாரோ தீவு. இந்தத் தீவில் 53,000-க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் வசிக்கும் கடற்பகுதியில் டால்பின்கள் வேட்டையாடுவது சட்டபூர்வமானது என்பதால், வருடம் முழுவதும் இங்குள்ள மக்களால் டால்பின்கள் மற்றும் திமிங்கலங்கள் வேட்டையாடப்பட்டு வருகின்றன.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 600-க்கும் மேற்பட்ட திமிலங்கலங்கள் வேட்டையாடப்பட்டாலும் டால்பின்கள் வேட்டையாடப்படும் எண்ணிக்கை குறைவாகவே இருந்தன. ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 1,400-க்கும் அதிகமான டால்பின்கள் `கிரின்டாட்ராப்' என்ற 400 ஆண்டுகள் பாரம்பர்ய வழக்கத்துக்காக வேட்டையாடி கொன்று குவிக்கப்பட்டுள்ளன. தங்களின் உணவுகளுக்கு பஞ்சம் ஏற்படக் கூடாது என்பதற்காக பின்பற்றப்படும் இந்த பழக்கத்துக்காக வருடத்திற்கு ஒரு முறை கடலில் உள்ள பாலூட்டிகள் வேட்டையாடப்படுகின்றன.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, பெரிய பெரிய படகுகளில் கடலுக்குள் சென்று, வேட்டைக்காரர்களால் இழுத்து வரப்பட்ட டால்பின்கள், கடற்கரையில் வைத்து கழுத்துகள் வெட்டப்பட்டு கொல்லப்பட்டன. இப்படி ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட வெள்ளை கழுத்து டால்பின்களால் ஸ்கேலாபேட்னூர் என்ற அப்பகுதியின் கடற்கரை நீர் முழுவதும் ரத்தமாக மாறி காட்சியளிக்கிறது. இதனையடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியான இந்த கொடூர செயலின் படங்களைப் பார்த்த பொதுமக்கள், பாரம்பர்யம் என்ற பெயரில் இதுபோல் உயிரினங்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுப்பினர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமிங்கல வேட்டைத் தடுக்கும் அமைப்பான `ஸீ ஷெப்பர்ட்' அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அலெக்ஸ் கார்னேஸ்ஸின், ``கொரோனா என்னும் பெருந்தொற்றின் மூலம் உலகம் செயலிழந்து காணப்படும் இந்த வேளையில் ஃபாரோ தீவுகளில் நடந்துள்ள இந்த கொடும் செயல் இயற்கையை அளிக்க கூடியது" எனக் குறிப்பிட்டுள்ளார்.