Published:Updated:

நண்பனுக்கு உதவப் போனவரைக் கொட்டிய தேனீக்கள்... தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

bee ( pixabay )

நண்பனின் வேலைக்காக எலுமிச்சை மரத்தின் கிளைகளைச் சற்று வெட்டி சீராக்கிக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாகத் தேன்கூடு ஒன்று கலைந்துள்ளது. அதைத் தொடர்ந்து மளமளவென இவரைத் தேனீக்கள் கொட்டித் தீர்த்துள்ளன. உதவி கேட்டு அந்த நபர் கத்தியுள்ளார்.

தேன் எந்தளவுக்குச் சுவையானதோ, அந்தளவுக்கு வலி நிறைந்தது தேனீக்களின் கொட்டு. ஒட்டுமொத்த தேனீக்களும் ஒன்றாக வந்து கொட்டும்போது, மனிதர்கள் உயிருக்கு ஆபத்தான நிலைக்குக்கூட தள்ளப்படுவதுண்டு. `ஐ' படத்தில் நடிகர் விக்ரம் தன்னுடைய எதிரிகளில் ஒருவருக்குக் கொடுக்கும் தண்டனைகளில் ஒன்றாகத் தேனீக்கள் கொட்டுவதை வைத்திருப்பார். அப்படியானால் அந்த வலி எப்படியிருக்கும்?

ஐ மோஷன் போஸ்டர்!
ஐ மோஷன் போஸ்டர்!

இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த 20 வயது ஆஸ்டின் பெல்லாமி என்பவர் வெள்ளிக்கிழமையன்று, தன்னுடைய நண்பனின் வேலைக்காக எலுமிச்சை மரத்தின் கிளைகளைச் சற்று வெட்டி சீராக்கிக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாகத் தேன்கூடு ஒன்று கலைந்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதைத் தொடர்ந்து மளமளவென இவரைத் தேனீக்கள் கொட்டித் தீர்த்துள்ளன. உதவி கேட்டு அந்த நபர் கத்தியுள்ளார். ஆனால், அவருக்கு உதவச் சென்றால், தேனீக்கள் தங்களையும் கொட்டிவிடுமோ என அருகில் இருப்பவர்களாலும், அவருக்கு உதவ முடியவில்லை.

சுமார் 20,000 முறைக்கும் மேல் தேனீக்களின் கொட்டுகளைப் பெற்றுள்ளார். அதோடு 30 தேனீக்கள் வரை விழுங்கி உள்ளார் என அவரின் மனைவி, தனது நிதி திரட்டும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நண்பனுக்கு உதவப் போனவரைக் கொட்டிய தேனீக்கள்... தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது வைக்கப்பட்டுள்ளார் பெல்லாமி. அவர் வயிற்றில் உள்ள தேனீக்களை எடுக்கவே மருத்துவர்களுக்கு ஒருநாள் ஆனதாம். செவ்வாய்க்கிழமை இரவு வரை கோமா நிலையில் இருந்துள்ளார். தற்போது அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் இவர் முழுமையாகக் குணமடைவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.