அடிக்கும் வெயிலுக்குக் கூடவே ஒரு மின்விசிறி (fan) இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் எனப் பலரும் அடிக்கடி யோசித்திருப்போம். பயணிக்கும் வழியில் கடுமையான வெயில் இருந்தால் வெப்பத்தைத் தணித்துக்கொள்ள ஜூஸ் குடிப்போம், நல்ல காற்றோட்டமான பகுதிக்குச் சென்று நிற்போம். இதுவே வாயில்லா ஜீவன்கள் வெயிலின் கொடுமையை எப்படி வெளிப்படுத்தும்?

இதை யோசித்துதான், கடுமையான கோடை வெப்பத்தைச் சமாளிக்க வளர்ப்பு பிராணிகளுக்கென தனித்துவமான மின்விசிறி ஒன்றை டோக்கியோவில் உள்ள மகப்பேறு ஆடை வடிவமைப்பாளர் தயாரித்துள்ளார்.
`என்னுடைய நாயை வெளியே நடைப்பயிற்சிக்கு கூட்டிச் செல்லும்போதுதான், அது எவ்வளவு சோர்வாக இருக்கிறது என்பதை உணர்ந்தேன். அந்தத் தருணத்தில், வளர்ப்பு பிராணிகளுக்கு சிறிய அளவிலான மின்விசிறி இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உடனே வளர்ப்பு பிராணிகளுக்கென பிரத்யேமாக ஆடையோடு அணிந்துகொள்ளக்கூடிய, பேட்டரியால் இயங்கும் 80 கிராம் எடை கொண்ட மின்விசிறியை வடிமைத்தேன். இதன் மூலம் விலங்குகளின் உடலைச் சுற்றி குளிர்ந்த காற்றானது சுழன்று வீசும்’ என அந்த ஆடை நிறுவனத்தின் தலைவர் ரெய் உசாவா தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் நிலவும் அதீத வெப்பத்தின் காரணமாக மக்கள் தங்கள் வளர்ப்பு பிராணிகளை வெளியில் கூட்டிச் செல்வதைத் தள்ளிப்போடலாம் அல்லது அதிகாலை நேரத்தில், இரவு நேரங்களில் அழைத்துச் செல்லலாம் என நிபுணர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நாய், பூனை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளுக்கென உருவாக்கப்பட்ட இந்தத் தயாரிப்பு மிகப்பெரிய அளவில் வெப்பத்தைச் சமாளிக்க உதவும் என நம்பப்படுகிறது.