Published:Updated:

32 ஆண்டுகள் கூண்டில் அடைப்பு... உலகின் மிகவும் சோகமான கொரில்லாவின் விடுதலை எப்போது?

`Bua Noi’

கொரில்லா தனி சொத்தாகக் கருதப்படுவதால், இந்த விஷயத்தில் தலையிட முடியாத நிலை உள்ளது. ஒரு வயதாக இருக்கும்போது, இந்த கொரில்லாவை ஜெர்மனியில் இருந்து 3 மில்லியன் தாய் பாட்டிற்கு வாங்கியுள்ளனர்.

32 ஆண்டுகள் கூண்டில் அடைப்பு... உலகின் மிகவும் சோகமான கொரில்லாவின் விடுதலை எப்போது?

கொரில்லா தனி சொத்தாகக் கருதப்படுவதால், இந்த விஷயத்தில் தலையிட முடியாத நிலை உள்ளது. ஒரு வயதாக இருக்கும்போது, இந்த கொரில்லாவை ஜெர்மனியில் இருந்து 3 மில்லியன் தாய் பாட்டிற்கு வாங்கியுள்ளனர்.

Published:Updated:
`Bua Noi’

கூண்டுகளே திறக்க நினைத்தாலும், கூண்டுகளைத் திறக்க மனிதர்களுக்கு மனம் வருவதில்லை. வானம் காணாத, சுதந்திரத்தை அனுபவிக்காத அந்த ஜீவன் கூண்டுக்குள் எவ்வளவு அல்லல்படும் என்பதைச் சிந்திக்க மறந்துவிடுகின்றனர். அப்படி ஒரு பரிதாபகரமான நிலையில்தான், 32 ஆண்டுகளாக அடைபட்ட கொரில்லா ஒன்று உள்ளது. இதன் விடுதலைக்காக விலங்குரிமை ஆர்வலர்கள் போராடி வருகின்றனர்.

32 ஆண்டுகள் கூண்டில் அடைப்பு... உலகின் மிகவும் சோகமான கொரில்லாவின் விடுதலை எப்போது?
pixabay

1990-ம் ஆண்டு, தாய்லாந்தின் தலைநகரான பேங்காக்கில், Pata என்ற உயரமான ஷாப்பிங் மாலில் கட்டப்பட்ட மிருகக்காட்சி சாலையில், ஒரு வயதே ஆன ஆண் கொரில்லா கூண்டில் அடைக்கப்பட்டது. `Bua Noi’ என்பது இந்த கொரில்லாவின் பெயர். இதற்கு `சிறிய தாமரை’ என அர்த்தம். சில கலாசாரத்தின் அடிப்படையில் தூய்மை மற்றும் வலிமையின் சின்னமாக இப்பெயர் குறிப்பிடப்படுகிறது.

32 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கேயே அடைபட்டிருக்கும் கொரில்லா, தன்னுடைய இறுதிக் காலத்திலாவது நிம்மதியாக, மற்ற கொரில்லாக்களோடு இருக்க, அதை விடுவிக்குமாறு 2015-ம் ஆண்டிலிருந்து பீட்டா அமைப்பு போராடி வருகிறது. அதோடு இந்த கொரில்லா உலகின் மிகவும் சோகமான இடங்களில் ஒன்றான இவ்விடத்தில் கூண்டில் அகப்பட்டிருப்பதால், கொரில்லாவுக்கு `உலகின் சோகமான கொரில்லா’ என்ற பட்டத்தை பீட்டா அமைப்பு வழங்கியுள்ளது.

பீட்டா
பீட்டா

மிருகக்காட்சி சாலையின் உரிமையாளர் கொரில்லாவை விடுவிக்க 30 மில்லியன் தாய் பாட் (அமெரிக்க டாலர் மதிப்பில் 782,000) கேட்பதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தாய்லாந்தின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் வரவுத் சில்பா - ஆர்ச்சா கூறுகையில், ``Bua Noi கொரில்லா தனி சொத்தாகக் கருதப்படுவதால், இந்த விஷயத்தில் தலையிட முடியாதநிலை உள்ளது. ஒரு வயதாக இருந்தபோது, இந்த கொரில்லா ஜெர்மனியில் இருந்து 3 மில்லியன் தாய் பாட்டிற்கு வாங்கப்பட்டுள்ளது.

கொரில்லாவை விடுவிக்க உரிமையாளர்கள் சொன்ன தொகையைத் திரட்ட, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் அந்த அளவு தொகையைத் திரட்ட முடியவில்லை. அதோடு கொரில்லாவை விற்கவும் அதன் உரிமையாளர் விரும்பவில்லை. அப்படி விற்க ஒப்புக்கொண்டாலும், தொகையை அதிகமாக நிர்ணயிக்கிறார்’’ எனத் தங்களின் இயலாமையை வெளிப்படுத்தியுள்ளார்.

கொரில்லாவின் கண்களில் தெரியும் விரக்திக்கு யாரிடம் பதில் உள்ளது? யார் இங்கே விலங்கு, யார் இங்கே மனிதர்?