Published:Updated:

என் டைரி - 360

என் டைரி - 360

என் டைரி - 360

என் டைரி - 360

Published:Updated:

கட்டுப்பாடுகளால் கரைந்த கனவு!

வீனத்துக்கும் பழமைக்கும் இடையில் சிக்கிக்கொண்ட பெண் நான்!

எங்கள் வீடு மிகவும் கட்டுப் பாடான குடும்பம். அதுவும் பெண் பிள்ளையைப் பொத்திப் பொத்தி வளர்ப்பதாக நினைத்து, வெளியுலகின் வளர்ச்சிகளில் இருந்து என்னை விலக்கியே வைத்திருந்தனர். சிறு வயதில் டியூஷன், பள்ளி தாண்டிச் செல்லும் கட்டுரை, விளையாட்டுப் போட்டிகள், ஆண்டுவிழா நடனம், சுற்றுலா... இவை அனைத்துமே எனக்கு மறுக்கப்பட்டன. வீட்டினரோடு சேர்ந்து பார்க், தியேட்டர் செல்லும் வாய்ப்புகூடக் கிடைக்கவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் டைரி - 360

பெண்கள் பள்ளி, பெண்கள் கல்லூரி, மகளிர் பேருந்து என்றே என்னை கடிவாளமிட்டனர். திறமை இருந்தும், ஆர்வம் இருந்தும் கல்லூரிப் படிப்பைத் தாண்டி, கம்ப்யூட்டர் கோர்ஸ், போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகள் என்று வேறு எந்த கோர்ஸ்களுக்கும் செல்ல எனக்கு அனுமதி இல்லை. 12 வயதில் தெருப் பிள்ளைகள் எல்லாம் வீதியில் விளையாட, நான் மட்டும் வீட்டுக் குள் முடக்கப்பட்டதில் இருந்து எனக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் எல்லாம் பழகி மூளையில் பதிந்துவிட்டன.

இந்நிலையில், கல்லூரி இறுதியாண்டில் கேம்பஸ் இன்டர்வியூவில் எழுத்துத் தேர்வில் செலக்ட் ஆகி நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். டெக்னிகல் அறிவிருந்தும், தோழிகள், நண்பர்கள், வெளியாட்கள் என்று யாரிடமும் பேசிப் பழகாததால் எனக்கு ஏற்பட்ட கம்யூனிகேஷன் சிக்கல், வெளியுலகை முதன் முறையாக தனித்து எதிர்கொண்ட கூச்சம், தயக்கம், 21-ம் நூற்றாண்டின் மாடர்ன் தரிசனத்தை அறியாத என் கண்கள் மற்றும் மனது... இவையெல்லாம் என் ‘பழமை’ சூழ்நிலையைத் தேர்வாளர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட, நிராகரிக்கப்பட்டேன். ‘என்னை வீட்டுக்குள்ளேயே அடைச்சு வளர்த்து, என் எதிர்காலத்தையே பாழாக்கிட்டீங்களே’ என்று வீட்டின ரிடம் நான் குமுற, அவர்களோ ‘உன்னோட படிச்ச புள்ளைகளுக்கு எல்லாம் வேலை கிடைச்சிருச்சு... அப்படி நீ என்னதான் படிச்ச..?’ என்று என்னையே பழி சொல்கிறார்கள்.

எக்ஸ்போஷர், ஆட்டிட்யூட், கம்யூனிகேஷன் ஸ்கில், சோஷியல் பிஹேவியர், எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ் இவற்றில் எல்லாம் என்னை சுழியாக்கி வைத்திருக்கும் அவர்களின் மடமையைச் சொன்னாலும் புரிந்து கொள்வதில்லை. இன்னொரு பக்கம், ஆரம்பச் சம்பளம் 25 ஆயிரம், மெட்ரோபாலிட்டன் சிட்டியில் வேலை, தனியாகச் செல்லும் தைரியம், சுதந்திரம் என என் தோழிகளை எல்லாம் பார்க்கப் பார்க்க, என் தாழ்வு மனப்பான்மை பெருகிக்கொண்டே இருக்கிறது.

இப்போதும், நான் வீட்டில் இருந்தேதான் வேலை தேட வேண்டும், அதுவும் உள்ளூர் வேலைக்கு மட்டுமே அனுமதி, வேலைவாய்ப்புத் திறன் வளர்க்கும் எந்த வகுப்புக்கும் போகக் கூடாது என்று, என்னை கூண்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துகிறது என் குடும்பம். எப்படிப் புரிய வைக்க அவர்களுக்கு? அவர்களின் கட்டுப்பாடுகளால் கரைந்த என் கனவுகளை இனி எப்படி மீட்பது..?

- பெயர் வெளியிட விரும்பாத அவள் வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி - 360

என் டைரி 359-ன் சுருக்கம்

``என் மகனுக்கு பக்கத்து ஊர் பெண்ணை மணமுடித்தேன். திருமணத்துக்குப் பின், மகனுடன் அவள் சந்தோஷமாக வாழவில்லை. இவள் தூரத்து அத்தை ஒருவரின் மகனை விரும்பியிருக்கிறாள். ஆனால், அவன் வீட்டினர் அவனுக்கு வேறு பெண்ணைத் திருமணம் செய்து வைத்துவிட்டனர். அவன் திருமணத்தன்று, தற்கொலை முயற்சி செய்யுமளவு மூர்க்கமாக இருந்திருக்கிறாள். இதுபற்றி தெரியவந்தபோது... நானோ, என் மகனோ அதைக் குற்றமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், என் மருமகளுக்கோ மனம் இன்னும் சீர்படவில்லை. வேலை, வசதி, அழகு என ஒவ்வொரு விஷயத்திலும், அத்தைப் பையனுடன் என் மகனை ஒப்பிட்டு எங்கள் இருவரிடமும் வெளிப்படையாகவே பேசுகிறாள். என் மகனுக்கு அவள் விருப்பத்துக்கு ஏற்ப உடை எடுக்கிறாள்; மேற்படிப்பு படிக்கச் சொல்கிறாள்; நிறைய சம்பாதிக்க, அவனுக்கு வெளிநாட்டு வேலைக்கு ஏற்பாடு செய்கிறாள். இதெல்லாமே தான் நிராகரிக்கப்பட்ட இடத்தில், தன் நிலையை உயர்த்திக் காட்ட வேண்டும் என்ற ஆக்ரோஷத்தில்... தன் அத்தை பையனைவிட என் மகனை வாழ்க்கைப் பந்தயத்தில் முந்தவைக்கும் உந்துதலில் மட்டுமே செய்கிறாள். மேலும், ``எங்க வீட்டு மரியாதைக்கு கட்டுப்பட்டுத்தான் உன்னோட இருக்கேன்னு அவ சொல்லும்போது, அவமானமா இருக்கும்மா!’’ என்று மகன் சொல்வதைக் கேட்கும்போது நிலைகுலைந்து போகிறேன். என் மருமகளைத் திருத்துவது எப்படி?’’

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ` 100

கொஞ்சம் பொறுத்திருங்கள்!

ளம் வயதில், எல்லோர் வாழ்க்கையிலும் காதல் வருவது சகஜமே! படிப்பு, வேலை, வசதி, அழகு போன்றவற்றுக்கு ஆசைப்படுவதும் நியாயமான ஆசைதான். ஆனால், திருமணத்துக்குப் பின்பும் அத்தை பையனை ஒப்பிடுவது, மிகவும் தவறு. நீங்கள் உங்கள் மருமகளுக்கு அறிவுரை கூறுவதைவிட அவளது பெற்றோர் மற்றும் அவருக்கு நெருக்கமான நண்பர்களிடம் கூறுங்கள். அவர்கள் சொன்னால் நிச்சயம் கேட்பார். மேலும், ஒரு குழந்தை பிறந்தால் நிச்சயம் மாறிவிடுவார். யாரும் கெட்டவர்கள் இல்லை; கொஞ்சம் பொறுத்திருங்கள்!

- கே.செந்தில்வடிவு, வேலூர்

அரவணைப்பால் அசத்துங்கள்!

‘`என் மகன் உனக்கு பொருத்தமில்லையென்றால் விட்டுவிடு; அவன் என் மகனாகவே இருந்துவிட்டு போகட்டும். ஆனால், நீ என் வீட்டின் குலவிளக்கு.உனக்கு எந்தக் குறையுமின்றி ஒரு மகளாக பார்த்துக்கொள்ள வேண்டியது எனது கடமை’’ என்று உயர்வாகப் பேசுங்கள். மேலும் மருமகளுக்கும், உங்களுக்குமிடையே பூரண பிடிப்பை ஏற்படுத்த முயற்சியுங்கள். அதற்குப் பிறகு, நீங்கள் எப்படி காய் நகர்த்தினாலும் வெற்றிதான்.

- வி.கீதாஞ்சலி, கதிர்நாயக்கன்பட்டி

இறங்கி வந்தால் இதயம் வசப்படும்!

ம்மா... உங்கள் மகனிடம்... மருமகள் என்ன சொன்னாலும் செய்வதாக உறுதி கூறச் சொல்லுங்கள். அதோடு, ‘உன் காதலனைவிட, நான் எல்லா விதத்திலும் பெரிய ஆள் என்பதை நிரூபிக்க கொஞ்சம் அவகாசம் கொடு’, என்று கேட்கச் சொல்லுங்கள். அன்பாக, அனுசரணையாக பழகி, அவளது இதயத்தை கைப்பற்றும் யுக்தியை சொல்லித் தாருங்கள். இறங்கினால் இரக்கப்படுவதுதானே பெண்..!

- என்.தனலட்சுமி, தஞ்சாவூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism