Published:Updated:

தீப்பற்றி எரிந்த வீடு... உயிரைப் பணயம் வைத்து கேஸ் சிலிண்டர்களைத் தூக்கிவந்த சப் இன்ஸ்பெக்டர்! #HatsOff

கிரேட்டர் நொய்டா காவல்நிலையத்தைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர், தன் உயிரைப் பணயம் வைத்து செய்த தீரச்செயலை அப்பகுதி மக்கள் மட்டுமன்றி சமூக வலைதளங்களிலும் பாராட்டிவருகிறார்கள்.

தீப்பற்றி எரிந்த வீடு... உயிரைப் பணயம் வைத்து கேஸ் சிலிண்டர்களைத் தூக்கிவந்த சப் இன்ஸ்பெக்டர்! #HatsOff

கிரேட்டர் நொய்டாவின் பிலாஸ்புர் பகுதியிலுள்ள ஒரு வீடு தீப்பற்றி எரிவதாக நொய்டா போலீஸாருக்குத் தகவல் வந்திருக்கிறது. உடனே அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டர் அகிலேஷ்குமார் தீட்சித் தீப்பிடித்த பகுதிக்கு விரைந்து சென்றுள்ளார். அங்கே எரிந்துகொண்டிருந்த வீட்டில் வசித்துவந்த பூல் சிங் மற்றும் கீதா இருவரும் பெரும்பதற்றத்தோடு செய்வதறியாது திகைத்து நின்றிருக்கிறார்கள். வீடு தீப்பிடித்து எரிவது மட்டுமே அவர்களின் பதற்றத்துக்குக் காரணமல்ல. வீட்டினுள்ளே முழுமையாக நிரப்பப்பட்ட இரண்டு கேஸ் சிலிண்டர்கள் இருப்பதாகவும், தீயின் வெப்பத்தால் அவை வெடித்தால் அப்பகுதியிலுள்ள வீடுகளனைத்தும் பெருத்த சேதமடையக்கூடும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

தீப்பற்றி எரிந்த வீடு... உயிரைப் பணயம் வைத்து கேஸ் சிலிண்டர்களைத் தூக்கிவந்த சப் இன்ஸ்பெக்டர்! #HatsOff

சூழலைப் புரிந்துகொண்ட சப் இன்ஸ்பெக்டர் அகிலேஷ்குமார் சற்றும் தாமதிக்காமல் பக்கத்திலிருந்த வீட்டில் ஒரு போர்வையை வாங்கித் தன் உடம்பு முழுக்க போர்த்திக்கொண்டு எரியும் வீட்டினுள் புகுந்தார். வீட்டின் சமையல்கட்டில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கேஸ் சிலிண்டர்களையும் ஒன்றன் பின் ஒன்றாகக் கையில் தூக்கி வந்தார். அதன் பின்னர் எரிந்துகொண்டிருந்த தீயைப் போராடி அணைத்தார்கள். உயிரையும் துச்சமாக நினைத்து கேஸ் சிலிண்டர்களைத் தூக்கிவந்து பெரிய சேதத்தைத் தவிர்த்த சப் இன்ஸ்பெக்டரின் வீரச்செயலை அப்பகுதியிலுள்ள மக்கள் பாராட்டினார்கள். நொய்டா போலீஸாரும் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் இந்தச் சம்பவத்தைப் பெருமையுடன் பகிர்ந்துள்ளார்கள்.